Link copied!
Sign in / Sign up
7
Shares

கருவிலிருக்கும் குழந்தையின் வளர்ச்சி நின்றுவிட்டதை காட்டும் அறிகுறிகள்!

கர்ப்பிணி பெண்கள் கருவிலிருக்கும் குழந்தையை சுமப்பதை ஒருபோதும் ஒரு சுமையாக நினைப்பதேயில்லை. ஆனாலும், அந்த பத்து மாதத்தில் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? போன்ற விஷயங்களை தெரிந்துக்கொள்ள சில சமயத்தில் அதுவே அவர்களை குழப்பமான நிலைக்கு தள்ளவும்கூடும். அதேபோல் கர்ப்பிணி பெண்ணின் மிகப்பெரிய சந்தோஷமாக அமைவது அவள் தன் கருவிலிருக்கும் குழந்தையின் முதல் அசைவை காண்பதே. ஆனால், அத்துடன் உங்கள் பணி நிறைவடைந்து விடுவதுமல்ல. அதன்பிறகு தான் நீங்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். குறிப்பாக குழந்தை வளர்ச்சியின் மீது பெரிதும் அக்கறை காட்ட வேண்டும். எனவே, இந்த அறிகுறிகள் உங்களிடம் காணப்பட்டால் உடனடியாக மருத்துவரை பார்த்து ஆலோசனை பெற வேண்டியது மிகவும் அவசியம். அவை என்ன என்பதை இப்போது நாம் பார்க்கலாமா!

1. இதய துடிப்பு:

அம்மாக்களின் முதல் 3 மாதத்தில் மருத்துவர்கள் குழந்தையின் இதயத்துடிப்பை கண்டறிவர். அதாவது குழந்தையின் இதயத்துடிப்பை 9 முதல் 10 வாரங்களுக்கு இடைப்பட்ட நாட்களில் நம்மால் உணர முடியும். இந்த சூழ்நிலையில் தான் கருவானது சிசுவாக மாறுகிறது. ஒருசில நேரத்தில் குழந்தையின் நிலை அல்லது நஞ்சுக்கொடி இடமாற்றத்தால் குழந்தையின் இதயத்துடிப்பு என்பது காணப்படாமல் இருக்கக்கூடும். அப்படி எனில், கருவிலிருக்கும் குழந்தையின் வளர்ச்சி அசாதாரண நிலையை அடைந்துவிட்டது என அர்த்தமும் கூட என்பதை உணர்ந்து மருத்துவரை அணுக வேண்டியது மிகவும் அவசியம்.

2. அம்மாக்கள் வயிறு உயரம்:

அம்மாவின் கருப்பை மேலிருந்து பொது எலும்பு வரை வளர்ச்சி அடைய, டேப்பின் உதவியுடன் மருத்துவர் இந்த உயரத்தை அளவிட்டு கருவுடன் கருப்பை வளர்வதை உள் கண்டறிவார். ஒருவேளை அந்த உயரமானது எதிர்ப்பார்த்த அளவில் இல்லாவிட்டால் குழந்தையின் வளர்ச்சி பற்றி அறிந்துக்கொள்ள ஒருசில பரிசோதனைகளை பரிந்துரைப்பார். இதுதான் குழந்தையின் வளர்ச்சி தடைப்பட்டதை உணர்த்தும் முதல் அறிகுறியும் கூட...

3. HCG அளவு குறையும்:

இந்த ஹார்மோன்கள் கர்ப்பிணி பெண்கள் உடலில் சுரக்கக்கூடிய ஒன்றாகும். அதேபோல் ஒருவர் கர்ப்பமா? இல்லையா? என்பதை நாம் தெரிந்துக்கொள்ளவும் இந்த ஹார்மோன் தான் உதவுகிறது. இந்த HCG ஹார்மோன் அளவானது கர்ப்பிணி பெண்ணின் உடலில் ஒருவித நடுநிலையான செயல்பாட்டுடன் இருந்துவர குழந்தையின் வளர்ச்சி தடைப்படும்போது திடீரென குறையவும் செய்கிறது.

 
4. கருவுறுதல் வளர்ச்சி கட்டுப்பாடு நிலை கண்டறிதல்:

இந்த கருவுறுதல் வளர்ச்சி கட்டுப்பாடு என்பது உங்கள் வயிற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தையை சுமக்கும்போது ஏற்படுவதாகும். குறிப்பாக நஞ்சுக்கொடி பிரச்சனையால் இந்த நிலை என்பது கர்ப்பிணி பெண்ணுக்கு காணப்படுகிறது. ஒருவேளை நஞ்சுக்கொடி தன் பணியை சரியாக செய்யாவிட்டால் குழந்தையின் வளர்ச்சி தடைப்பட்டு இருக்கிறது என அர்த்தமாகும்.

5. திடீர் இரத்த கசிவு:

பெண்களுக்கு மாதந்தோறும் இந்த இரத்தக்கசிவு என்பது காணப்படும் ஒன்று தான். ஆனால், கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் இரத்தக்கசிவு என்பது சாதாரண விஷயமல்ல. அது சில சமயத்தில் கருச்சிதைவு உண்டாவதற்கான அறிகுறியாகவும் இருக்கிறது. ஒருவேளை இதுபோன்ற பிரச்சனைகள் உங்களுக்கு காணப்பட்டால் தாமதிக்காமல் மருத்துவரை சென்று பார்த்து ஆலோசனை பெற வேண்டியது அவசியமாகும்.

6. திரவ வெளியேற்றம்:

கர்ப்பிணி பெண்கள் வாழ்வில் ஒரு அங்கமாக இருப்பது அவர்கள் பிறப்புறுப்பிலிருந்து வெளியாகும் திரவமாகும். ஆனால், ஒரு சில சமயத்தில் திரவ வெளியேற்றம் என்பது கருவிலிருக்கும் குழந்தையின் வளர்ச்சிக்கு தடையாகவும் அமைகிறது. காரணம், குழந்தையை சுற்றி காணப்படும் பனிக்குட திரவம் என்பது குழந்தைக்கு பாதுகாப்பை தரும் ஒன்று. இது குறையும் பட்சத்தில் குழந்தைக்கு பாதுகாப்பு குறைந்தும் காணப்படுகிறது. எனவே, குழந்தையின் வளர்ச்சி தடைபட வாய்ப்பிருப்பதால் மருத்துவரை சென்று பார்ப்பது மிகவும் நல்லது.

7. அல்ட்ரா சவுண்டில் அசாதாரணம்:

முதல் 3 மாதத்தில் அல்ட்ரா சவுண்ட் செலுத்தப்படுகிறது. இந்த சவுண்ட் மூலமாக குழந்தையின் வளர்ச்சி, அளவு மட்டுமே பரிசோதனை செய்யப்படுவதல்ல. குழந்தை பிறப்பின்போது ஏற்படக்கூடிய குறைபாட்டையும் நம்மால் உணர முடிகிறது. ஒருவேளை அல்ட்ரா சவுண்டின் போது கருவிலிருக்கும் குழந்தை அசையவில்லை என்றால் அது மிகவும் ஆபத்தாகவும் அமைகிறது.

8. அதிகம் காய்ச்சல்:

கர்ப்ப காலத்தில் அதிகம் காய்ச்சல் காணப்பட, இது குழந்தையின் வளர்ச்சியையும் பாதிக்கிறது. ஒருவேளை கருவிலிருக்கும் குழந்தை வளரவில்லை என்றால் அதற்கு காரணமாக கர்ப்பிணிகளுக்கு அடிக்கும் காய்ச்சலும் ஒன்றாக இருக்கிறது. சில சமயத்தில் அளவுக்கதிகமான காய்ச்சல் கருச்சிதைவையும் ஏற்படுத்தக்கூடும்.

 

 

 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon