Link copied!
Sign in / Sign up
3
Shares

எண்ணெய் வழியும் முகத்தால் அவதிப்படும் பெண்களுக்கான தீர்வு..!

எண்ணெய் பசை சருமம் கொண்ட நபர்களுக்கு சாதாரணமாகவே முகத்தில் எண்ணெய் வழியும்; அதிலும் கோடைகாலம் என்றால் சொல்லவே வேண்டாம். இவ்வாறு முகத்தில் எந்நேரமும் எண்ணெய் வழிந்தவாறு இருந்தால், முகம் பருக்கள் மற்றும் இதர சருமப்பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்; அது மட்டுமின்றி சருமம் நிறத்தையிழந்து கருமையாகவே காணப்படும். இதனைத் தடுக்க, எண்ணெய் பசை சருமத்தினர், ஒரு சில பொருட்களைக் கொண்டு, தினமும் சருமத்திற்கு பராமரிப்பு அளிக்க வேண்டும். 

எண்ணெய் பசை கொண்ட முகத்தினை, சருமத்தினை பராமரிக்க உதவும் சில வழிகள் குறித்து இந்த பதிப்பில் படித்தறிவோம்..!

#1. புதினா

புதினா இலைகளை நன்றாக அரைத்து சாறெடுத்து, அந்த சாற்றினை சருமத்தில் தடவி, சற்று நேரம் ஊற வைத்து, கழுவினால் சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் பசை சுரப்பது தடுக்கப்படும்; தினமும் இம்முறையை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

#2. கற்றாழை

கற்றாழை ஜெல்லை, முகத்தில் தடவி 10 நிமிடங்கள் வரை ஊற வைத்து, பின்னர் கழுவ வேண்டும்; எண்ணெய் பசை சருமத்தினர் தினமும் இதனை செய்து வந்தால், சருமத்தில் எண்ணெய் பசை கட்டுப்படுத்தப்படுவதோடு, சருமத்தின் நிறமும் அதிகரிக்க வாய்ப்புண்டு.

#3. ரோஸ் வாட்டர்

தினமும் ரோஸ் வாட்டரைக் கொண்டு, பல முறை முகத்தை துடைத்து வந்தால், சருமத்திலுள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி, முகத்திலுள்ள அழுக்குகளும் வெளியேறி, முகம் பளிச்சென இருக்கும்.

#4. எலுமிச்சை சாறு

எண்ணெய் பசை சருமத்தினர் எலுமிச்சை சாற்றினை முகத்தில் நேரடியாக தடவி 15 நிமிடங்கள் வரை ஊற வைத்து, பின்பு கழுவ வேண்டும்; இவ்வாறு எலுமிச்சை சாறு பயன்படுத்தி, வருவதன் மூலம் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

#5. வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயை நன்கு அரைத்து, அதனை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் வரை ஊற வைத்து, பின்னர் கழுவ வேண்டும்; இப்படி தினசரி செய்து வந்தால், சருமத்தில் எண்ணெய் பசை கட்டுப்படுத்தப்படுவதோடு, சருமத்துளைகளில் உள்ள அழுக்குகளும் முழுமையாக வெளியேற்றப்படம். இது முகத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும்.

#6. க்ரீன் டீ

தினசரி க்ரீன் டீ குடிக்கும் போது, அதில் சிறிது டீயை எடுத்து, முகத்தில் தடவி 10 நிமிடங்கள் வரை ஊற வைத்து கழுவ வேண்டும்; இவ்வாறு செய்வதன் மூலம் முகத்தில் எண்ணெய் வழிந்து காணப்படுவதைத் தடுக்கலாம்.

#7. ஐஸ்கட்டி

சருமத்தில் வழிந்து காணப்படுவதைக் கட்டுப்படுத்த ஐஸ் கட்டி உதவும்; ஐஸ் கட்டியை ஒரு துணியில் வைத்து, முகத்தை மிருதுவாக மசாஜ் செய்ய வேண்டும். இது சருமம் புத்துணர்ச்சியுடனும், எண்ணெய் வழியாமலும் இருக்க உதவும்.

#8. வேப்பிலை சாறு

வேப்பிலையை அரைத்து சாறெடுத்து - அதனை நீரில் கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடங்கள் வரை ஊற வைத்து பின் கழுவ வேண்டும்; இதனால் சருமத்தின் எண்ணெய் பசை முற்றிலுமாக கட்டுப்படுத்தப்படுவதோடு, முகப்பரு போன்ற சருமப் பிரச்சனைகளும் அகலும்.

#9. முட்டை வெள்ளைக்கரு

முட்டையின் வெள்ளைக்கருவை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவ வேண்டும்; இது சருமத்திலுள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்க உதவும்.

#10. தக்காளி சாறு மற்றும் தேன்

தக்காளி சாற்றில் தேன் கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடங்கள் வரை ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்; இம்முறையை தினமும் செய்து வந்தால், சருமத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon