Link copied!
Sign in / Sign up
0
Shares

குழந்தைகளை தூங்க வைக்க உதவும் 4 அற்புத உணவுகள்...

குழந்தைகள் எப்போதுமே பகலில் தூங்கி இரவில் அம்மாவிடம் சேட்டை செய்வர். ஒரு சில குழந்தைகள் கொஞ்ச நேரம் தூங்கி திடீரென எழுந்து அழும். அதுவே இன்னும் சில குழந்தைகள் இரவு முழுவதும் தூங்காமல், உங்களையும் தூங்க விடாமல் அழும். அதனால் நீங்கள் ஒரு சில உணவை குழந்தைகளுக்கு இரவில் கொடுப்பதன் மூலம் தூங்க வைக்க முயலலாம். அது என்ன என இப்போது நாம் பார்ப்போமா?

1. வாழைப்பழம்:

ஒரு சிலரை திட்டும்போது வாழைப்பழ சோம்பேறி என்போம். அதற்கு காரணம் பழ தோலை உரிக்க கூட அவன் அலுப்பு கொள்வான். ஆனால், உண்மையிலேயே வாழைப்பழத்திற்கு ஒருவனை தூங்க வைக்கும் சக்தி இருப்பதை நீங்கள் அறிவீரா! ஆம், நாம் சாப்பிடும் வாழைப்பழத்தில் மெலட்டோனின், செரட்டோனின் மற்றும் மாக்னீசியம் கூட இருக்கிறது. இது குழந்தைகளின் தசைகளை தளர்வடைய செய்வதோடு, தேவையான தூக்கத்தையும் சேர்த்து தர உதவுகிறது. உங்கள் குழந்தைக்கு பல் முளைத்துவிட்டால் இந்த வாழைப்பழத்தை மசித்து அவர்களுக்கு உணவாக கொடுக்கலாம். ஒருவேளை வாழைப்பழமே சாப்பிட்டு அலுத்துப்போன பிள்ளைகளுக்கு வாழைப்பழத்தில் விதவிதமான உணவை செய்துகூட கொடுக்கலாம்.

2. சூடான பால்:

குழந்தைகளுக்கு நல்ல தூக்கத்தை பால் தருகிறது. இந்த சூடான பாலில் இருக்கும் கால்சியம் மற்றும் அமினோ அமிலம் குழந்தைக்கு தேவையான தூக்கத்தை தூண்டிவிடுகிறது. அதனால் லேசான சூட்டுடன் பாலை நீங்கள் பிள்ளைகளுக்கு தருவதன் மூலம் உங்கள் தூக்கம் கெட்டுப்போவது குறைகிறது. அவர்களும் நன்றாக தூங்கி எழுவர். சூடான பார்முலா பாலில் குறைவான கால்சியம் மற்றும் அமினோ அமிலமே இருக்கிறது. அதே போல் ஒரு வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு பசும்பால் கொடுப்பதையும் தாய்மார்கள் தவிர்க்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனை பெற்று அதன் மூலமாக மிக சிறந்த உணவை நீங்கள் குழந்தைகளுக்கு தரலாம்.

3. தயிர்:

"நீ என்ன சரியான தயிர் சாதமாக இருக்கிறாய்..." என ஒருவரை நாம் கேட்பதுண்டு. இதற்கு காரணம், ஒன்றும் தெரியாதவர்களை கிண்டல் செய்யவே இந்த வார்த்தையை நாம் பயன்படுத்துவோம். ஆனால் உண்மையான அர்த்தம் என்னவெனில் தயிர் அதிகம் சேர்த்துக்கொள்ளும்போது நன்றாக தூக்கம் வரும் என்பதே ஆகும். ஆம், ஓட்ஸுடன் தயிரை சேர்த்தோ அல்லது மசித்த வேகவைத்த சாதத்தை குழந்தைகளுக்கு கொடுக்க இதனால் நன்றாக அவர்களுக்கு தூக்கம் வரும். அதேபோல் நீங்கள் கொடுக்கும் தயிர் என்பது குளிர்சாதன பெட்டியில் வைத்து எடுத்ததாக இருக்கக்கூடாது. வீட்டில் தயாரித்த சுத்தமான தயிராக இருக்க வேண்டும். அதேபோல் வெறும் தயிராக இருக்க வேண்டும். சர்க்கரை சேர்ப்பதை தவிர்க்கவும்.

4. ஓட்மீல்:

எல்லோரும் அறிந்த விஷயம் என்னவென்றால், ஓட்ஸில் தேவையான அளவு ஆரோக்கியம் இருக்கிறது என்பது மட்டும்தான். ஆனால், குழந்தைகளுக்கு ஓட்ஸ் கொடுக்க நன்றாக தூக்கம் வரும் என்பது உங்களுக்கு தெரியுமா? இந்த ஓட்ஸிலும் மெலட்டோனின் இருக்க குழந்தைகளுக்கு தேவையான தூக்கத்தையும் இதனால் தருகிறது.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon