Link copied!
Sign in / Sign up
2
Shares

பிரசவத்தின்போது கொடுக்கப்படும் மயக்க மருந்தால் பிரசவம் பாதிக்கப்படுமா?

கர்ப்பம் என்பதை பற்றி எனக்கு நன்றாகவே தெரியுமென எந்த ஒரு கர்ப்பிணி பெண்ணும் எப்போதும் சொல்வதில்லை. காரணம், பிரசவம் என்பது புதுவித வலியை அவர்களுக்கு தருவதை அவர்கள் நாளுக்கு நாள் அறிய, அதில் காணப்படும் வித்தியாசம் கண்டும் ஆச்சரியப்படுகின்றனர். இதனால் கர்ப்பமாக இருக்கும் பெண் மனதில் பிறக்க போகும் தன் குழந்தையை பற்றிய பலவித கனவுகள் இருக்கும். மருந்து கண்டுபிடிக்காத காலத்தில் கர்ப்பம் என்றால் ஆரோக்கியமான உணவை மட்டுமே உண்டு கருவிலிருக்கும் குழந்தையை பலப்படுத்தினர். ஆனால் இன்றோ, மாதம் ஒரு தடுப்பூசி வரை கர்ப்பிணிகளுக்கு பரிந்துரை செய்யப்படுகிறது. இவை அனைத்திற்கும் காரணிகளாக குழந்தையின் வளர்ச்சி, அம்மாவின் உடல் எடை குறைவு, கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் என பலவும் அமைகிறது. இப்போது நாம் பார்க்கப்போவது பிரசவத்தின்போது போடப்படும் மரப்பூசி பற்றியாகும். இந்த தடுப்பூசியால் பிரசவத்தின் போது பிரச்சனை உண்டாகுமா? 

கர்ப்பத்தின்போது போடப்படும் தடுப்பூசி:

கர்ப்பிணிகள் அனுபவிக்கும் பிரசவ வலியை குழந்தை பிறப்பின்போது குறைத்திட ஊசி போடப்படுகிறது. அதாவது மயக்க மருந்தை ஊசியில் செலுத்தி கர்ப்பிணிகள் உடலில் ஏற்றுவர். 

இது தேவைதானா?

இதற்கான நடுத்தர பதிலை யாராலும் தர இயலாது. காரணம் ஒரு கர்ப்பிணி பெண் அனுபவிக்கும் வலியை அவள் பொறுத்துக்கொள்ளும் அளவை பொறுத்தே இந்த முறை என்பது அமைகிறது. ஆனால், பிரசவ வலி பெண்களுக்கு தெரியாமல் இருப்பதற்காக ஊசிகள் போடப்படுகிறது.

எப்படி வேலை செய்யும்?

மயக்க மருந்து எப்படி வேலை செய்யுமோ அதேபோல் தான் இந்த முறை என்பதும் அமைகிறது. இது என்ன செய்யுமென்றால், கருப்பையிலிருந்து உருவாகக்கூடிய வலியை கட்டுப்படுத்தி நரம்புகளை தற்காலிகமாக தடுக்கிறது. இந்த ஊசியை கர்ப்பிணிகளின் பின் முதுகில் செலுத்த, இதனால் பின் பகுதி மட்டும் உணர்வற்று இருக்கிறது. 

இதனால் என்ன விளைவுகள் உண்டாகும்?

1. இதனால் சில சமயத்தில் அடுத்து நடக்கக்கூடிய சுகப்பிரசவம் என்பது பாதிக்கப்படலாம்.

2. செயற்கை ஆக்ஸிடோசின் தேவையினால் தேவையற்ற விளைவை உடலில் ஏற்படுத்தக்கூடும்.

3. சிசேரியன் செய்யும்போது சில சமயத்தில் பிரச்சனைகளை விளைவிக்கக்கூடும்.

4. பிரசவத்தை நீட்டிக்கவும் செய்யும்.

5. சிராய்ப்புண் ஏற்பட ஆறுவதற்கான காலம் அதிகமும் தேவைப்படுகிறது.

6. பிறப்புறுப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை ஏற்படக்கூடும்.

7. எலும்பு இடமாற்ற பிரச்சனை ஏற்படலாம்.

8. அத்துடன் இடுப்பு பிரச்சனைகளால் குழந்தை பிறக்கும்போது பலவித பிரச்சனையை ஏற்படுத்தக்கூடும்.

நீங்கள் முதல் முறையாக தாயாக விரும்பினால், இந்த மருந்து பற்றிய உங்கள் கேள்வி மற்றும் குழப்பங்களை மருத்துவரிடம் கேட்டு, தெளிவு பெறலாம். 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon