Link copied!
Sign in / Sign up
18
Shares

முதல் முறை கர்ப்பமாக இருக்கும் நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள்!

முதல் முறை கர்ப்பமாக இருப்பது என்பது கண்களை கட்டி காட்டில் விட்டது போன்ற ஒரு உணர்வை கர்ப்பிணி மனதில் ஏற்படுத்துகிறது. ஏனெனில், அவரவர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து கர்ப்பிணி பெண்கள் மனதை குழப்ப நிலையில் வைத்துக்கொள்ள, இதனால் என்ன செய்வதென தெரியாது அவர்களும் திணறுகின்றனர். எனவே தான் கர்ப்பிணிகளுக்கு கர்ப்பம் பற்றிய ஒரு சில விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகிறது. அது என்ன என்பதை விரிவாக நாம் இப்போது பார்க்கலாமா! 

1. கர்ப்பம் பற்றிய குழப்பம்:

இது பொதுவாக பெண்களுக்கு முதல் முறை ஏற்படும் ஒரு மன குழப்பம் தான். வாந்தி எடுத்தல், குமட்டல் போன்ற பிரச்சனைகள் இருக்கும்போது தான் கர்ப்பமென முழுவதுமாக நம்பிவிட, உண்மையிலேயே தான் கர்ப்பம் தானா என்ற கேள்வியும் இவர்கள் மனதில் எழுகிறது. முதல் கோணலை தவிர்ப்பது மிகவும் முக்கியம். இல்லையேல் முற்றிலும் கோணலாக தேவையற்ற குழப்பம் இந்த பத்து மாதங்களும் உங்கள் வாழ்வில் இருக்கவும் கூடும்.

2. முறையான மருத்துவ பரிசோதனை:

கர்ப்பிணி பெண்கள் மனதளவில் மட்டும் மாற்றம் நிரம்ப காணப்படுவதில்லை. அதையும் தாண்டிய உடலின் பல வித மாற்றங்கள் அவர்கள் வாழ்வில் காணப்பட, அவை அனைத்தும் பல்வேறு புதிய பிரச்சனையை தினந்தினம் தருகிறது. எனவே முறையான மருத்துவ பரிசோதனையின் மூலம் உங்கள் சந்தேகங்களை மருத்துவரிடம் கேட்டு நீங்கள் தெளிவடையலாம். அனுபவத்தின் பெயரில் ஆலோசனைகளை மற்றவரிடம் கேட்பதை முடிந்தளவுக்கு நீங்கள் தவிர்த்திடுங்கள்.

3. குடும்ப மருத்துவ வரலாறை அறிதல்:

இது மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஆம், பிறக்க போகும் குழந்தை மரபு ரீதியாக பிறக்கும்போது சில சமயத்தில் அது உங்கள் வம்சாவளியினர் குணங்களை கொண்டிருக்கும். எனவே, உங்கள் தாத்தா - பாட்டிக்கு ஏதேனும் நோய்கள் இருந்ததா? போன்ற விஷயங்களை முன்பே தெரிந்துக்கொண்டு இதனால் கருவில் வளரும் குழந்தைக்கு ஆபத்தா என்பதையும் மருத்துவரிடம் நீங்கள் கேட்டு தெரிந்துக்கொள்ள வேண்டும்.

4. தடுப்பூசி அவசியம்:

கர்ப்ப காலத்தில் தாய் - சேய் இருவருடைய நலமும் அவசியம் என்பதால், தேவையான தடுப்பூசிகளை நீங்கள் கண்டிப்பாக போட்டுக்கொள்ள வேண்டும். இதனால் கருவிலிருக்கும் குழந்தைக்கு தேவையான எதிர்ப்பு சக்தி கிடைக்க, உங்களையும் நோய் தொற்றுலிருந்து காப்பாற்றுகிறது. எனவே மருத்துவரின் பரிந்துரையில் தவறாமல் தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம்.

5. கர்ப்ப கால வயதை அறிதல்:

கர்ப்பம் என்பது மூன்று நிலைகளில் அமைய, அவை மூன்று மூன்று மாதங்களாகவும் பிரிக்கப்படுகிறது. இந்த ஒவ்வொரு மூன்று மாதங்களிலும் ஹார்மோன் மாற்றம், இரத்த அழுத்த மாற்றம், மூச்சு விடுவதில் மாற்றம், வளர்சிதை மாற்றம் ஆகியவை காணப்படுகிறது. இவற்றை நீங்கள் தெளிவாக உணர்ந்து மருத்துவரின் ஆலோசனையை முறையாக பெறுவதன் மூலமாக தேவையற்ற கவலைகள் நீங்கும்.

6. உணவு முறை:

கர்ப்ப காலத்தில் முறையான உணவுகளை நீங்கள் உட்கொள்ள வேண்டும். அரைநிலையில் இறைச்சி, முட்டை போன்றவற்றை வேகவைத்து உண்பது கருவிலிருக்கும் குழந்தைக்கும் ஆபத்தை ஏற்படுத்தும். எனவே உங்கள் உணவு முறையில் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டிய நீங்கள் மருத்துவர் பரிந்துரையுடன் சத்தான உணவை மட்டுமே உண்ணுவது மிக நல்லது.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon