Link copied!
Sign in / Sign up
2
Shares

கருவில் இருக்கும் குழந்தை வளர்ச்சிக்கான அறிகுறிகள்...

கர்ப்ப காலத்தில் உங்கள் வயிற்றில் வளரும் குழந்தையின் நிலையானது கருவுற்ற முட்டையிலிருந்து பிறப்பை நோக்கி நகர்கிறது. இந்த குழந்தை வளர்ச்சியில் பல்வேறு நிலைகள் அடங்கியிருக்க, ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான வளர்ச்சியை தருகிறது. உங்கள் கர்ப்ப காலம் முழுவதும் கருவில் இருக்கும் குழந்தை எப்படி இருக்கிறது என்பதை மருத்துவர்கள் மிகவும் கவனமாக தெரிந்துக்கொள்வார்கள். ஒருவேளை சரியான நேரத்தில், சரியான வளர்ச்சியை உங்கள் குழந்தை பெறவில்லை என்றால் அதற்கான தீர்வை நோக்கி அவர்கள் நகர்வார்கள்.

அல்ட்ரா சவுண்ட்:

உங்கள் உடலை பரிசோதிக்கும் உடல்நல மருத்துவர் உங்கள் குழந்தையின் வளர்ச்சியை அல்ட்ரா சவுண்ட் அறிகுறிகள் கொண்டு அறிந்துக்கொள்வார். தொடர் அல்ட்ரா சவுண்ட் மூலம் கர்ப்ப காலத்தில் கருவில் இருக்கும் குழந்தையின் நிலையை தெரிந்துக்கொள்ள, குறிப்பாக ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தையை நீங்கள் ஈன்றெடுக்கும் சூழல் உருவானால் இந்த முறையை பயன்படுத்துவார்கள். அல்ட்ரா சவுண்ட் கொண்டு குழந்தையை பரிசோதிக்க, வளர்ச்சி குறைபாடு, தொப்புள் கொடி முரண்பாடுகள், அசாதாரண உடல் நிலை பிரச்சனை முதலியவற்றை தெரிந்துகொள்ள முடிகிறது.

உயரம் பொறுத்து அமைதல்:

உங்கள் குழந்தை வளர்ச்சி அடைய, கருப்பையும் விரிவடைகிறது. உங்களை பரிசோதிக்கும் மருத்துவர் பொதுவான எலும்பிலிருந்து கருப்பை மேல்புறம் வரை அளவிட்டு பார்ப்பார்கள். உங்கள் வயிற்றில் வளரும் குழந்தை சாதாரணமாக இருந்தால், உயரம் என்பதும் வழக்கமான அதிகரிப்புடன் காணப்படும். ஒருவேளை அப்படி காணப்படாத நிலையில், கூடுதல் பரிசோதனையை மருத்துவர்கள் முயல்வார்கள்.

HCG இரத்த அளவு:

நீங்கள் கர்ப்பமாக இருக்கும்போது, உங்கள் உடலில் HCG உற்பத்தியாகிறது. சிறுநீர் மற்றும் இரத்த பரிசோதனையில் இந்த ஹார்மோன்கள் எவ்வளவு இருக்கிறது என்பதை நம்மால் தெரிந்துக்கொள்ள முடிகிறது. கர்ப்பத்தின் முதல் நிலையில் இரத்த அளவானது படிப்படியாக அதிகரிக்கிறது. ஒருவேளை கர்ப்ப பிரச்சனைகள் கவனத்தில் கொள்ள வேண்டிய விதத்தில் இருக்குமெனில் HCG அளவை தொடர்ந்து கண்காணித்தபடி மருத்துவர்கள் இருப்பார்கள். உங்கள் உடலில் இருக்கும் HCG அளவானது குறைந்து காணப்பட்டால் குழந்தை சரியான வளர்ச்சியை எட்டவில்லை என அர்த்தம். கருச்சிதைவு ஏற்படுவதற்கு கூட வாய்ப்பாக அமைந்துவிடுகிறது.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon