Link copied!
Sign in / Sign up
2
Shares

உங்கள் குழந்தைகளுக்கு வயது வாரியாக நார்ச்சத்து எவ்வளவு இருக்க வேண்டும்?

தாவரங்களில் காணப்படும் நார்ச்சத்து என்பது இரண்டு வகையை கொண்டிருக்கிறது. அவை, கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்களாகும். உணவில் நார்ச்சத்து இருக்குமெனில், இந்த இரண்டு வகைகளுள் ஒன்றை கண்டிப்பாக கொண்டிருக்கும். கரையாத நார்ச்சத்தை நீங்கள் எடுத்துக்கொள்வதால் மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து தீர்வு என்பது கிடைக்கிறது. இந்த நார்ச்சத்து., கோதுமை, சோள உமி, சணல் விதைகள் ஆகியவற்றில் காணப்படுகிறது. ஒரு சில பழங்களிலும் இந்த கரையாத நார்ச்சத்து என்பது காண்கிறது.

கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் இதயம் மற்றும் இரத்தத்திற்கு மிக நல்லது. இது இரத்தத்திலுள்ள கொழுப்பையும், சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. ஓட்ஸ்மீல், பார்லி மற்றும் சில பழங்களில் இந்த நார்ச்சத்து காணப்படுகிறது. பொதுவாக நார்ச்சத்தை நம் உணவில் சேர்த்துக்கொள்ளும் போது நம் உடல் உடனடியாக ஏற்றுக்கொள்வது கிடையாது. ஆனால், இந்த நார்ச்சத்துள்ள உணவுகள் மற்ற ஊட்ட சத்துக்களையும் கொண்டிருக்கிறது.

வயதுபடி நீங்கள் உட்கொள்ள வேண்டிய நார்ச்சத்தின் அளவு என்ன?

1 முதல் 3 வருட குழந்தைகள் - 19 கிராம்கள்

4 முதல் 8 வருட குழந்தைகள் - 25 கிராம்

9 முதல் 13 வருட பிள்ளைகள் (பெண் குழந்தைகள் மட்டும்) - 26 கிராம்

9 முதல் 13 வருட பிள்ளைகள் (ஆண் குழந்தைகள் மட்டும்) - 31 கிராம் 

14 முதல் 18 வருட பிள்ளைகள் (பெண் குழந்தைகள் மட்டும்) - 26 கிராம்

14 முதல் 18 வருட பிள்ளைகள் (ஆண் குழந்தைகள் மட்டும்) - 38 கிராம்

நார்ச்சத்தை பொறுத்தவரை கரையக்கூடியது மற்றும் கரையாத நார்ச்சத்து என இரண்டுமே உங்கள் குழந்தைகளுக்கு முக்கியம் தான். இதனால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படுவதில்லை.

எந்த உணவில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது?

1. முழு கோதுமையில் செய்யப்பட்ட பஸ்ரா

2. நீங்கள் வாங்கும் பொருளில் ஒட்டப்பட்டிருக்கும் லேபிளில் 'பிரான்', 'ஹோள்', 'ஃபைபர்' என இருந்தால் நார்ச்சத்து அடங்கிய உணவு என அர்த்தமாகும்.

3. வேகவைக்கப்பட்ட முழு தானியங்கள்.

4. வெள்ளை நிறமற்ற பிரெட்டுகள். (எ.கா) 'ரை', 'ஹோள்', 'ஸ்ரோன் கிரவுண்ட்' என்ற வார்த்தைகள் காணப்படும். 

5. பழுப்பு நிற சோறு, வறுத்து உடைத்த கோதுமை, பார்லி மற்றும் குயினோவாவில் நார்ச்சத்து இருக்கிறது.

எந்த பழத்தில் நார்ச்சத்து அதிகமிருக்கிறது?

1. தோலுரிக்கப்படாத பியர்ஸ் பழங்கள்.

2. தோலுரிக்கப்படாத ஆப்பிள் பழங்கள்.

3. மாம்பழங்கள்

4. ப்ளுபெரி பழங்கள்

5. ராஸ்பெரி பழங்கள்

6. ஸ்ட்ராபெரி பழங்கள்

7. அப்ரிகாட் பழங்கள்

8. அத்தி பழங்கள்

 

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon