Link copied!
Sign in / Sign up
3
Shares

பிரசவத்திற்கு முன்பு அந்தரங்க இடத்தில் வளரும் முடியை ஏன் நீக்க வேண்டும்?

கர்ப்ப காலம் என்பது மிகவும் பாதுகாப்பாக நாம் இருக்க வேண்டிய ஒரு காலமாகும். இந்த நேரங்களில் உடல் மற்றும் மனதளவில் ஒருவர் மிகவும் கவனமாக இருக்க, எதை செய்ய வேண்டும்? செய்யக்கூடாது? என்பதிலும் தெளிவுடன் இருப்பது அவசியம். அப்படி கர்ப்பிணி செய்யும் விஷயங்களில் ஒன்று பிரசவத்திற்கு முன்பு அந்தரங்க இடங்களில் வளரும் முடியை நீக்குவதாகும். அதை பற்றிய ஒரு சில தகவலை தெரிந்துக்கொள்வோமா!

எதனால் பொது இடத்தில் வளரும் முடியை நீக்க வேண்டும்?

1. பிறக்க போகும் குழந்தைக்கு சுகாதார வாழ்வை அமைத்து தருவதற்காக

2. தொற்றுக்கள் ஏற்படாமல் தவிர்ப்பதற்காக. அதாவது, குழந்தை பிறப்பு என்பது பனிக்குடம் உடைய பிறப்புறுப்பு வழியாக குழந்தை வெளியேறும் ஒரு அழகிய தருணமாகும். இந்த தருணத்தில் முடி அகற்றப்படாமல் இருக்குமெனில், தேவையற்ற தொற்றை உங்களுக்கும், உங்கள் குழந்தைக்கும் ஏற்படுத்தக்கூடும்.

3. பிறக்கும் குழந்தைக்கான வழியை எளிதாக்க முடி அகற்ற வேண்டியது அவசியமாகும்.

4. குறிப்பாக சிசேரியனின் போது உதவுகிறது.

பொதுவாக பிரசவ பெண்களுக்கு செவிலியர்கள் இந்த வேலையை செய்து உதவுவார்கள். ஆனால், பொது இடங்களில் வளரும் முடியை இன்னொருவர் நீக்கும்போது கர்ப்பிணிகளுக்கு இதனால் கூச்சத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே, நீங்கள் முன்கூட்டியே நீங்களாக முடியை நீக்கிக்கொள்வது நல்லது.

எப்போது இது தேவை?

உங்களுக்கு பிரசவ தேதி சொல்லப்பட்ட நாளிலிருந்து ஏழு நாட்கள் முன்பு இதை செய்வது நல்லது. அது சுகப்பிரசவமாக இருந்தாலும் சரி. சிசேரியனாக இருந்தாலும் சரி. இதனால் தேவையற்ற தொற்று தவிர்க்கப்பட, பாக்டீரியாக்கள் ஈர்ப்பதும் தடுக்கப்படும். 

பொது இடங்களில் வளரும் முடியை நீக்குவது பற்றி விவாதமே நடத்தப்பட, பல மருத்துவமனைகளில் முடியை நீக்கவே பரிந்துரை செய்கின்றனர். பொதுஇடங்களில் வளரும் முடியை நீக்குவதால் உடல் எடை சம்பந்தப்பட்ட விஷயங்களோடு சில நன்மை தீமைகளும் காணப்படுகிறது. அது என்ன பார்க்கலாமா?

நன்மைகள்:

1. தொற்று நோய் உண்டாகாமல் தடுக்கும்.

2. முடியிலிருந்து குழந்தைக்கு ஏற்படக்கூடிய தொற்று தடுக்கப்படுகிறது.

3. வியர்வை உண்டாகாமல் உங்கள் உடலை காக்கும்.

4. பிரசவத்திற்கு பின்பு வெளியாகும் இரத்தம், முடியில் படாமல் இருப்பதால் சுத்தம் செய்ய வசதியாக இருக்கிறது.

தீமைகள்:

1. முறையாக முடியை நீக்காவிட்டால் சுகாதார பிரச்சனை உண்டாகும்.

2. முடி மீண்டும் வளரும்போது அரிப்புடன் கூடிய எரிச்சல் ஏற்படும்.

3. முடியை முறையாக நீக்காவிட்டால், கரடுமுரடாக முடி முளைப்பதோடு வீக்கத்தையும் ஏற்படுத்தக்கூடும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon