Link copied!
Sign in / Sign up
4
Shares

நீங்கள் கர்ப்பமா? எளியமுறையில் தெரிந்துக்கொள்ள ஒரு சில வீட்டு குறிப்புகள்...

ஒரு பெண் அதிகம் எதிர்ப்பார்ப்புடன் இருக்கக்கூடிய அழகிய தருணங்களுள் ஒன்று தான் இந்த கர்ப்பம் என்பது. திருமணம் ஆன கொஞ்ச நாட்களில் இந்த எதிர்ப்பார்ப்பு என்பது தானாகவே ஒரு பெண்ணின் மனதில் தொற்றிக்கொள்ள, ஒவ்வாமை காரணமாக வாந்தி எடுத்தாலும், அந்த நாளை எதிர்ப்பார்த்து அமைதியாக காத்திருப்பாள். எனினும், எதிர்ப்பார்ப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்க, எப்போது நான் கர்ப்பம் தரிப்பேன் எனும் ஏக்கமும் அவளுக்குள் குடிக் கொள்கிறது. ஒருவேளை கர்ப்பமாக இருப்பதுபோல் அவளுக்கு தோன்றினாலும், உடனடியாக மருத்துவரை சென்று ஆலோசித்து தெரிந்துக்கொள்வாள். நீங்கள் கர்ப்பமாக இருப்பின், மருத்துவரின் சொல் கேட்டு மிகவும் மகிழக்கூடும். ஆனால், மருத்துவரை சென்று பார்த்து இது கர்ப்பமல்ல என அவர் கூறினால் அதைவிட பெண்ணுக்கு ஒரு பெரிய ஏமாற்றம் உண்டா என்ன? கண்டிப்பாக இல்லை, அதனால் வீட்டிலிருந்தே ஒருசில வழிமுறைகளை செய்வதன் மூலம் நீங்கள் கர்ப்பமா? இல்லையா? என்பதை தெரிந்துக்கொள்ளலாம். அதை பற்றிய பயனுள்ள அழகிய பதிவு தான் இது.

ப்ளீச்:

1. சிறுநீரை ஒரு குவளையில் எடுத்துக்கொள்ளுங்கள்.

2. அத்துடன் பிளீச்சிங்க் பவுடரை நன்றாக கலந்துக்கொள்ளுங்கள். கட்டியாக இருத்தல் கூடாது.

3. நுரையாக வந்தால் நீங்கள் கர்ப்பமாக இருக்க அதிக வாய்ப்பிருக்கிறது

4. ஒருவேளை நுரை வராவிட்டால் கர்ப்பம் தரிக்க மீண்டும் முயற்சி செய்யுங்கள்.

குறிப்பு: 

பிளீச்சிங்க் பவுடரின் தன்மை மோசமானது என்பதால் அருகில் இருக்காதீர்கள். அல்லது வேறு யாரிடமாவது கொடுத்து செய்ய சொல்லுங்கள். அத்துடன் நீங்கள் இந்த பிளீச்சிங்க் பவுடரை நுகர்ந்தால் குமட்டல் மற்றும் தலை சுற்றுதல் பிரச்சனையும் ஏற்படக்கூடும். அதேபோல் கைகளை சோப் போட்டு கழுவ மறந்துவிடாதீர்கள்.

இந்த முறை கர்ப்பிணிகளுக்கு மிகவும் ஏற்றவகையில் அமைந்து காணப்படுகிறது. அத்துடன் மற்ற பரிசோதனைகளை காட்டிலும் இது மிகவும் விரைவில் பலனை தரக்கூடியதாக அமைகிறது.

சர்க்கரை:

மேல் காணும் சோதனை பயத்தை தருமெனில் சர்க்கரையை கொண்டு மிக எளிதில் நீங்கள் கர்ப்பமா? இல்லையா? என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.

1. ஒரு குவளையில் 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரையை எடுத்துக்கொள்ளுங்கள்.

2. அத்துடன் தோராயமாக 1 டேபிள் ஸ்பூன் சிறுநீரை சேர்த்து கொள்ளுங்கள்.

3. இப்போது இரண்டும் சேர்ந்து எந்த நிலையில் இருக்கிறது என்பதை பாருங்கள்.

4. ஒருவேளை சர்க்கரை குவியல்களாக உருவெடுத்து கரையாமல் இருந்தால் நீங்கள் கர்ப்பம்.

5. சர்க்கரை உடனே கரைந்துவிட்டால் நீங்கள் கர்ப்பமாக இருக்க வாய்ப்பு குறைவு.

6. இதற்கு காரணம்... HCG ஹார்மோன்கள் சர்க்கரையை கரைய செய்யாது. இந்த ஹார்மோன்கள் ஒரு பெண் கருத்தரிப்பதில் முக்கிய பங்கை வகிக்கிறது.

டூத் பேஸ்ட்:

நீங்கள் கர்ப்பமா? இல்லையா? என்பதை உங்கள் வீட்டு டூத் பேஸ்ட் கூட சொல்லும் தெரியுமா!

1. ஒரு குவளையில் 2 டேபிள் ஸ்பூன் வெள்ளை டூத் பேஸ்டை எடுத்துக்கொள்ளுங்கள்.

2. அத்துடன் சிறுநீரை சேர்த்து கொள்ளுங்கள்.

3. ஒருவேளை டூத் பேஸ்ட் நிறம் மாறினால் நீங்கள் கர்ப்பமாக இருக்க அதிக வாய்ப்பிருக்கிறது. 

4. அதாவது நீல நிறத்தில் அல்லது சகதியை போல் மாறும்.

வினிகர்:

இப்போது வினிகரை கொண்டு நீங்கள் கர்ப்பமா? இல்லையா? என்பதை தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.

1. ஒரு பிளாஸ்டிக் குவளையில் கொஞ்சம் வினிகரை எடுத்துக்கொள்ளுங்கள்.

2. அத்துடன் உங்கள் சிறுநீரை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

3. நீங்கள் கலக்கும் போது முட்டை வெளியிடுவதை ஒரு சிலர் பார்க்கலாம். அத்துடன் என்ன நிறத்தில் இருக்கிறது என்பதையும் பாருங்கள்.

4. ஒருவேளை வினிகரின் நிறம் மாறினால் நீங்கள் கர்ப்பமாக இருக்க அதிக வாய்ப்பிருக்கிறது.

வீட்டு சோப்:

1. உங்கள் கையில் ஒரு கட்டி சோப்பை எடுத்து கொள்ளுங்கள்.

2. அந்த சோப்பில் சிறுநீரை படும்படி செய்யுங்கள்.

3. ஒருவேளை நுரை வெளியானால் நீங்கள் கர்ப்பமாக இருக்க வாய்ப்பிருக்கிறது.

4. நுரை அற்று இருந்தால் கர்ப்பம் தரிக்க மீண்டும் முயற்சி செய்யவும்.

ஒரு பெண் கர்ப்பமா? இல்லையா? என்பதை ஓரளவுக்கு வீட்டில் தெரிந்துக்கொண்டு அதன்பின்னர் மருத்துவரிடம் செல்வது தேவையற்ற பதட்டத்தை குறைக்கும். மேல் காணும் அனைத்து முறைகளும் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைய, மருத்துவரிடம் சென்று நீங்கள் பரிசோதனை செய்வதன் மூலம் இது எவ்வளவு உண்மை என்பதை உங்களால் உணரவும் முடியும். அத்துடன் இந்த இயற்கை வீட்டு முறையை செய்து பார்க்க நீங்கள் பொருளின் அருகிலிருக்க வேண்டிய அவசியமில்லை. இரு திரவம் ஏற்படுத்தும் வேதிவினையின் போது நீங்கள் பக்கத்தில் இருக்காதீர்கள். உங்கள் சிறுநீரை கொடுத்து கணவன் அல்லது வீட்டில் உள்ளவர்களை கொண்டு சோதனை செய்வது நல்லது.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon