Link copied!
Sign in / Sign up
22
Shares

கருவில் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும் உணவுகள் எவை?

எந்த தாய்க்கு தான் தன் குழந்தை ஆரோக்கியத்துடன் பிறக்க வேண்டுமென்னும் ஆசை இருக்காது! எனவே கர்ப்பமாக இருக்கும்போதே தனக்கு பிடித்த ஒரு உணவை சாப்பிடுவதை விட, கருவில் இருக்கும் குழந்தையின் நலன் கருதி சத்துள்ள உணவுகளை தேடிப்பிடித்து தினமும் உண்பவள் தாய் மட்டுமே. தாய் என்பவள் குழந்தை பிறந்த பிறகு மட்டுமே சத்துள்ள உணவை தன் மகன் விருப்பமற்று வைத்து திணிப்பதில்லை. இதை அவள் கருவில் குழந்தை வளரும்போதே செய்கிறாள். 

இப்போது கருவில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு எந்த உணவை எல்லாம் நீங்கள் சாப்பிட வேண்டுமென நாம் பார்க்கலாம்.

1. மத்தி மீன்:

ஒமேகா கொழுப்பு அமிலம் அதிகம் நிறைந்தது இந்த மத்தி மீன். இந்த மீன், கருவில் இருக்கும் குழந்தையின் மூளை மற்றும் அதன் வளர்ச்சிக்கு உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த மீன், குழந்தையின் உடம்பிலிருக்கும் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, கண் பார்வை குறைபாடுகளற்று உங்கள் குழந்தை பிறக்க உதவுகிறது. மேலும் இந்த மத்தி மீனில் வைட்டமின் டி காணப்படுகிறது. கர்ப்பிணி பெண்கள் வாரத்தில் இரண்டு முறையாவது இந்த மீனை தங்கள் உணவுடன் சேர்த்து கொள்ளலாம்.

2. தர்பூசணி விதை:

இந்த தர்பூசணி விதையில் தேவையான அளவு துத்தநாகம் இருக்கிறது. இதனால் கருவில் இருக்கும் குழந்தையின் மூளை படிப்படியாக மேம்பட தொடங்குகிறது. துத்தநாகத்திற்கு தகவல் பரிமாற்ற சக்தி என்பது அதிகம் இருக்கிறது. எனவே மூளையை வலுப்படுத்தி அறிவாற்றலுடன் குழந்தை பிறக்க துத்தநாகம் உங்களுக்கு உதவுகிறது. தினமும் கர்ப்பிணி பெண்கள் 7 மில்லிகிராம் தர்பூசணி விதையை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

3. கீரைகள்:

இந்த கீரையில் இரும்பு சத்து இருப்பதோடு இயற்கையாகவே போலெட்டும் அடங்கி இருப்பதால் செல் வளர்சிதை மாற்ற பணிக்கு உதவுகிறது. கீரையில் காணப்படும் ஆன்டி ஆக்சிடன்ட், கருவிலிருக்கும் குழந்தையின் மூளையை பாதுகாக்க முன்வருகிறது. இந்த கீரையை கர்ப்பிணி பெண்கள் தினமும் 400 mcg அளவு எடுத்து கொள்ளலாம். கீரையை அதிகமாக வேகவைத்து சாப்பிடாதீர்கள். இதனால் சத்துக்கள் சேர்ந்து போகக்கூடும்.

4. முட்டைகள்:

மூளை வளர்ச்சிக்கு இரும்பு சத்து மற்றும் புரத சத்து அவசியமாக கோலின் நிறைந்த முட்டைகள் மூளையின் செயல்பாட்டு வேகத்தை சரிப்படுத்தி, உங்கள் குழந்தைகளின் கற்றுக்கொள்ளும் திறனை அதிகரிக்க செய்கிறது. இந்த கோலின் அளவானது தினமும் 450 மில்லிகிராம் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

5. சர்க்கரை வள்ளி கிழங்கு:

குழந்தையின் நரம்பு மண்டல மேம்பாடுக்கு பீட்டா கரோட்டின் நிறைந்த சர்க்கரை வள்ளி கிழங்கு அவசியமாகிறது. தினமும் 700 mcg பீட்டா கரோட்டின் கர்ப்பிணிகளுக்கு தேவை. ஆரஞ்சு சதை கொண்ட சர்க்கரை வள்ளி கிழங்கில் பெருமளவில் பீட்டா கரோட்டின் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

6. வேர் கடலை:

நிரம்பாத கொழுப்புக்கள், நியாசின், போலெட் மற்றும் புரதம் நிறைந்தது இந்த வேர்க்கடலை. மேலும் வேர்க்கடலையில் வைட்டமின் ஈ இருக்கிறது. இந்த வைட்டமின் ஈ உங்கள் கருவில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon