Link copied!
Sign in / Sign up
22
Shares

கோதுமை அல்வா செய்வது எப்படி??

குழந்தைகளுக்கு இனிப்பு என்றாலே கொள்ளை பிரியம்; அவர்களுக்கு இனிப்பான சுவையான உணவை வழங்க, பெற்றோர்கள் கடைகளில் விற்கும் சாக்லேட் மற்றும் இனிப்பு வகைகளை வாங்கி அளிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்; அந்த வழக்கத்தை மாற்றி குழந்தைகளுக்கு பிடித்த இனிப்புகளை, தீனிகளை சுகாதாரமான, ஆரோக்கியமான முறையில் வீட்டிலேயே செய்து கொடுக்க முயல்வது சாலச்சிறந்த செயல்.  

அவ்வகையில் குழந்தைகளுக்கு பிடித்த கோதுமை அல்வாவினை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி என்று இந்த பதிப்பில் படித்தறிவோம்..!

தேவையானவை..

கோதுமை மாவு - 1 கப், ஏலக்காய்த் தூள் -சிறிது, சர்க்கரை - முக்கால் கப், உப்பு - ஒரு சிட்டிகை, வறுத்த முந்திரி, திராட்சை - 50 கிராம், நெய் - 150 கிராம், எண்ணெய் - 2 தேக்கரண்டி.

செய்முறை..

1. கோதுமை மாவினில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து, பூரிக்கு மாவு பிசைவது போல் பிசைந்து, மாவு நன்கு மூழ்குமளவு நீர் சேர்த்து 4-6 மணி நேரம் வரை நன்றாக ஊறவிடவும்  

2. பின் மாவினை நன்றாக பிசையவும்; மாவைப் பிசையப்பிசைய கோதுமை மாவு தனியாகவும், அதன் சக்கை தனியாகவும் வரும்; மாவிலிருந்து சக்கையை தனியே எடுத்துவிட்டு, அதில் பாலை ஊற்றி 1 மணி நேரம் தெளிய விடவும்

3. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் இட்டு, அதில் சர்க்கரை சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும்; அந்த கொதிக்கும் சர்க்கரைக்கரைசலில் பால் கலந்த கோதுமை மாவினை சேர்த்துக் கிளறிவிடவும்

4. மற்றொரு வாணலியில் நெய், எண்ணெய் போன்றவற்றைச் சேர்த்து, அது சூடானதும் வறுத்த முந்திரி, திராட்சை ஆகியவற்றைத் தூவி இறக்கவும் 

5. மேற்கண்ட நெய்யில் வறுத்த பொருட்களை தெளிந்த மாவுக்கலவையில் சேர்த்து, வாணலியில் ஒட்டாமல் இருக்கும் பதம் வரும் வரை நன்றாகக் கிளறவும் 

6. பின்னர், தட்டில் நெய் தடவி, கோதுமைக் கலவையை அதாவது கோதுமை அல்வாவைக் கொட்டுங்கள்; இக்கலவை ஆறிய பின் விரும்பிய வடிவில், விரும்பிய டிசைனில் வில்லைகள் போட்டு அல்வாவினை குடும்பத்தாருக்கு, குழந்தைகளுக்குப் பரிமாறுங்கள்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon