Link copied!
Sign in / Sign up
5
Shares

மருந்து, மாத்திரையின்றி குழந்தைகள் காய்ச்சலை குணப்படுத்துவது எப்படி?

குழந்தைகள் நன்றாக சிரித்துக்கொண்டிருக்க திடீரென அழ என்ன என தெரியாமல் தாய் பதறுவாள். ஆம், பெரியவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் என்ன செய்கிறது என்று அவர்களால் கூற முடியும். ஆனால், குழந்தைகள் என்ன செய்வார்கள் பாவம். அதுவும் இரவு நேரத்தில் அழும் குழந்தையை கண்டு என்ன ஆச்சோ என ஏங்கும் தாய் எத்தனையோ பேர். அப்படி இருக்க, மருத்துவமனைக்கு எப்படி அழைத்து செல்வது? எந்த மருந்தை கொடுப்பது போன்ற பல கேள்விகள் அவள் மனதில் எழ, ஒருவித குழப்பத்தையும் சேர்த்து தருகிறது. அதனால் இப்போது மருந்து, மாத்திரையின்றி குழந்தையின் காய்ச்சலை சரி செய்வது எப்படி என்பதை படித்து என்னுடன் சேர்ந்து நீங்களும் பயனடையலாமே. 

1. நறுக்கிய உருளைக்கிழங்கு:

ஆம், நீங்கள் படித்தது சரி தான். இப்போது உருளைக்கிழங்கை கொண்டு குழந்தையின் காய்ச்சலை எப்படி விரட்டுவது என்பதை தான் நாம் பார்க்க போகிறோம். ஒரு சிறிய உருளைக்கிழங்கை எடுத்து உரித்து நறுக்கி கொள்ளுங்கள். இந்த உருளை துண்டை உங்கள் குழந்தை சாக்ஸ் உள்ளே வைத்துவிடுங்கள். சற்று நேரத்தில் குழந்தையின் காய்ச்சல் குறைந்திருப்பதை நீங்களே உணரலாம்.

2. ஈரமான ஆடை மருத்துவம்:

உங்கள் குழந்தைக்கு காய்ச்சல் அடிக்கும்போது ஒரு சுத்தமான துணியை எடுத்து இளஞ்சூட்டோடு இருக்கும் நீரில் நனைத்து கொள்ளுங்கள். அதன்பின்னர் அந்த துணியை நன்றாக பிழிந்துவிட்டு குழந்தை தூங்கும்போது அவர்கள் தலையில் அந்த துணியை வைத்திடுங்கள். காய்ச்சல் குறைவதை நீங்களே உணர்வீர்கள்.

3. தண்ணீர் மற்றும் பிராந்தி:

காய்ச்சல் அடிக்கும்போது பிராந்தி பரிந்துரை செய்யப்பட்டு வந்தது. ஆனால், இப்போது இது குறைந்திருக்க, இருப்பினும் பிராந்திக்கு காய்ச்சலை விரட்டும் குணமிருப்பதை நீங்கள் அறிவீரா? ஆம், ஒரு குவளையில் தண்ணீர் மற்றும் பிராந்தியை சரி சம அளவில் எடுத்துக்கொண்டு ஒரு துணியை அதில் முக்கி எடுக்க வேண்டும். அதன்பின்னர் நீரை பிழிந்துவிட்டு குழந்தையின் சாக்ஸ் பகுதியில் வைத்து எடுக்கலாம். இதனால் அவர்களின் காய்ச்சல் குறைகிறது.

4. மந்தமான நீர் குளியல்:

ஒரு சில சமயத்தில் மந்தமான நீரில் குளிப்பதன் மூலமாக காய்ச்சல் குறைகிறது. குழந்தைகளுக்கு அடிக்கும் காய்ச்சலால் அவர்கள் மனம் நிலைக்குலைந்து போகிறது. எனவே, மந்தமான நீரில் அவர்கள் குளிப்பதன் மூலம் ஒருவித ஓய்வையும், தூக்கத்தையும் அவர்கள் பெறுகின்றனர். காய்ச்சல் இருக்கும்போது குளிர்ந்த நீரில் குழந்தைகளை குளிப்பாட்டுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இல்லையேல், குளிர்ந்த நீரால் வெப்ப நிலை அதிகரித்து காண காய்ச்சலும் அதிகரிக்கக்கூடும். 

5. சத்துள்ள உணவு:

குழந்தைகளுக்கு ப்ரெஷ்ஷான பழங்கள் அல்லது சூப் வகைகளை நீங்கள் தரலாம். இதனால் அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது. அதேபோல் குழந்தைகளுக்கு எண்ணெய் மற்றும் கொழுப்பு உணவை கொடுப்பதை நீங்கள் தவிர்க்க வேண்டும்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon