Link copied!
Sign in / Sign up
3
Shares

எத்தனை நாளிற்கு ஒரு முறை பிராவை துவைக்கலாம்

பெரும்பாலும் அனைவரும் உடைகளை ஒரு நாளிற்கு ஒரு முறையோ அல்லது இரு முறை அணிந்த பிறகு துவைப்போம். ஆனால் உள்ளாடைகளை தொடர்த்து தினமும் துவைத்து உபயோகிப்போம். ஆனால் பெண்கள் அவர்களின் பிராவை எதனை நாட்களுக்கு ஒரு முறை துவைக்கலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.

பாதிப்பு

தொடர்ந்து தினமும் துவைப்பதனால் பிராவின் எலாஸ்டிக் தன்மை போய்விடும், இதனால் அது மார்பகங்களை சரியாக உட்கார செய்யாது. இதனால் பெண்களுக்கு அசௌகரியம் மற்றும் மார்பக வலி ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன.

எவ்வளவு நாள் இடைவெளியில்

குறைந்தது மூன்று அல்லது நான்கு முறை உபயோகப்படுத்திய பிறகு துவைத்தால் போதும். ஒருவேளை அதிக வியர்வை கசிந்திருந்தால் உடனே துவைக்கலாம். இது, அணிபவர் செய்யும் வேலை திறன்களை பொறுத்து. அதிகம் வியர்வை வெளிவாராத பட்சத்தில் பத்து நாட்களுக்கு ஒருமுறை துவைத்தால் போதும் என்று கூறுகின்றனர்.

ஸ்போர்ட்ஸ் பிரா

ஒருவேளை ஸ்போர்ட்ஸ் பிரா அணிபராக இருந்தால், அடிக்கடி துவைக்க வேண்டியது அவசியம். ஏனெனில், விளையாட்டில் ஈடுபடுபவர்களுக்கு அதிகமாக வியர்வை வெளிவரும் வாய்ப்பிருக்கிறது. அதனால், ஸ்போர்ட்ஸ் பிரா அணிபவர்கள் அந்தந்த நாட்களிலேயே துவைக்க வேண்டியது அவசியம்.

மிக முக்கியமானது

ஒரு சிலர், பிரா வாங்குவதில் கூட கஞ்சத்தனம் பார்த்துக் கொண்டு, ஓரிரு பிராக்களை மட்டுமே பயன்படுத்துவர். இது, மிகவும் தவறான அணுகுமுறை. ஓரிரு பிராக்களை தொடர்ந்து பயன்படுத்துவதனால், துணி சேதமடைவது மட்டுமின்றி, அது பெண்களின் மார்பக சருமத்தையும் சேதப்படுத்தும் அபாயம் உள்ளது.

எலாஸ்டிக் தன்மை

பெரும்பாலும் இப்போது பெண்களின் பிராக்கள் எலாஸ்டிக் பொருள்களினால் தான் தயாரிக்கப்படுகிறது. எனவே, அந்த எலாஸ்டிக் தன்மை திரும்ப இயல்பு நிலை பெற ஓர் நாளாவது ஆகும். இடைவிடாது மாற்றி மாற்றி அணியும் போது பிராவின் எலாஸ்டிக் தன்மை இழந்துவிடும். இதனால், இலகுவாக அல்லது இறுக்கமாக உணர நேரிடும். இது இரண்டுமே, பெண்களுக்கு மார்பகம் சார்ந்த பிரச்சனைகளை ஏற்படுத்துவது ஆகும்.

துவைக்கும் முறை

பிராக்களை துவைக்கும் போது பிழியக் கூடாது. அதே போல வாஷிங் மெஷீனில் துவைப்பவர்கள், ட்ரையர்களை பயன்படுத்த கூடாது. ஏனெனில், ட்ரையர்களில் வெளிப்படும் அதிக சூடு, பிராக்களின் இயல்பு வடிவம் மற்றும் உருவத்தை மாற்றிவிடும்.

காயவைக்கும் போது

கம்பிகளில் தொங்க விடாமல், சமநிலை பரப்பில் சாதரணமாக காயவைத்தாலே போதும்.

பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள்

பிராக்களின் வடிவம் பொருந்தாத நிலைக்கு மாறும் போது (எலாஸ்டிக் தன்மை இழப்பதனால்) பெண்களுக்கு முதுகு வலி, மார்பக வலி, சுவாசப் பிரச்சனை, மார்பக கட்டிகள் போன்ற நிறையப் பிரச்சனைகள் ஏற்படும் அபாயங்கள் இருக்கின்றன. இதனால் தான் எலாஸ்டிக் தன்மை இழக்காமல் இருக்க, இவற்றை செய்ய வேண்டியது அவசியம்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon