Link copied!
Sign in / Sign up
7
Shares

ஆரோக்கியத்தை தரும் கேரட் லஸ்ஸி செய்வது எப்படி?

குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை தரும் முதன்மையான உணவுகளுள் ஒன்று கேரட். ஆம், உங்கள் குழந்தைக்கு தேவையான வைட்டமின் - ஏ, வைட்டமின் - கே, வைட்டமின் - சி, வைட்டமின் - பி யும் கேரட்டில் இருப்பதால் பச்சையாகவே கேரட்டை சாப்பிட குழந்தைகளை நீங்கள் பழக்கலாம். இதனால் கண் குறைபாடு பிரச்சனையை போக்க கேரட் உதவ, உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தையும் தருகிறது. இப்படி நம்முடைய அன்றாட உணவில் நாம் சேர்த்துக்கொள்ளும் கேரட்டில் ஒரு லஸ்ஸி செய்தால் எப்படி இருக்கும். வாங்க பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்:

கெட்டித்தயிர் - 1 கப்

கேரட் - 1

ஐஸ்கட்டிகள் - சிறிது

சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி

மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி

கருப்பு உப்பு - 1 சிட்டிகை

பச்சை மிளகாய் - 1

உப்பு தேவையான அளவு 

செய்முறை நேரம்: 20

எத்தனை பேர் உண்ணலாம் - 2 

செய்முறை:

1. கேரட்டை தோல் சீவி, துண்டுகளாக்கி, 1/4 கப் நீர் சேர்த்து நன்கு வேகவைத்து கொள்ளவும். 

2. சூடு ஆறிய கேரட்டுடன் பச்சை மிளகாய், உப்பு, கருப்பு உப்பு, சீரகத்தூள், மிளகுத்தூள் சேர்த்து மைய அரைத்து கொள்ள வேண்டும். 

3. அதனுடன் தயிர் மற்றும் ஐஸ்கட்டிகள் சேர்த்து மீண்டும் ஒரு அரை, அரைத்து டம்ளரில் ஊற்றினால் சுவையான கேரட் லஸ்ஸி ரெடி.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon