Link copied!
Sign in / Sign up
3
Shares

எதனால் பெண்கள் பெரிய மார்பகத்தை விரும்புகின்றனர்?

பெண்களின் மார்பகம் என்பது தாய்ப்பாலூட்டும் நிலையில் முக்கியத்துவத்தை மற்றவர்களுக்கு உணரவைக்கும் ஒன்றாகும். பல பெண்களும் பெரிய, வட்ட வடிவ அழகிய மார்பகத்தை பெற ஆசைப்படுகின்றனர். ஒரு பெண்ணின் அழகை உணர்த்துவது மார்பகம் தான். சில பெண்களுக்கு இயற்கையிலே அமைந்தாலும், அதை கவனிக்க தவறி குழந்தை பிறந்த பின்னர் வருத்தப்படுவதுண்டு. சிலர், எதிர்ப்பார்க்கும் மார்பகம் இல்லையென கவலைக்கொள்வதும் உண்டு.

மார்பகம் என்பது சுரக்கும் தன்மை கொண்டதாகவும், கொழுப்பு அடங்கியதாகவும், திசுக்களுடன் நட்பு கொண்டிருப்பதாகவும் முக்கியத்துவத்துடன் விளங்குகிறது.இந்த மார்பகத்தின் திசுக்களானது பருவம் எய்தும் போதும், மாதவிடாயின் போதும், கர்ப்பமாக இருக்கும் போதும் மெனோபாஸ் நிலையை அடையும் போதும் மாறுபடுகிறது.

ஒருவர் பருவம் எய்தும் போது, அவருடைய உடலின் ஹார்மோன்களில் மாற்றங்கள் உண்டாகிறது. எஸ்ட்ரோஜன் மற்றும் பிராகெஸ்ட்ரோன் என்னும் இரண்டு ஹார்மோன் ஆனது மார்பக வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. தேவையான ஊட்ட சத்துக்களும், மரபு ரீதியான மாற்றங்களும் கூட, இந்த மார்பக வளர்ச்சியில் முக்கிய பங்கினை வகிக்கிறது. 

மார்பகத்தின் வளர்ச்சிக்கு வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் பல மருந்து, மாத்திரைகள், ஹார்மோனை தூண்டும் ஊசிகள் என பல வந்துவிட்டன. இந்த செயற்கை பொருட்களை பயன்படுத்த நீங்கள் தயங்கினால், இயற்கையாகவே மார்பகத்தை பெரிதாக்க முயலலாம்.இயற்கை முறையில் மார்பகம் பெரிதாக கொஞ்சம் காலம் ஆகும் என்பதை புரிந்து பொறுமை காத்தல் மிக அவசியமான ஒன்று. ஆனால், பக்கவிளைவுகள் ஏற்படுமோ எனும் பயம் உங்களுக்கு வேண்டியதில்லை.

1. உடற்பயிற்சி:

ஒரு சில உடற்பயிற்சிகள், உங்கள் மார்பகத்தை பெரிதாக்க உதவுகிறது. புஷ் அப், வால் புஷ் அப். பென்ஞ் பிரெஸ், செஸ்ட் பிரஸ் போன்றவை மார்பகத்தை பெரிதாக்க உதவுகிறது. இந்த உடற்பயிற்சிகளில், கை மற்றும் தோள்பட்டையின் செயல்பாடு இருப்பதால்... உங்கள் உடல் தசை உயர, இதனால் மார்பகத்துக்கும் வேலைக்கிடைத்து அது மெல்ல வெளி வருகிறது. இதனால் உங்கள் மார்பகம் நாளடைவில் அழகாக, பெரிதாகவும் இருக்கக்கூடும். உடற்பயிற்சி செய்யும்போது உதவிக்கு ஒரு வல்லுனர் கண்டிப்பாக உங்களுக்கு தேவை.

2. மசாஜ்:

தாய் மசாஜ் என்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள். இவர்கள் கூறுவது என்னவென்றால், மார்பகத்தை தடவிகொடுப்பதன் மூலம் பெரிதாக்கலாம் என்கின்றனர். மேலும் இவர்கள் கூறுவது. மார்பகத்தை தடவி தருவதனால் இரு நன்மைகள் உண்டாகிறதாம். ஒன்று, இது தேவையான இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது. இரண்டாவது, திசுக்களை தளர்வடைய செய்து மார்பகத்தின் அழகுக்கும், அளவுக்கும் வழிவகை செய்கிறது.

எப்படி மசாஜ் செய்வது?

1. உங்கள் உள்ளங்கைகளுக்கு இடையே எண்ணெய்யை தடவி, 2 அல்லது 3 நிமிடத்திற்கு சூடு உண்டாகும் வரை தேய்த்துக்கொள்ளுங்கள்.

2. உங்கள் கைகளை மார்பகத்துக்கு கொண்டு சென்று உள்நோக்கி தடவ வேண்டும். தடவும்போது, உங்கள் கைகள் வட்ட வடிவத்தில் சுற்றி தடவ வேண்டியது அவசியம்.

3. இவ்வாறு குறைந்தது 100 முதல் 300 முறை வட்ட வடிவில் மார்பகம் முழுக்க தேய்க்க வேண்டும். காலையிலும் அதேபோல், தூங்க செல்லும் முன்பும் செய்யுங்கள்.

4. இந்த வழிமுறை மூலமாக தினமும் இரு முறை செய்துவர, ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் உங்கள் மார்பகத்தின் அழகு மற்றும் அளவில் நல்ல மாற்றம் தெரியும்.

சிவப்பு தீவனப்புல்:

இந்த சிவப்பு தீவனப்புல், உங்கள் மார்பகத்தை பெரிதாக்க உதவுகிறது.

1. ஓர் அல்லது இரண்டு டீ ஸ்பூன் உலர்ந்த சிவப்பு தீவனப்புல் மலருடன் ஒரு கப் சுடு தண்ணீர் சேர்த்துக்கொள்ளுங்கள்.

2. அதை 30 நிமிடங்களுக்கு ஊற வைத்திருக்க வேண்டும்.

3. அந்த நீரை வடிக்கட்டி தினமும் இரண்டு அல்லது மூன்று முறை குடித்து வரலாம்.

4. இந்த வழிமுறையை சில மாதங்கள் பின்பற்றி வர, இதனால் நல்லதொரு பயனை உங்களுக்கு தருகிறது.

வெந்தயம்:

1. நான்கில் ஒரு பங்கு வெந்தயப்பொடியுடன் கொஞ்சம் நீரை சேர்த்து பேஸ்ட் போல் ஆக்கிக்கொள்ள வேண்டும். அந்த பேஸ்டை கொண்டு மார்பகத்தை மெல்லிய முறையில் தடவ வேண்டும். பத்து நிமிடத்திற்கு வைத்திருந்து அதன்பின்னர் நீரை கொண்டு கழுவ வேண்டும். இந்த வழிமுறையை தினமும் இரு முறை செய்துவர, நல்ல பயனை நீங்கள் விரைவில் காணலாம். வெந்தய பொடி செய்ய, வெந்தய விதையை நன்றாக வறுத்து, அதை அம்மியில் வைத்து அரைக்க வேண்டும்.

பெண்களே! எந்த வழிமுறை உங்கள் உடலுக்கு உகந்ததாக படுகிறதோ, அதை கவனமாக கையாள வேண்டும். மார்பகம் என்பது உங்கள் குழந்தையின் நலனில் முக்கிய பங்கு வகிக்கும் ஒன்றும்கூட. அதனால், மருத்துவரின் ஆலோசனை இன்றி எந்தவித மாத்திரையோ, மருந்தோ... முயற்சிகளோ கண்டிப்பாக வேண்டாம்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon