Link copied!
Sign in / Sign up
7
Shares

கர்ப்பிணிகள் காரம் சாப்பிடுவதால் கருவிலிருக்கும் குழந்தை என்ன செய்யும்?

கர்ப்ப காலத்தில் என்ன செய்ய வேண்டுமென்பதில் கர்ப்பிணிகள் கவனமாக இருக்க, ஏதேனும் தவறு செய்துவிட்டால் மிகவும் குற்றவுணர்ச்சியுடன் இருப்பார்கள். கர்ப்பிணிகள் மீன் சாப்பிடுவது நல்லது என யாரோ ஒருவர் கூற, நாமும் உடனே சமைத்து சாப்பிட தயாராகி விடுவோம். ஆனால், மீனில் மசாலா சேர்த்து சாப்பிட அது நம் உடலுக்கு ஏற்றுக்கொண்டாலும், உள்ளத்தில் குடியிருக்கும் குழந்தைக்கு ஏற்றதா என்பதை என்றாவது யோசித்ததுண்டா. ஆம், நீங்கள் சாப்பிடும் காரத்தால் கருவிலிருக்கும் குழந்தை என்ன நினைக்கும் என்பதை தான் நாம் இப்போது பார்க்க போகிறோம்...

என்ன சொல்கிறார்கள்?

வல்லுனர்களின் கூற்றுப்படி காரம் சாப்பிடுவதால் கருவிலிருக்கும் குழந்தைக்கு எந்த ஆபத்துமில்லை என சொல்லப்படுகிறது. ஆனால், நீங்கள் உண்ணும் உணவிலிருக்கும் காரம் பனிக்குடத்திற்கு செல்கிறது. ஆனால், கருவிலிருக்கும் குழந்தை உதைப்பதற்கு காரணம் நீங்கள் உண்ணும் காரமல்ல. கர்ப்பிணிகள் காரம் உண்பது தவறல்ல என்றாலும், அதிகமாக சாப்பிடும்போது கருவிலிருக்கும் குழந்தையை அது கண்டிப்பாக ஒரு சில காரணிகளை கொண்டு பாதிக்கும் என்பது உண்மை. அதுவென்ன என நாம் பார்க்கலாமா?

1. செரிமான கோளாறு:

கர்ப்பிணிகள் சாப்பிடும் காரத்தால் ஏற்படக்கூடிய முதல் பிரச்சனை தான் இந்த நெஞ்செரிச்சல் ஆகும். கர்ப்ப காலத்தின் போது, வளரும் கருப்பையின் அழுத்த அதிகரிப்பால் அமிலம் என்பது வயிற்றில் பிரதிபலிக்கக்கூடும். வயிற்றிலிருக்கும் அந்த அமிலம் ஆனது உயிர்ச்சத்து குழாய்க்கு செல்ல நெஞ்செரிச்சல் மற்றும் குமட்டல் பிரச்சனை என்பது ஏற்படுகிறது. நீங்கள் அளவுக்கதிகமாக காரம் சாப்பிட, வயிற்று போக்கு மற்றும் செரிமான கோளாறுகள் உங்களை நிலைக்குலைய செய்ய, கருவிலிருக்கும் குழந்தைக்கு தேவையான சத்து சென்று சேர்வதில் சிக்கல் ஏற்படுகிறது.

2. காலை சுகவீனம்:

கர்ப்ப காலத்தின் போது நுகரும் தன்மை என்பது அதிகமாக காணப்படும். அதனால், புதிய காரமான உணவுகளை உங்கள் உணவு முறையில் சேர்த்துக்கொள்வதை தவிர்ப்பது நல்லது. நீங்கள் பகலில் உடல் சோர்வுடன் இருக்க, கருவிலிருக்கும் குழந்தை தூங்குவதில் சிரமம் காணப்படுகிறது.

3. இரைப்பை குடல் அழற்சி நோய்:

காரம் சாப்பிடுவதால் ஒருவருக்கு இரைப்பை குடல் அழற்சி நோய் என்பது ஏற்படுவதில்லை. ஆனால், இதற்கு முன்னர் இந்த நோயால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் காரமாக சாப்பிடும்போது இதனால் ஏற்படக்கூடிய அறிகுறிகளை நீங்கள் உணரக்கூடும்.

எனவே கர்ப்பிணிகளே! காரம் சாப்பிடும்போது முடிந்தளவு குறைவாக சேர்த்துக்கொள்ள பாருங்கள். நீங்கள் சாப்பிடும் உணவில் கட்டுப்பாடு இருக்க, இதன்மூலமாக தான் நீங்கள் உடல் மற்றும் மனதளவில் தேவையான ஆரோக்கியத்தை பெற முடியும். நீங்கள் காரமான உணவை உண்ண ஆசைப்பட்டால் முதலில் லேசாக ருசி பார்த்து அதன்பிறகு சேர்த்துக்கொள்ளுங்கள். ஒருவேளை நெஞ்செரிச்சல் அல்லது செரிமான கோளாறு பிரச்சனை இருந்தால் தயவுசெய்து காரத்தை தவிர்க்க அன்புடன் வேண்டுகிறோம்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon