Link copied!
Sign in / Sign up
16
Shares

கணவர் விதவிதமாய் கட்டிப்பிடிப்பதை கொண்டு அவர் மனதில் இருப்பதை தெரிந்துக்கொள்ளலாம்...

ஒரு ஆணும், பெண்ணும் கட்டிப்பிடிப்பது என்பது தவறான விஷயமல்ல என்றாலும், கட்டிப்பிடிக்கும் விதம் பொறுத்தே அதுவும் அமைகிறது. ஒரு பெண் கவலையுடன் இருக்கும்போது அவளை ஒருவித கட்டிபிடித்தலின் மூலம் சாந்தமடைய செய்யலாம். ஆனால், அதே நேரத்தில் வேறு நிலையில் ஒரு பெண்ணை கட்டிப்பிடிப்பதால் அவள் எல்லையற்ற கோபம் கூட கொள்ளக்கூடும். கணவர்கள் உணர்வை வெளிப்படுத்தும் விதத்தில் மனைவிகளை அரவணைப்பதன் மூலம் அவளுடைய புரிதலை மிக எளிதில் பெறவும் கூடும். இப்போது, கட்டிப்பிடித்தலில் காணப்படும் வகையையும், அது என்ன சொல்கிறது என்பதையும் நாம் பார்க்கலாம் வாருங்கள்.

1. செல்லமாக கட்டிபிடித்தல்:

இந்த விதமென்பது அரை நிலையில் கட்டிப்பிடித்தல் எனவும் சொல்லப்படுகிறது. உங்கள் கணவருடன் நடந்து செல்லும்போது இவ்வாறு அவர் கட்டிப்பிடிப்பதன் மூலம் நீங்கள் அவர் தோள்களில் சாய்ந்து கொள்ள முயலலாம். இதனால், நீங்கள் இருவரும் உங்கள் மனதிலிருக்கும் சந்தோசம் மற்றும் கவலைகளை அழகிய காதல் உணர்வுடன் பகிர்ந்துக்கொள்ள முடியும். அத்துடன் அவர் நல்ல தோழராகவும் உங்களுக்கு அமையக்கூடும்.

2. கால்களை மடக்கி கட்டிப்பிடித்தல்:

இந்த கட்டிப்பிடித்தல் முறையை பொதுவாக சினிமாவில் நீங்கள் கண்டிருக்க அதிக வாய்ப்பிருக்கிறது. ஆம், கணவன் -  மனைவி நெருக்கத்துடன் இருக்க விரும்பினால் இந்த கால்களை மடக்கி கட்டிப்பிடித்தல் என்பது உங்களுக்கு உதவுகிறது. உங்கள் கணவன் இந்த கட்டிப்பிடித்தலை விரும்பும் போது கணவன் - மனைவிக்குள் இருக்கும் இடைவெளி குறைந்து இறுக்கி அணைத்திட வேண்டும். இதன் மூலமாக ஒருவரின் உணர்வும் தூண்டப்படுகிறது.

3. பின்புறமாக கட்டிப்பிடித்தல்:

இந்த கட்டிப்பிடி வைத்தியமென்பது இனிமையான உணர்வை கணவன் - மனைவிக்கு நடுவில் ஏற்படுத்துகிறது. நீங்கள் நடந்து சென்றுக்கொண்டிருக்கும் போதோ, அல்லது சமையல் செய்துக்கொண்டிருக்கும் போதோ உங்கள் கணவர் பின்புறமாக உங்களை வந்து கட்டி அணைத்தால் நிச்சயம் அவர் முகம் மெல்ல உங்களை எட்டிப்பார்க்கும். அப்போது மெல்லிய முத்தத்தை அவருக்கு பரிசாக அளிப்பதன் மூலம் அவர் அரவணைப்பில் நீங்கள் அன்புடன் என்றும் இருப்பதை உணர்த்த முடியும்.

4. திடீரென கட்டிப்பிடித்தல்:

இந்த கட்டிப்பிடித்தல் ஒருவித எதிர்பாரா சந்தோஷத்தை உங்களுக்கு அளிக்கும். நீங்கள் எங்காவது வெளியூர் பயணம் செல்வதாக இருந்தால் அப்போது உங்கள் கணவர் உங்கள் மீது வைத்திருக்கும் அளவுக்கதிகமான அன்பின் வெளிப்பாடாய் இந்த திடீர் கட்டிப்பிடித்தல் என்பது அமைகிறது. 

5. இறுக்கி அணைத்தல்:

ஒருவருடைய உணர்வுகளை தூண்டும் விதத்தில் இந்த இறுக்கி அணைத்து முத்தம் தருதல் என்பது அமைகிறது. நீங்கள் மிகவும் சோகமாக இருந்து ஓரளவுக்கு வெளிவரும்போது உங்கள் கணவர் இறுக்கி அணைத்து முத்தம் தருவதன் மூலம், 'என்றுமே நான் உன்னுடன் தான் இருக்கிறேன்.' என அவர் சொல்ல வருவதை நீங்கள் புரிந்துக்கொள்ளலாம். அத்துடன் உங்கள் பிரிவை அவர் தாங்காதவர் என்பதையும் இறுக்கி அணைக்கும் ஆழத்தின் மூலம் நீங்கள் புரிந்துக்கொள்ளலாம்.

6. கண்களால் கட்டிப்பிடித்தல்:

அது எப்படி ஒருவரை கண்களால் கட்டிப்பிடிப்பது? வெரி சிம்பிள். உங்கள் இருவருடைய கைகள் கட்டி அணைக்கும்போது, கண்கள் நான்கும் ஒரே நேர்கோட்டில் பார்த்த வண்ணம் இருக்கும். இது அழகிய காதலையும், புரிதலையும் உங்கள் இருவர் வாழ்வில் ஏற்படுத்த உதவும் ஒருவித கட்டிப்பிடித்தலும் கூட. இதனால் உங்கள் இருவருடைய உள்ளமும் ஒரே பாதையில் பயணிக்க விட்டுக்கொடுத்து போகும் மனப்பான்மை உங்கள் இருவருக்குள்ளும் ஏற்படும். கணவன் - மனைவிக்குள் வரும் சண்டை சச்சரவின் போதும் கண் பார்த்து பேசுவதால் விரைவில் சமாதானமாக இருவருமே செல்லக்கூடும். கண்களுக்கு அவ்வளவு பவர் இருக்கிறது தெரியுமா!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon