Link copied!
Sign in / Sign up
3
Shares

நாள் 1 முதல் வாரம் 6 வரை சிசேரியனுக்கு பிறகு என்ன நடக்கும்?

எல்லா பெண்களும் சுகப்பிரசவத்தையே விரும்பிய காலம் போக, இன்று சிசேரியன் தான என கேட்கும் அளவுக்கு நம் நவீனமும், நாகரிகமும் வளர்ந்துவிட்டது. விளைவு, எங்காவது ஒரு இடத்தில் சுகப்பிரசவம் நடந்தால் உடனே ஆச்சரியமாக பார்க்கிறோம். சுகப்பிரசவம் என்பது மிகவும் கடினமான வலியை தந்தாலும், சிசேரியனை போல் உடல் மற்றும் மனதளவில் உளைச்சலை ஒருபோதும் உண்டாக்க நினைப்பதில்லை. ஆனால், சிசேரியன் அப்படி கிடையாது. மனதளவில் நிதி திரட்ட அலைச்சலை ஏற்படுத்துவதோடு, சிசேரியனுக்கு பிறகும் மிகவும் பாதுகாப்புடன் தையலை நாம் பராமரிக்க வேண்டியது இருக்கிறது. குளிப்பதில் தொடங்கி, செய்யும் வேலை வரை என எல்லாவற்றிலும் சிசேரியன் சிக்கலை ஏற்படுத்துகிறது.

முதலில் வரும் டாக்டர், குழந்தை நல்ல படியாக பிறந்தமைக்கு உங்களுக்கு வாழ்த்து தெரிவிக்க உங்கள் உடலின் செயல்கள் இயல்பாக இருக்கிறதா? குழந்தை இயல்பான குணத்துடன் இருக்கிறதா? என்பதை சோதனை செய்வார். எல்லாம் நார்மலாக இருக்கும் பட்சத்தில் அடுத்த நாள் முதல் செவிலியரின் பணி உங்களுக்காக தொடங்குகிறது.

நாள் 1:

தாய் மற்றும் சேய் இருவருக்கும் எந்தவித பிரச்சனையும் இல்லை என்பது தெரிந்தவுடன் நார்மல் வார்டுக்கு மாற்றுவார்கள். நீங்கள் இப்போது ஆகாரமாக பானங்கள் மட்டும் பருக பரிந்துரை செய்வார். ஒருசில சமயத்தில் மசித்த உணவை கொடுக்கக்கூட டாக்டர் சொல்வார்.

சிசேரியன் செய்ததால் ஏற்படும் சிரமம் குறைவதை நீங்கள் உணர்ந்தால் லேசாக எழுந்து அசையவும் டாக்டர் பரிந்துரை செய்வார்.

நாள் 2:

உங்கள் உடலில் காணப்படும் வடிகுழாய் நீக்கப்பட்டு எழுந்து நடக்கவும் சொல்வார்கள். அமெரிக்க மருத்துவர் கூறுவது என்னவென்றால், சிசேரியனின் முதல் நாள் மிகவும் களைப்புடன் இருந்தாலும் இரண்டாவது நாளில் கொஞ்சம் முன்னேற்றம் தெரிய வேண்டியது அவசியம் என்கிறார். வலி இருந்தாலும் உங்கள் நிலையை நீங்கள் படிப்படியாக சரி செய்துக்கொள்ள வேண்டியது முக்கியம் எனவும் அவர் கூறுகிறார்.

இந்த நாள் முதல் ஷவர் எடுத்துக்கொள்ளக்கூட நீங்கள் செய்யலாம். ஆனால், நறுமணமிக்க சோப் அல்லது வாசனை திரவியங்கள் எடுத்துக்கொள்ளக்கூடாது.

நாள் 4:

இந்த நாளில் மருத்துவமனைக்கு குட்பை சொல்லி நீங்கள் கிளம்பும் நாளாக அமைய, சுகப்பிரசவமாக இருந்தால் 2ஆவது நாளிலே நீங்கள் கிளம்பிவிடலாம். அத்துடன் போடப்பட்ட ஸ்டேபிள் நீக்கப்பட, சிசேரியன் செய்த கீறல் காயங்களையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள மருத்துவர் ஆலோசனை தருவார். குறிப்பாக வண்டி ஓட்டுதல் மற்றும் மாடி படி ஏறுதல் போன்ற விஷயங்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். 

வாரம் 2:

இந்த வாரத்தில் மருத்துவமனை பரிசோதனைக்கு நீங்கள் செல்ல, காயங்கள் குறித்தும் ஏதாவது பிரச்சனைக்குரிய அறிகுறிகள் குறித்தும் மருத்துவர் பார்ப்பார். உங்கள் மனதில் எந்தவித சந்தேகம் இருந்தாலும் நீங்கள் மருத்துவரிடம் ஒளிவு மறைவின்றி கேட்க வேண்டிய ஒரு காலமும் கூட இது என்பது குறிப்பிடத்தக்கது.

வாரம் 4:

சிசேரியனிலிருந்து ஒரு பெரும் விடுதலை கிடைத்த உணர்வை உங்களுக்கு தர, பிறப்புறுப்பிலிருந்து வெளியாகும் இரத்த கசிவும் தணிந்து காணப்படும். ஆனால், 100 சதவிகிதம் குணமடைய முடியுமென நினைப்பதை முற்றிலும் தவிர்த்திடுங்கள். ஏனெனில், சிசேரியன் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கு ஒவ்வொரு விதமான வலியை தருகிறது. 

வாரம் 6:

சிசேரியன் பிரச்சனையிலிருந்து ஒரு பெண் என்பவள் மீண்டு வரும் காலமாக 4 முதல் 6 வாரத்திற்குள் அமைகிறது. அதுவும் நீங்கள் எந்த அளவுக்கு பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்பதையும், எந்த மாதிரி எல்லாம் உணவு சாப்பிடுகிறீர்கள் என்பதை பொறுத்தே அமையும். உங்கள் கருப்பை மீண்டும் ஒரிஜினல் அளவுக்கு வர, நீங்கள் உடலுறவில் ஈடுபடுவதற்கான சிரமங்களும் நீங்குகிறது. ஆனால் ஒரு சில பெண்களுக்கு அறுவை சிகிச்சையினால் ஏற்பட்ட காயம் ஆறாமலிருக்க, வலியும் லேசாக காணக்கூடும். உங்கள் உடலில் காணப்படும் காயங்கள் முற்றிலும் குணமடைவதை பொறுத்தே நீங்கள் செய்யும் வேலைகள் என்பதை அமைத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று என்பதை மறந்துவிடாதீர்கள்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon