Link copied!
Sign in / Sign up
3
Shares

குழந்தைகளிடம் காணப்படும் தவிர்க்கக்கூடாத 5 அறிகுறிகள்...

ஒரு குழந்தையை முதன் முதலில் பெற்ற அம்மாக்களுக்கு எப்படி பராமரிக்க வேண்டுமென்பது குழப்பமான விஷயமாக அமைகிறது. நீங்கள் சந்திக்கும் முதல் 9 மாதங்களுக்கு பிறகு பலவித சவால்களை குழந்தையின் வாழ்வில் சந்திக்க வேண்டியிருக்கிறது. குழந்தைக்கு திடீரென ஏற்படும் காய்ச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு என்ன தீர்வு தர வேண்டுமென்பதை புதிய தாய்மார்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அவற்றிலும் பிறந்த குழந்தைகள் எதற்கு அழுகிறது என்பதை யாராலும் ஒருபோதும் புரிந்துக்கொள்ளவே முடியாது. அப்படி காணப்படும் குழந்தைகளின் வெளிப்படை அற்ற அறிகுறிகளை நாம் இப்போது தெரிந்துக்கொள்ளலாம்.  

1. மோல் வளர்ச்சி:

உங்கள் குழந்தையின் உடலில் தோன்றும் புள்ளிகளால் சருமத்தின் நிறம் மாறக்கூடும். அப்படி எனில், நீங்கள் குழந்தையை கண்டிப்பாக மருத்துவரிடம் அழைத்து செல்ல வேண்டியது அவசியம். 

2. முடி கொட்டுதல்:

குழந்தைகளுக்கு முடி கொட்டுவதற்கு காரணங்கள் பல இருக்கிறது. அதாவது தலையின் குறிப்பிட்ட பகுதியில் முடிக்கொட்டி காணப்படவோ அல்லது மெல்லிய முடியை கொண்டோ உங்கள் குழந்தைகளின் தலையானது காணப்படும். ஒரு நல்ல செய்தி என்னவென்றால், குழந்தைகளுக்கு கொட்டும் முடிக்கான சிகிச்சை என்பது மிகவும் எளிதான விஷயமாகும். உங்கள் குழந்தைக்கு முடிக்கொட்டுவது போல் தெரிந்தால்... உடனடியாக குழந்தை மருத்துவரிடம் அழைத்து செல்ல வேண்டியது அவசியமாகும்.

3. மனநிலை மாற்றம்:

உங்கள் குழந்தைகளின் செயல்களில் திடீர் மாற்றங்கள் தெரியும். அவர்கள் பசியின்மை இன்றி காணப்படுவர். அவர்கள் தொடர்ந்து இதுபோல் இருக்கும் பட்சத்தில் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது மிக நல்லது.

4. தலையின் அளவு பெரிதாவது:

எல்லா குழந்தைகளுமே சிறிய தலையுடன் பிறக்க, அவர்கள் தலையில் காணப்படும் உச்சிக்குழி என்பது மிருதுவாகவும் இருக்கும். ஆனால், இந்த நிலை என்பது குழந்தைகளின் எலும்பு வலுப்பெற, அதனால் மண்டை ஓடும் வடிவம் பெறுகிறது. ஒருவேளை குழந்தையின் உச்சிக்குழி மிருதுவாக இருப்பது தொடர, அவர்கள் தலையின் அளவு மாற்றம் நிரம்ப காணப்பட்டால் அப்போது அவர்களுக்கு ஏதோ நோய் இருப்பதாக அர்த்தம். அதனால், உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கு ஏற்ப தீர்வு காண்பது நல்லது.

5. காது கேட்பதில் பிரச்சனை:

குழந்தைகள் பிறந்து அவர்களுக்கு பேர் வைத்தவுடன் நீங்கள் செய்ய வேண்டிய விஷயம் என்னவென்றால், அவர்கள் பெயரை அழைத்து காதில் எந்த பிரச்சனையும் காணப்படவில்லை என்பதை உறுதி செய்துக்கொள்வது தான். அப்படி பிரச்சனை இருப்பதுபோல் தோன்றினால் உங்கள் குழந்தையை ஈ.என்.டி ஸ்பெஷலிஸ்டிடம் அழைத்து செல்ல வேண்டும்.  

6. தொடர் தாகம்:

குழந்தைகளின் வளர்ச்சிக்கு நீர்ச்சத்து என்பது மிகவும் அவசியமாகிறது. இருப்பினும், குழந்தைகள் அளவுக்கதிகமாக நீர் ஆதாரத்தை எடுத்துக்கொண்டால், அப்போது அவர்களுக்கு நீரிழிவு நோய் இருக்கக்கூட வாய்ப்பிருக்கிறது. எனவே அவர்களை மருத்துவரிடம் அழைத்து செல்ல வேண்டியது மிகவும் முக்கியம்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

Recently, we launched a baby-safe, natural and toxin-free floor cleaner. Recommended by moms and doctors all over India, this floor-cleaner liquid gets rid of germs and stains without adding harmful toxins to the floor. Click here to buy it and let us know if you liked it.

Stay tuned for our future product launches - we plan to launch a range of homecare products that will keep your little explorer healthy, safe and happy!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon