Link copied!
Sign in / Sign up
1
Shares

எதனால் சிசேரியன் என்பது தேவை?

சுகப்பிரசவத்தில் ஏற்படும் சிக்கலின் போது குழந்தையை எந்தவித சிக்கலின்றி மீட்க, சிசேரியன் என்பது பயன்படுகிறது. அதாவது தாயின் வயிற்றை கீறி குழந்தையை வெளியில் எடுப்பார்கள். அப்படி எடுக்கும்போது மயக்க நிலைக்கு தாய் தள்ளப்பட, உங்களை என்ன செய்கிறார்கள் என்பது கூட சில சமயத்தில் தெரியாது. 

எதனால் சிசேரியன் என்பது தேவை?

1. உங்கள் குழந்தை தலைகீழாக இருந்தால் மருத்துவர் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்வார்.

2. உங்கள் குழந்தை குறுக்கே காணப்பட்டால்...அதனால் பிறப்புறுப்பை நோக்கி வர இயலாது. அப்போது அறுவை சிகிச்சை என்பது அவசியமாகிறது.

3. உங்கள் வயிற்றில் இரண்டு குழந்தைகள் இருந்து, அவற்றுள் ஒன்றின் தலை கீழ் பகுதியில் இருந்தால் அறுவை சிகிச்சை அவசியமாகிறது.

4. குழந்தையின் நச்சுக்கொடி, கருப்பை வாயை பாதியாகவோ...அல்லது முற்றிலுமாகவோ சூழ்ந்திருந்தால், அறுவை சிகிச்சை அவசியமாகிறது.

சிசேரியனால் ஏற்படக்கூடிய விளைவு:

அறுவை சிகிச்சையின் மூலமாக குழந்தையை பெறுவதில் பல சிக்கல்கள் இருக்கிறது. அவை...

1. இரத்த போக்கு

2. இரத்த உறைதல்

3. காயத்தின் மீது தொற்று ஏற்படுவது

4. மயக்க நிலையில் இருப்பதில் கடினம்

5. சிறுநீர்ப்பை போன்ற கிழிக்கப்படும் இடத்திற்கு அருகாமையில் காணப்படும் உறுப்புகள் சேதமடைவது.

நீங்கள் உடல்பருமனுடன் இருப்பீர்கள் எனில், இதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்பது அதிகமாக இருக்கிறது. சுகப்பிரசவத்தை காட்டிலும் அறுவை சிகிச்சையினால் ஆன பிரசவமே பெரும் தாக்கத்தை பல நாட்களுக்கு தருகிறது. அறுவை சிகிச்சையினால் பிறக்கப்படும் ஒரு சில குழந்தைகளுக்கு மூச்சு தொந்தரவு என்பது சில வாரங்கள் காணக்கூடும். முதல்முறை அறுவை சிகிச்சை மூலம் ஒருவருக்கு குழந்தை பிறக்குமெனில், மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்வதற்கான ஆரோக்கியம் என்பது மிகவும் அவசியமாகிறது. 

உங்கள் வீட்டு தரை அழுக்காய் இருக்கிறதா? கவலை வேண்டாம்... இயற்கையாக சுத்தப்படுத்த இதோ நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம் டைனி ஸ்டெப் ப்ளோர் கிளீனரை. இந்த கிளீனரில் எந்த வித வேதி பொருளும் இல்லை. நச்சு தன்மையும் இல்லை. குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பானது. ஒருமுறை பயன்படுத்தினால், மீண்டும் வேறு எதையும் வாங்க உங்கள் மனம் முன்வராது. இப்போதே இதை நீங்கள் பெற முந்துங்கள். ஆர்டர் செய்ய இந்த பொத்தானை அழுத்தவும். கிளிக் செய்க...

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon