Link copied!
Sign in / Sign up
4
Shares

கால் விரலை வைத்து இதய ஆரோக்கியத்தை சொல்ல முடியுமா?எப்படி?


இதய ஆரோக்கியம்! இன்றைய நாளில் அனைவராலும் பேசப்படும் ஒரு தலைப்பு. காரணம், வயது குறைவான பிள்ளைகளைக்கூட இதய நோய் விட்டுவைப்பதில்லை. இதற்கு அவர்களின் உணவு பழக்கம் தான் காரணம். இன்று கண்ணுக்கு மிளிரும் பொருளை வாங்கி சாப்பிட நாம் ஆரம்பித்ததன் விளைவு, காய்கறியும் அந்த பட்டியலில் இடம் பிடித்த கொடுமை தான். கண்ணாடிக்கு உள்ளே வைக்கப்பட்ட உணவை ஏதோ கண்காட்சி போல் பார்க்கும் நம் மனம், வாங்கவும் விலை பேசுகிறது. இது என்னஅவலம்!

அப்பேற்பட்ட இதய ஆரோக்கியம் என்பது நம் அன்றாட வாழ்வில் மிகவும் அவசியமாக அமைய, எப்படி தெரிந்துகொள்வது முன்கூட்டியே இந்த இதய பிரச்சனையை என நாம் இப்போது பார்க்கலாம்.

கால்களை மடக்காமல் கண்டுபிடிப்பது எப்படி?

ஒரு புதிய ஆய்வின் உண்மைப்படி,  கால்களை மடக்காமல் கைகளால் கால் விரல்களை யார் தொடுகின்றனரோ., அவர்களுக்கு இதயம் ஆரோக்கியமாக இருக்கிறது என அர்த்தமாகும்.

என்ன செய்ய வேண்டும்?

1. முதலில் தரையில் அமர்ந்துக்கொண்டு கால்களை நீட்டிக்கொள்ளுங்கள். 

2. பின் கையால் கால்விரல்களை தொட முயற்சி செய்யுங்கள். 

3. அப்படி உங்களால் தொட முடிந்தால் இதயம் ஆரோக்கியமாக இருக்கிறது என அர்த்தமாகும்.

இந்த கோட்பாட்டை உறுதிப்படுத்த அமெரிக்காவில் 520 பேர் கலந்துக்கொண்டு கால்களை மடக்காமல் கையால் கால்விரல்களை தொட முயன்றனர்.

இந்த முயற்சியில் ஒவ்வொருவரின் இரத்தம் அழுத்தம் கணக்கிடப்பட, தமனி மற்றும் இதயத்தின் செயல்பாடுகளும் கண்காணிக்கப்பட்டது.

அதேபோல் ஆய்வின் முடிவில் இதய நோயாளிகளால் தன் கால்விரல்களை மடக்காமல் தொட முடியாமல் போனது நிரூபணமானது.

இதனால் யார் ஒருவரால் கால்களை மடக்காமல் கைகளால் கால்விரலை தொட முடிகிறதோ அவர்கள் சிறந்த இதய நலத்துடன் இருக்கிறார்கள் என்பது கண்டறியப்பட்டது. உங்கள் உடலில் மிகவும் முக்கியமான பாகம் இதயம் தான். எனவே அந்த இதயம் எனும் உங்கள் காதலி விரும்புபவற்றை மட்டும் நீங்கள் செய்யலாமே. தேவையற்ற நொறுக்கி தீனிகள், பானங்கள் போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுவதை நீங்கள் தவிர்க்கலாமே.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon