Link copied!
Sign in / Sign up
1
Shares

முதல் மற்றும் இரண்டாவது குழந்தைகள் வித்தியாசம்...

குழந்தை பிறப்பு என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்வில் மிகவும் முக்கியமான தருணமாக அமைய, இரண்டாவது குழந்தை பிறப்பின் போது ஒரு சில விஷயங்களை அவள் மறந்து விடுவதுண்டு. அவற்றுள் ஒன்று தான் மனதில் தோன்றும் மகிழ்வும். முதல் குழந்தை பிறக்கப்போவதை ஊரறிய சொல்லும் நாம், இரண்டாவது குழந்தைக்கு இப்படி செய்வது மிகவும் குறைவு. கேட்பவர்களே சில சமயத்தில் அலுத்து போகக்கூடும் என்பதால் நாம் சொல்ல முன்வருவதில்லை. ஆனால், இரண்டாவது குழந்தையை பாதுகாக்க தொடங்கும்போது முதல் குழந்தையின் மீது காட்டப்படும் கவனம் என்பது எப்போதும் குறைவாகத்தான் இருக்கும் என்பதே உண்மை. சரி, முதல் குழந்தைக்கும், இரண்டாவது குழந்தைக்கும் என்ன வித்தியாசம்? இப்போது பார்க்கலாமா?

1. கொண்டாட்டம்:
முதல் குழந்தை:

இது முன்பு சொன்ன ஒன்று தான். முதல் குழந்தையை பெற்றுக்கொள்வது என்பது இதுவரை யாருமே குழந்தையை பெற்றதில்லை என்பது போன்ற ஒரு எதிர்ப்பார்ப்பை கர்ப்பிணி பெண்ணின் மனதில் தரும். வீட்டிலுள்ள நாயை கொஞ்சி அதனிடம் சந்தோசத்தை வெளிப்படுவதில் தொடங்கி, வந்து போகும் அனைவரிடமும் நம் ஆனந்த கூத்தாடலை பகிர்ந்துக்கொள்வோம். 

இரண்டாவது குழந்தை:

எத்தனை முறை தான் எல்லோரிடமும் இதேபோல் தான் கர்ப்பம் என்பதை சொல்வது என்ற சலிப்பும், பயமும் உருவாகும்.

2. குழந்தையின் அசைவு:
முதல் குழந்தை:

கர்ப்பிணி பெண்கள் வயிற்றில் வளரும் தன் முதல் குழந்தையின் அசைவு மற்றும் படத்தை காண மிகவும் ஆவலுடன் இருப்பார்கள். 

இரண்டாவது குழந்தை:

பெரிதாக எந்த ஒரு பயமோ அல்லது முந்தைய பிரசவம் போன்ற ஆர்வமோ ஏற்படுவதில்லை. குழந்தை நன்றாக பிறக்க வேண்டுமென்ற ஒரே எண்ணம் மட்டும் அவ்வப்போது மனதில் வந்து செல்லும். பயமும் முன் அனுபவத்தால் பயந்து ஓடிவிடும்.

3. நேரம் பார்ப்பது:
முதல் குழந்தை:

வேறு எந்த வேலையும் செய்வதற்கான நேரம் என்பது உங்களுக்கு இருப்பதில்லை. குழந்தையை பாதுகாப்பதில் மட்டுமே உங்கள் கவனமும், நேரமும் இருக்கும். ஒருசிலர் வெளியில் செல்லக்கூட தயக்கம் கொண்டு வீட்டிலே பாதுகாப்பு கருதி இருந்துவிடுவார்கள்.

இரண்டாவது குழந்தை:

உங்கள் வேலைகளை ஒதுக்க வேண்டுமென்னும் எண்ணம் வருவது மிக குறைவு. அத்துடன் சகஜமாக வெளியில் செல்வதோடு பாதுகாப்பு பற்றிய பயமும் பெரிதாக ஒன்றும் மனதில் இருப்பதில்லை.

4. செவிலிய பணி:
முதல் குழந்தை:

குழந்தை பிறந்து அனைத்து மருத்துவ சிகிச்சையும் முடிந்த பிறகு மார்பகம் எப்படியும் இயல்பு நிலைக்கு திரும்பும் என்ற நம்பிக்கை இருக்கும்.

இரண்டாவது குழந்தை:

அந்த எதிர்ப்பார்ப்பு என்பதே உங்களிடத்தில் இருக்காது.

5. பாதுகாப்பு:
முதல் குழந்தை:

உங்கள் வீட்டில், உங்கள் குழந்தை செய்யும் சின்ன சின்ன குறும்புகளையும் ரசிக்க தூண்டும்.

இரண்டாவது குழந்தை:

இரு குழந்தைகள் செய்யும் சேட்டையும் வெறுப்பின் எல்லைக்கு உங்களை அழைத்து  செல்ல, அவர்களை நோக்கி ஏதாவது சொன்னபடி இருந்தால் பரவாயில்லை என தோன்றும்.

6. அன்பு:
முதல் குழந்தை:

அம்மாக்கள் காட்டும் அளவுக்கடந்த பாசம் என்பது முதல் குழந்தை பிறப்பின் போதே அமைகிறது. தாய்ப்பாலுடன் சேர்த்து ஒட்டுமொத்த அன்பையும் தந்து வளர்ப்போம்.

இரண்டாவது குழந்தை:

குழந்தை பிறக்கும் போது இரண்டாவது குழந்தையை கவனிக்க மட்டுமே நாம் செய்ய, அவர்கள் இருவரும் வளர்ந்தவுடன் யாராவது ஒருவரிடம் மட்டும் அதிகம் பாசத்துடன் இருப்போம். இவ்வாறு இருக்கக்கூடாது. உங்கள் அன்பு என்பது எத்தனை குழந்தைகள் பிறந்தாலும் அவர்கள் அத்துணை பேருக்கும் சரி சமமாக கிடைத்தால் மட்டுமே அவர்கள் கற்றுக்கொள்வது சரியாக அமையும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon