கர்ப்பிணி பெண்கள் ஒரே இடத்தில் நிற்பதால் கருவின் வளர்ச்சிக்கு ஆபத்தா!
ஆண்களை விட உடலளவிலும் அதிகம் சுமையை பெண்கள் காண்பதற்கு ஒரு அழகிய எடுத்துக்காட்டு தான் பிரசவம் என்பது. கர்ப்பமாக இருப்பது கடினமான விஷயம் என்றாலும், பிறக்க போகும் குழந்தையை மனதில் நினைத்துக்கொண்டு கர்ப்பிணிகள் மிகவும் சந்தோசம் நிரம்பிய மனதுடன் இருப்பர். உங்கள் கால்கள் தரையில் நிற்க மறுத்து அடம்பிடிக்க, வலுக்கட்டாயமாக நீங்கள் நின்றால் எப்படி! அப்படி நீங்கள் வெகுநேரத்துக்கு நிற்பதால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை தான் நாம் இப்போது பார்க்க போகிறோம்.
எப்படி பாதிக்கிறது?
1. கீழ் முதுகு தண்டு வலி:
கர்ப்ப காலத்தில் 50 முதல் 70 சதவிகித கர்ப்பிணிகளுக்கு இந்த பிரச்சனை என்பது காணப்படுகிறது. ஒரு சில பெண்களுக்கு காலில் வலியும் ஏற்படுகிறது. நீங்கள் கால்களுக்கு அதிக வேலை தரும்போது கர்ப்ப காலத்தில் கண்டிப்பாக பின் முதுகு வலியை சந்திக்க அதிக வாய்ப்பிருக்கிறது.

2. உயர் இரத்த அழுத்த பிரச்சனை:
இது மிகக்கொடிய நோய் என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டுமா என்ன? ஆனால், கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் இந்த உயர் இரத்த அழுத்தம் நோக்கி ஒருபோதும் செல்லக்கூடாது என்பதை மறந்துவிடாதீர்கள். இதனால் உங்களுக்கும், உங்கள் கருவில் வளரும் குழந்தைக்கும் மிகவும் ஆபத்தை விளைவிக்கக்கூடும்.

3. அந்தரங்க இடத்தில் வலி:
சில பெண்களுக்கு சிம்பசிஸ் புபிஸ் பிறழ்ச்சி (SPD) எனப்படும் பிரச்சனை கர்ப்ப காலத்தில் ஏற்படுகிறது. இதனால் இடுப்பு பகுதியில் வலி காணப்பட, குறிப்பாக உடலின் அந்தரங்க எலும்பில் பெரிதும் வலி ஏற்படுகிறது.

4. கருவின் வளர்ச்சியை பாதிக்கும்:
பொதுவாக உங்கள் கருவிலிருக்கும் குழந்தை பகல் நேரத்தில் தான் தூங்குவான். அப்போது சுழற்சி பணி என்பது சரியாக நடைபெறும். குறிப்பாக கர்ப்பிணி பெண்களின் அசைவால் தான் கருவிலிருக்கும் குழந்தை பகலில் வெகுநேரம் தூங்குகிறான். ஆனால், நீங்கள் ஒரே இடத்தில் நிற்கும்போது அது அவனுடைய தூக்க சுழற்சியை பாதிக்க, கருவின் வளர்ச்சிக்கு தடை ஏற்படுத்தும் விதமாகவும் அமைகிறது.

5. குறைப்பிரசவ பிரச்சனை:
ஒரு ஆய்வின்படி கர்ப்பிணி பெண்கள் வெகுநேரம் நிற்கும்போது குறைப்பிரசவத்துக்கான வாய்ப்பையும் ஏற்படுத்துவதாக தெரிகிறது.

6. குறைந்த இரத்த அழுத்தம்:
கர்ப்பிணி பெண்கள் வெகுநேரம் நிற்பதால் உயர் இரத்த அழுத்தம் உண்டாவது போல், குறைந்த இரத்த அழுத்த பிரச்சனையும் காண வாய்ப்பிருக்கிறது. எப்போதும் இரத்த அழுத்தம் என்பது கூடவோ, குறையவோ கூடாது. அது சமநிலையில் இருத்தல் வேண்டும். இல்லையேல், தேவையற்ற மயக்கம் ஒரு பெண்ணுக்கு ஏற்படும்.

7. தீவிர நீர்க்கட்டு:
கர்ப்ப காலத்தில் கால்கள் வீங்கி காணப்படுவதோடு நீர்க்கட்டு பிரச்சனையும் வெகுநேரம் நிற்கும் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படுகிறது.
