Link copied!
Sign in / Sign up
8
Shares

ஹெட்போனை பெண்கள் அதிக நேரம் பயன்படுத்துவதால் வரும் பாதிப்புகள்!

இப்பொழுது பெண்கள் அனைவரும் நவயுக நாயகிகள் ஆகிவருவதால், பற்பல தொழில் நுட்பங்களை பயன்படுத்த தொடங்கிவிட்டனர்; அன்று போல் பெண்கள் ஏதும் அறியாத பணிப்பெண்ணாய் இருந்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. பெண்கள் எல்லா சாதனங்களையும் பயன்படுத்துவது மிகவும் நல்ல விஷயமே! ஆனால், எந்தெந்த சாதனங்கள் அவர்களை பாதிக்கும், என அறிந்து பயன்படுத்துவது நல்லது. அவ்வகையில், ஹெட்போன் பெண்களை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்து இப்பதிப்பில் படித்தறியுங்கள்! 

1. ஹெட்போனை தொடர்ச்சியாக பயன்படுத்தினால், உங்களின் சிந்திக்கும் திறன் மற்றும் ஞாபக சக்தி குறையும்.

2. அலைபேசியுடன் இணைத்த ஹெட்போனை நேரடியாகப் பயன்படுத்துவதால், அதிலிருந்து வரும் கதிர்வீச்சுகள் உங்கள் மூளையைப் பாதிக்கலாம். 

3. எந்நேரமும் ஹெட்போன் பயன்படுத்திக் கொண்டே இருப்பவர்களுக்கு காதின் கேட்கும் திறனில் குறைபாடு ஏற்படும்; மிக அதிகமாக ஹெட்போன் பயன்படுத்துபவர்களுக்கு ‘சென்ஸரி நியூரல் லாஸ்‘ எனும் பாதிப்பு மற்றும் ‘ஆடிட்டரி ஹாலுசினேஷன்‘  எனும் மனநோய் ஏற்படும். இதனால் காதிற்குள் இரைச்சல் கேட்கும், மேலும் இது தலைவலி, ஒவ்வாமை, தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். 

4. சாலையில் வாகனம் ஓட்டும் போது, இதை நீங்கள் தவிர்த்தல் அவசியம்; ஏனெனில், சாலை விபத்துகளில் பற்பல விபத்துகள் ஹெட்போனில் கேட்டுக்கொண்டே வாகனம் ஓட்டுவதால் தான் நடக்கிறது.

5. தொடர்ந்து ஹெட்போன் பயன்படுத்தும் போது, காதிலிருந்து வெளிவரும் அழுக்கானது காதுகளின் உட்பகுதியிலேயே தங்கிவிடும்; நாளடைவில் நாளடைவில் அரிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.

6. ஹெட்போனில் பாட்டுக்கேட்கும் போது, வெளிப்படும் அதிக இசை அதிர்வினால் செவி மடல் பாதிப்படைந்து, காது வலி வரும்.

7. அதிகமாக ஹெட்போன் பயன்படுத்தினால், மன ரீதியான பாதிப்புகள் ஏற்படுவதாகவும், நிச்சயம் செவிட்டு மெஷினின் அவசியம் ஏற்படும் எனவும் மருத்துவ ஆலோசகர்கள் கூறுகிறார்கள்.

8. நடைப்பயிற்சி, வாகனம் ஓட்டுதல் என எப்போதும் ஹெட்போனில் கேட்டுக்கொண்டே இருப்பதால், வேலையில் கவனம் இல்லாமல், வேலையை மெதுவாக அல்லது தவறாக செய்ய நேரிடும். இதனால் சில சமயங்களில் பிரச்சனைகளும், கால விரயமும், விபத்துகளும் ஏற்படுகிறது. 

9. அதிகம் ஹெட்போனில் கேட்டுக்கொண்டே இருந்தால், சுற்றி இருப்பவர்கள் உங்களை விட்டு பிரிந்து சென்று, நீங்கள் தனிமைப்பட வேண்டிய நிலை ஏற்படலாம்; ஆகையால், அவ்வப்போது அக்கம் பக்கத்தாருடன் பேசிப் பழகுவது நல்லது.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon