Link copied!
Sign in / Sign up
1
Shares

ஐந்து நிமிடத்தில் மன அழுத்தத்தை குறைக்க ஜப்பானியர்கள் செய்தது...

மன அழுத்தம் என்பது யாரை தான் விட்டு வைத்தது. ஆம், உலகத்தில் மிக கொடிய நோய் எதுவென பார்த்தால் அது மன அழுத்தம் தான். ஒருவன் நன்றாக பேசிக்கொண்டிருப்பான். ஆனால், திடீரென்று என்ன செய்கிறான் என்பதை அவனே அறியமாட்டான். அடுத்த அரை மணி நேரம் கழித்து பார்த்தால் மீண்டும் அவன் சகஜ நிலைக்கு திரும்பி பேசியபடி இருப்பான். ஆனால் இந்த அரை மணி நேர இடைவேளை என்பது எல்லோருடைய வாழ்வை புரட்டிப்போட, என்றாவது ஒரு நாள் தான் செய்த தவறை எண்ணி ஒரு நிமிடமாவது வருத்தப்படுவர். அப்படிப்பட்ட கொடிய மிருகமான மன நோயை போக்க, ஜப்பானியர்கள் சில எளிமையான வழிகளை கடைப்பிடித்து இருக்கிறார்கள். அது என்ன என பார்த்தால் நீங்களே ஆச்சரியத்தில் உறைந்து போவீர்கள்.   

உதவும் கரங்கள்:

"வெறுங்கை என்பது மூடத்தனம், விரல்கள் பத்தும் மூல தனம்" என்பது பழமொழி. ஆம், விரல்கள் இயங்காத வரை வெறுங்கையை கொண்டு நம்மால் எதுவும் செய்ய இயலாது. இந்த விரல்கள் பற்றி உங்களுக்கு தெரியாத விஷயம் ஒன்றை நான் சொல்லவா?

1. கட்டைவிரல் பதட்டத்தை குறைக்க உதவுகிறது.

2. ஆள்காட்டி விரல் உங்கள் பயத்தை குறைக்கிறது.

3. நடுவிரல் கோபத்தை குறைக்க உதவுகிறது.

4. மோதிர விரல் தான் மனதை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள உதவுகிறது.

5. சுண்டு விரல் மன அழுத்தத்துடன் போராட கைக்கொடுக்க, தன்னம்பிக்கையையும் தருகிறது.

என்ன செய்ய வேண்டும்?
#1

1. உங்கள் ஒரு கையை விரித்து கொள்ளுங்கள். 

2. இன்னொரு கையால் ஒவ்வொரு விரலையும் இறுக்கி பிடித்திடுங்கள்.

3. நீங்கள் ஒவ்வொரு விரலையும் 1 அல்லது 2 நிமிடங்களுக்கு பிடித்திருங்கள்.

4. இதனால் அழுத்தம் குறைந்த ஒரு வித மன அமைதியை உணர்வீர்கள்.

#2

1. ஒரு கையை விரித்து கொள்ளுங்கள்.

2. உங்கள் மற்றொரு கையின் கட்டை விரல் கொண்டு விரித்த கையின் நடுப்பகுதியை அழுத்துங்கள்.

3. இவ்வாறு ஒரு நிமிடத்திற்கு வைத்திருக்க வேண்டும்.

4. இதனால் ஒரு வித மன அமைதி என்பது உங்களுக்கு கிடைக்கிறது.

 
 
Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon