Link copied!
Sign in / Sign up
11
Shares

கருவறையில் குழந்தை எப்படி தோன்றுகிறது?

baby inside the womb

தாயின் கர்ப்பத்தில் இருக்கும் சிசு, உருவான அக்கணம் முதல் வளர்ச்சி பாதையில் கம்பிரமாக, ஒன்பதாம் மாதம் வரை கருவறைக்குள் நடைபோட்டு வருகிறது.. அக்கரு குழந்தையாய் பிறந்தபின் அதன் வளர்ச்சியை நம்மால் கண்கூட காண இயலும்; ஆனால், கருவிற்குள் குழந்தை உருவாகி, வளரும் விதத்தை நம்மால் காண முடிவதில்லை. அக்குறையை போக்கவே, இந்த பதிப்பு; இதில் குழந்தை உருவான கணம் முதன் முதலில் எந்த உறுப்பு உருவாகிறது, எப்படி வளர்கிறது என்று இப்பதிப்பில் பார்த்தறிவோம்..!!

கரு உருவான நான்கு நாட்களுக்கு பின்...!!

zygote pic

ஆண் மற்றும் பெண் கருமுட்டைகள் இணைந்து சைகோட்டாக மாறி உள்ளது; இந்த சைகோட் தான் உங்கள் குழந்தையாக மாறப்போகிறது. இந்நிலையில் குழந்தையின் சைகோட்டில் DNA தேர்வு செய்யப்பட்டு, குழந்தை ஆணா? இல்லை பெண்ணா? என நிர்ணயிக்கப்பட்டு குழந்தையின் வளர்ச்சி ஆரம்பிக்கத் தொடங்குகிறது.

கர்ப்பத்தின் 5-6 வாரங்களுக்கு பின்னர்..

baby in 5-6th week of development

குழந்தையின் கண், காது, மூக்கு, வாய் என அனைத்தும் நான்கில் ஒரு பங்கு வளர்ந்திருக்கும்; இந்நிலையில் குழந்தையின் இதயத்துடிப்பு நிமிடத்திற்கு 100 முறையாக இருக்கும்.

கர்ப்பத்தின் ஏழாவது வாரம்..

baby in 7th week of development

10 வார கர்ப்பகாலம்..

baby moving legs inside the womb

இவ்வாரத்தில் குழந்தையின் சிறுநீரகம், மூளை என அனைத்து உடல் பாகங்களும் வேலை செய்யத் தொடங்கும். மேலும் குழந்தையால் தன் கை மற்றும் கால்களை திருப்ப இயலும்..

12வது வார கர்ப்ப காலம்..

baby in 12th week of development

கர்ப்பத்தின் இந்த வாரத்தில், குழந்தை அசைய மற்றும் அன்னையின் பேச்சிற்கு அசைந்து பதிலளிக்க தொடங்கும்..!

கர்ப்பத்தின் 16வது வாரம்..!!

pregnancy 16th week

இந்த நிலையில் குழந்தையின் உடலிலுள்ள நகம், முடி என அனைத்து பாகங்களும் நன்கு வளரத் தொடங்கும். மேலும் ஒவ்வொரு நாளும் 23 லிட்டர் இரத்தம் உடலில் பாயத் தொடங்கும்..!

குழந்தை கை சூப்பத் தொடங்கும் 18-19 வார கர்ப்பகாலம்..

விரல் சூப்பும் குழந்தை

இந்த காலகட்டத்தில் குழந்தையின் கையில் கை ரேகைகள் உருவாகத் தொடங்கும்..!

6 மாத கர்ப்பகாலத்தில்..

6 மாதத்தில் கருவின் வளர்ச்சி

குழந்தையால், இந்த சமயத்தில் நன்கு கேட்க இயலும் மற்றும் அதன் இதயத்துடிப்பு அதிகரிக்கும்; மேலும் குழந்தை விக்கல் எடுத்தால், தாயின் வயிற்றில் துளை ஏற்பட்டது போன்ற உணர்வு, தாய்க்கு ஏற்படும். இது மிக நுணுக்கமாக கவனித்தால் புலப்படும்..!

6-7 மாத கர்ப்ப காலம்...

6-7 மாத கருவின் வளர்ச்சி

கர்ப்பத்தின் 8வது மாதம்..!!

கருவின் எட்டாம் மாத வளர்ச்சி

இந்த காலகட்டத்தில் குழந்தை தன் தாயின் குரலை, தனித்து உணரத் தொடங்கும்; குழந்தை பிங்க் நிறத்தில் இருக்கும். இச்சமயத்தில் குழந்தை அதிக  கொழுப்பு சத்துக்களை எடுத்துக் கொள்ள ஆரம்பிக்கும்; ஏனெனில், இது குழந்தையின் உடல் வெப்பநிலையை சமநிலையில் வைக்க உதவும்..!

உங்களுள் வளரும் குழந்தையின் அதிசய, அற்புத வளர்ச்சியை பற்றி அறிந்த நீங்கள், மற்ற தாயாரும் இந்த அற்புதங்களை பற்றி அறிய பதிப்பினை பகிரவும்..!! 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon