Link copied!
Sign in / Sign up
31
Shares

சத்தான பாதாம் கேழ்வரகு கஞ்சி..!!

குழந்தைகள் மற்றும் பெரியோர்களுக்கு ஆரோக்கியமும், சக்தியும் அளிக்கும் உணவுகளில் சில கேழ்வரகும் பாதமும் ஆகும்.  கேழ்வரகு உடலுக்கு, கொழுப்பற்ற தூய சக்தியை தருகிறது; பாதம் நினைவாற்றலை அதிகப்படுத்தவும் மற்ற உடற்செயலிய மாற்றங்களுக்கும் மிக நல்லது. இவை இரண்டையும் சேர்த்து, தயாரிக்கப்பட்ட கஞ்சியை, காலை வேளையில் குழந்தைக்கு அளிப்பதால், குழந்தை நினைவாற்றலையும், சக்தியையும் தரும்..!

எனவே, குழந்தைகளுக்கு சக்தி தரும் சத்தான பாதாம் கேழ்வரகு கஞ்சி தயாரிப்பது எப்படி என்று இப்பதிப்பில் காணலாம்...

தேவையான பொருட்கள்

கேழ்வரகு - 200 கிராம், பாதாம் பருப்பு - 50 கிராம், தண்ணீர் - 4 டம்ளர், மோர் - 2 டம்ளர், சின்ன வெங்காயம் - 6, சீரகம் - ஒரு தேக்கரண்டி, கறிவேப்பிலை - தேவையான அளவு, பச்சை மிளகாய் - 3 (தேவையென்றால்), கடுகு - ஒரு தேக்கரண்டி, நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி, உப்பு, கொத்தமல்லித்தழை - தேவையான அளவு.

செய்முறை

1. வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

2. கேழ்வரகினை நீரில் ஊறவைத்து, மெல்லிய துணியில் முளை கட்டவும்.

3. முளை கட்டிய கேழ்வரகை கடாயில் வறுத்து, மிக்ஸியில் அரைத்துக் கெட்டியாக இருக்கும் அளவுக்குத் தண்ணீர் சேர்க்கவும்.

4. இந்த கேழ்வரகு கலவையை அடுப்பில் வைத்து கைவிடால் கிளறி கொண்டே இருக்கவும்.

5. அடுத்து அதில் பாதாமை மிக்ஸியில் போட்டு அரைத்துச் சேர்க்கவும்.

6. நன்றாக கொதித்து கேழ்வரகு வெந்தவுடன் அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.

7. கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் உரித்த சின்ன வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, கடுகு, சீரகம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளித்து கேழ்வரகில் கொட்டவும்.

8. அடுத்து அதில் மோர், கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்றாக கலந்து இறக்கி பரிமாறவும்.

அவ்வளவே, உடலுக்கு குளிர்ச்சி தரும், போதிய அளவு சக்தி தந்து ஆரோக்கியம் அளிக்கும் பாதாம் கேழ்வரகு கஞ்சி தயார். பதிப்பை பயனுள்ளதாய் உணர்ந்தால், மற்றோர்க்கு பயன்பட பகிர்வீராக…!

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon