Link copied!
Sign in / Sign up
22
Shares

கருவிலிருக்கும் குழந்தை அசையவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகளிடம் உங்கள் மகிழ்ச்சியான தருணம் எதுவென கேளுங்களேன். என் மகன்/மகள் உதைத்த முதல் தருணம் தான் என கூறுவார்கள். ஒரு சில அம்மாக்கள் குழந்தைகள் உதைக்கும் தருணத்தை உற்று நோக்கி அதன்படி செயல்களை செய்து கருவிலிருக்கும் குழந்தையை ஆரவாரம் அடைய செய்வார்கள். இந்த குழந்தைகளின் அசைவு என்பது கர்ப்பிணிகளின் இரண்டாவது மாதத்தில் தொடங்க, இதனால் ஒரு பெரும் மகிழ்ச்சியும் அம்மாக்கள் மனதில் எழுகிறது. ஒருவேளை கருவிலிருக்கும் குழந்தை அசைவற்று இருந்தால் என்ன செய்ய வேண்டும்? இதோ 5 வீட்டு குறிப்புகள் உங்களுக்காக. 

1. குளிர்ந்த நீர்:

இது மிகவும் வேடிக்கையான வைத்தியம் என சொல்லலாம். உங்கள் பிள்ளைகள் நன்றாக வளர்ந்து இழுத்து போர்த்திக்கொண்டு தூங்கினால் நீங்கள் என்ன செய்வீர்கள். ஒரு கிளாஸ் தண்ணீரை அவர்கள் முகத்தில் படும்படி ஊற்றி புத்துணர்வு தருவீர்கள். அதே தான் செய்ய வேண்டும். ஆம், கருவிலிருக்கும் குழந்தை அசைவற்று இருந்தால் நீங்கள் ஒரு கிளாஸ் குளிர்ந்த தண்ணீரை உங்கள் தொண்டைக்குள் செலுத்துங்கள். 'எவன்டா என் மீது தண்ணீர் ஊற்றியது...' என கோபத்துடன் எழுந்து உங்கள் வயிற்றை எட்டி உதைப்பான்.

2. தடவிக்கொடுங்கள்:

ஆம், பிறந்த குழந்தையை தடவி தருவதால் அவர்கள் தூங்க செய்வார்கள். அதுவே கருவிலிருக்கும் குழந்தையை தடவிக்கொடுப்பதன் மூலம் விழிக்க செய்ய இயலும் என்பதை நீங்கள் அறிவீரா! அல்ட்ரா சவுண்ட் முறையின் போதும் அம்மாக்களை தன் வயிற்றை தடவிக்கொடுக்க சொல்ல இதுவே காரணமாக அமைகிறது. அப்போது தான் 100 சதவிகிதம் துல்லியமான குழந்தையின் அசைவை மருத்துவர்களால் கண்டு, குழந்தையின் ஆரோக்கியத்தை பற்றியும் சொல்ல முடிகிறது.

3. இயற்கை பழச்சாறு:

இது மிகவும் வேடிக்கையான ஒரு வழியும் கூட. கருவிலிருக்கும் உங்கள் குழந்தை அசைவற்று இருக்கும்போது பழச்சாறு நீங்கள் பருகலாம். இதனால் ஒருவித சுவையான அனுபவத்தை உங்கள் குழந்தைக்கு நீங்கள் தர, அதன் சர்க்கரை அளவானது வயிற்றினுள் சென்று கருவிலிருக்கும் உங்கள் குழந்தையை விழிக்கவும் செய்கிறது. அதேபோல் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட ஜூஸை தேர்ந்தெடுக்காதீர். ஏனெனில், இதில் கலந்திருக்கும் கெமிக்கல் குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்தவும் கூடும்.

4. தூங்குதல்:

கருவிலிருக்கும் குழந்தை எப்போதும் இரவில் தான் நன்றாக தூங்குவான். அதனால் குழந்தையின் அசைவற்று உங்கள் உடல் அதிக நேரம் இருக்கும்போது நீங்கள் சற்று ஓய்வில் தூங்க முயல்வது நல்லது. இதற்கு முக்கிய காரணம், நீங்கள் அசைந்துக்கொண்டே இருக்கும் போது ஒருவித பயத்துடன் உங்கள் குழந்தை அசையாமல் அப்படியே இருப்பார்கள். அதுவே நீங்கள் தூங்கும்போது அவர்கள் சுருட்டி வைத்த வாலை வெளியில் எடுத்துவிட்டு எட்டி உதைக்கவும் செய்வார்கள்.

5. பாட்டு பாடுதல்:

கருவிலிருக்கும் குழந்தை அசையாமலிருக்க, அழகான இசையின் மூலம் அவர்களை நீங்கள் தட்டி எழுப்பலாம். இது மிகவும் பயன் தரக்கூடிய ஒரு வழி என்பதை பாடிய அடுத்த நிமிடமே நீங்கள் உணர்வீர்கள். குழந்தைகள் பயப்படும்படி பாட்டை தேர்ந்தெடுப்பதை தவிர்க்கவும். காரணம், அதிகம் இரைச்சல் நிறைந்த பாடல்கள் குழந்தையின் வளர்ச்சியையும் பாதிக்க செய்கிறது.

Click here for the best in baby advice
What do you think?
100%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon