Link copied!
Sign in / Sign up
5
Shares

கருவிலிருக்கும் குழந்தை தலைகீழாக விழுந்துவிட்டதை தெரிந்துக்கொள்வது எப்படி?

பிரசவத்திற்கு உங்கள் உடல் தயாராகும் போது, குழந்தை இடுப்பு நோக்கி விழும். இதற்கு காரணம் கருப்பையில் இருக்கும் குழந்தை பிறப்புக்கு தயாராகிவிட்டது என அர்த்தமாகும். ஒரு குழந்தை எப்போது பிறக்குமென யாராலும் அவ்வளவு எளிதில் சொல்லிவிட முடியாது. குறிப்பாக சுகப்பிரசவத்தை யாராலும் சொல்ல முடியாது. குழந்தை விழுவது என்பது நீங்கள் பிரசவத்தை நெருங்குவதற்கான முன் அறிகுறியாக அமைகிறது. எப்படி தெரிந்துகொள்வது? வாருங்கள் பார்க்கலாம்...

எப்போது இது நடக்கும்?

கர்ப்ப காலத்தின் 34 மற்றும் 36ஆவது வாரங்களில் இந்த நிலையை குழந்தை அடைகிறது. ஆனால் ஒரு சில பெண்களுக்கு பிரசவத்தின் ஒரு சில மணி நேரம் முன்பு தான் குழந்தை இந்த நிலைக்கு வரக்கூடும். நீங்கள் குழந்தை விழுந்துவிட்டதாக நினைத்தால், மருத்துவர் உங்கள் குழந்தையின் நிலையை பற்றி தெரிந்துகொள்வார். அதன் மூலமாக எப்போது பிரசவிக்க வாய்ப்பிருக்கிறது என்பதை அவர் கூறுவார்.

எப்படி குழந்தை விழுகிறது?

கருவிலிருக்கும் போது குழந்தை பல வித நிலையிலிருக்கக்கூடும். ஆனால், பிரசவிக்கும் போது உங்களுடைய இடுப்பில் அமர்ந்து தலையை கீழ்நோக்கி கொண்டு வருவார்கள். இந்த குழந்தைகளின் நிலையை பெண்கள் நல மருத்துவர் கண்காணிக்க, இதன் நிலையை -3 முதல் +3 வரையிலும் கணக்கிடப்படுகிறது.

1. உயர்ந்த நிலையை தான் -3 என அழைக்க, குழந்தையானது இடுப்பு பகுதியில் இல்லாமல் தலையை மேல்நோக்கி வைத்தவாறே இருக்கும்.

2. +3 என்பது குழந்தை சரியான நிலையில் இடுப்பு நோக்கி வர, அதன் தலையும் கீழ் நோக்கி இருக்கக்கூடும்.

3. 0 நிலை என்பது குழந்தை தயாராக இருக்க, அதன் தலையானது இடுப்பு பார்த்தவாறு இருக்கும்.

எப்படி தெரிந்துகொள்வது?

1. நீங்கள் பார்த்தால் வயிற்றின் நிலை கீழ் நோக்கி தொங்கி வழக்கத்தைவிட மாறுதல் நிரம்ப காண்பதை உணரலாம்.

2. நீங்கள் மூச்சு விடுவதில் சிக்கலற்று காணக்கூடும். 

3. குழந்தை கீழ் நோக்கி இறங்கும்போது இடுப்பில் ஒரு அழுத்தம் மற்றும் வலியை நீங்கள் உணரக்கூடும்.

4. உங்கள் குழந்தை இடுப்பை அடைந்தவுடன் கருப்பை விரிதலால் சளி போன்ற திரவம் வெளியாகக்கூடும். அது பார்ப்பதற்கு தடிமனாக, இளஞ்சிவப்பு நிறத்தில் பிசுபிசுவென இருக்கும். 

5. பிறப்புறுப்பை குழந்தை அமுக்கும்போது அடிக்கடி சிறுநீர் கழித்தால் பரவாயில்லை என உங்களுக்கு தோன்றும்.

6. குழந்தை பிறப்பதற்கு தயாராக, பின்புற உடல்பகுதி வழக்கத்தைவிட வலியுடன் காணப்படும்.

7. பசியின்மையுடன் காணப்படுவீர்கள்.

8. குழந்தை இடுப்பு பகுதியை அமுக்கும்போது மூல பிரச்சனைகள் ஏற்படும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon