Link copied!
Sign in / Sign up
2
Shares

கருவிலிருக்கும் குழந்தையின் உடல் சுடுவதை தெரிந்துக்கொள்ள சில அறிகுறிகள்...

கர்ப்பிணி பெண்களின் உடல் சுடுவது இயற்கையான ஒரு விஷயம். இந்த பிரச்சனையால் கருச்சிதைவு ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது என்பதை நீங்கள் அறிவீரா! எனவே, கர்ப்பிணி பெண்கள் உடல் வெப்பமானது 102 டிகிரியை தாண்டி செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். ஆனால், கருவிலிருக்கும் குழந்தையை உங்கள் உடல் வெப்பம் தாக்குவதை எப்படி தெரிந்துக்கொள்வது என இப்போது நாம் பார்க்கலாமா?

1. வேர்க்குரு:

கர்ப்ப காலத்தில் உங்கள் வயிறு, மார்பகம் அல்லது முதுகில் தோன்றும் அலெர்ஜியினால் உருவாகும் தடித்தலை நீக்கமுடியாது. இந்த தடித்தலுக்கு இன்னொரு காரணம் உங்கள் உடலில் காணப்படும் வேர்க்குரு தான். அப்படி என்றால், உங்கள் கருவிலிருக்கும் குழந்தையும் உஷ்ணத்தால் பாதிக்கப்படுகிறான் என அர்த்தமாகும்.

2. தலையில் ஈரப்பதம்:

சூரிய ஒளி உங்கள் மேல் பட, ஒரு குறிப்பிட்ட அளவு வெப்பம் என்பது கழுத்து மற்றும் தலையில் ஏற்படக்கூடும். உங்களுடைய உச்சந்தலை அல்லது கழுத்து வியர்க்க, நீங்கள் உடனடியாக உங்கள் உடலை குளுமைப்படுத்த வேண்டியது அவசியம்.

3. குமட்டல்:

இது கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் பொதுவான பிரச்சனை என்றாலும், இதற்கு முன்னாள் இல்லாத அளவுக்கு வாந்தியுடன் காணப்படக்கூடும். அப்படி எனில் உங்கள் உடல் உஷ்ணம் நிரம்ப காணப்படும். இந்த உடல் உஷ்ணம் என்பது உடல் வறட்சியை தூண்டக்கூடும்.

4. சரி சம நிலை:

நீங்கள் நேராக அமர்வதற்கு சிரமமாக இருக்க, அதற்கு காரணம் உங்கள் கருவிலிருக்கும் குழந்தையின் உடல் எடை அல்ல. உங்கள் உடல் அதிகம் உஷ்ணத்துடன் காணப்பட, உங்களால் நேராக அமர்வதற்கு சிரமத்தை ஏற்படுத்தக்கூடும். 

5. சருமம் சிவப்பாக இருத்தல்:

உங்கள் சருமத்தில் சிவப்பு படிதலுக்கான காரணமாக உடலில் ஏற்படும் அதிக உஷ்ணம் என்பது அமைகிறது. அதனால் கர்ப்பமாக இருக்கும் பெண்கள், கண்டிப்பாக சூரிய ஒளியில் தன் உடலை படும்படி வைப்பதை தவிர்க்க வேண்டும்.

6. தாகம் எடுத்தல்:

கர்ப்ப காலத்தில் உங்களுக்கு நீரேற்றம் அவசியமாக அமைய, இதன் மூலமாக உங்கள் குழந்தையை குளிர்ச்சியுடன் வைத்துக்கொள்ளலாம். உங்கள் உடலில் நீர்ச்சத்து குறைவாக இருக்குமெனில் உடலில் உஷ்ணம் ஏற, எந்நேரமும் தாகம் எடுத்தபடியும் இருக்கும். இதனால் வறண்ட உதடுடன் நீங்கள் இருக்கவும்கூடும்.

7. உடல் சோர்வு:

நீங்கள் 7 மணி நேரம் தூங்கியும் உடல் சோர்வுடன் மீண்டும் தூக்கம் வந்தால் உங்களுடைய உடல் உஷ்ணத்தை சரிப்பார்க்க வேண்டியது மிகவும் அவசியம். 

8. இதயத்துடிப்பு:

நீங்கள் கர்ப்பமாக இருக்கும்போது இதயத்துடிப்பு என்பது வேகமாக இருக்கக்கூடும். ஆனால், சில சமயத்தில் உங்கள் உடலில் ஏற்படும் அதிக உஷ்ணத்தாலும் இந்த நிலை என்பது ஒரு கர்ப்பிணிக்கு காணப்படும் என்பதை புரிந்து செயல்பட வேண்டியது முக்கியம்.

 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon