Link copied!
Sign in / Sign up
1
Shares

பெற்றோர்களே! நீங்கள் செய்யும் 8 மருத்துவ தவறு இது தான்...

மருந்துகள் குழந்தைகள் உடல் நலத்தில் முக்கிய பங்காற்றுகின்றன. ஆனால் மருத்துவம் பற்றி அடிப்படை அறிவு இல்லையென்றால் பல பாதிப்புகள் மற்றும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும். எனவே, மருந்துகளை எடுப்பதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது. இங்கே நாம் பொதுவாக செய்யும் 8 மருத்துவ தவறுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த தவறுகளை தவிர்ப்பது மிகவும் நல்லது.

1. தவறான மருந்துகளை கொடுப்பது:

எப்போதும் மருந்தின் லேபிளில் கொடுக்கப்பட்டிருக்கும் வழிகாட்டுதல்களை, மருந்தை உபயோகிப்பதற்கு முன்பு படிக்கவும். மருந்தின் காலாவதி தேதியை சோதித்து பார்க்கவேண்டும். மேலும், அம்மருந்து உங்கள் குழந்தையின் வயதிற்கும் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் வியாதியின் அறிகுறிகளுக்கு ஏற்றதா என்பதை பார்க்க வேண்டும். மருந்துகளில் உள்ள லேபிளை நீக்குவதோ அல்லது மருந்துகளை வேறு பைகளில் அட்டைகளில் வைப்பதோ அல்லது மருந்துகளை ஒன்றாக கலப்பதோ கூடவே கூடாது. அடிக்கடி மருந்துகளை அவ்வப்போது பரிசோதித்து காலாவதியான மருந்துகளை அப்புறப்படுத்த வேண்டும். மேலும், மருந்துகளில் காலாவதி தேதி குறிப்பிடவில்லை எனில், உங்கள் வேதியியலாளருடன் சரிபார்க்கவும்.

2. அளவுக்கு அதிகமான மருந்துகளை கொடுப்பது:

பல மருந்துகளின் வேதியல் கூறுகள் ஒன்றாக இருந்தாலும் அவை வெவ்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிக்க கூடியது. உதாரணமாக, சளிக்கான மருந்துகள் அனைத்திலும் அசிடமினோபென் என்ற வேதியல் கூறு உள்ளது. இது டைலினால் என்ற மருந்திலும் உள்ளது. எனவே, உங்கள் குழந்தையின் சளி மற்றும் காய்ச்சலுக்கு டைலினால் கொடுப்பீர்கள் என்றால் அவர்கள் உடலில் தேவையானதை விட இரண்டு மடங்கு அசிடமினோபென் சேரும். எனவே, 6 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு சளி மருந்து வாங்குவதற்கு முன் அவர்களின் நோய் அறிகுறிகளை கவனிப்பது நல்லது.

3. மருத்துவரின் அறிவுரைகளை நிராகரிப்பது:

குழந்தைகளை மருந்துகள் எடுத்துக்கொள்ள வைப்பது மிகப்பெரிய காரியமாகும். எனவே, அவர்கள் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும் போது ஆன்டி பையோட்டிக்ஸ் கொடுப்பதை நிறுத்திவிடுவோம். ஆனால், அவ்வாறு செய்தால் பாக்டீரியாக்கள், மருந்துகளை எதிர்க்கும் திறனை பெற்று, மீண்டும் குழந்தைகளின் உடல் நலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். உங்கள் குழந்தையின் உடல் நலம் மீண்டும் குன்றினால், அவர்கள் மீண்டும் வேறு மருந்துகளை சிகிச்சை முடியும் வரை உட்கொள்ள வேண்டும். இதனால் பக்கவிளைவுகள் ஏற்படலாம். உங்கள் மருத்துவரிடம் மருந்துகளை உணவில் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாமா என்று கேட்டுக்கொள்ளுங்கள்.

4. பிற தேவைகளுக்கு மருந்துகளை கொடுப்பது:

உங்கள் குழந்தைக்கு ஒரு பிரச்சனைக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்தை வேறு பிரச்சனைக்கும் உபயோகப்படுத்துவது மிகவும் தப்பான ஒன்று. உதாரணமாக, பெற்றோர்கள் குழந்தைகள் தூங்க வேண்டும் என்பதற்காக பெனட்ரிலை கொடுக்கிறார்கள். ஆனால் 11% குழந்தைகள் மருந்து எடுத்துக் கொண்ட பிறகு அமைதியாக இல்லாமல் உற்சாகமாக இருக்கிறார்கள் என்பதே உண்மை. ஆய்வாளர்கள், பெனிட்ரில் குழந்தைகளுக்கு தூக்கத்தை வரவழைக்கும் என்று நிரூபிக்க ஆய்வு செய்த போது, அது குழந்தைகளை மேலும் சுறுசுறுப்பாக்கும் என்று ஆய்வின் முடிவில் தெரிய வந்தது.

5. ஒரு குழந்தைக்கு கொடுக்கும் மருந்தை மற்றொரு குழந்தைக்கு கொடுப்பது:

உதாரணமாக, உங்களின் ஒரு குழந்தைக்கு தொண்டை தொடர்பான பிரச்சனைக்கு சிகிச்சையளித்து கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்போது உங்களின் இரண்டாவது குழந்தைக்கும் தொண்டை தொடர்பான பிரச்சனை வருகிறது என்றால், மற்ற குழந்தைக்கும் கொடுக்கும் அதே மருந்தை, பிரச்சனை என்னவென்று பரிசோதிக்காமல் இரண்டாவது குழந்தைக்கும் கொடுப்பது மிகவும் தவறு. ஏனெனில், பிரச்சனை வேறாக இருந்தால், அந்த குழந்தையின் உடல்நலம் இன்னும் மோசமாக வாய்ப்பிருக்கிறது. மருத்துவரின் அனுமதியின்றி குழந்தைகளுக்கு மருந்துகள் கொடுப்பது மிகவும் தவறு. எனவே, குழந்தைகளை பரிசோதிப்பதை மருத்துவரிடம் விட்டுவிட வேண்டும். மேலும், உங்கள் குழந்தை போலவே பிரச்சனை உள்ள மற்றவரின் மருந்துகளை உங்கள் குழந்தைக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு குழந்தையின், வயது, உடல் எடை, நோய் அறிகுறிகள் பொறுத்து அவர்களுக்கு மருந்துகளின் அளவும் வீரியமும் வேறுபடும்.

6. மருந்துகளின் அளவை எடையை பொறுத்து தீர்மானிக்காமல், வயதை பொறுத்து தீர்மானிப்பது:

குழந்தைகள் மருந்தின் வளர்ச்சிதை மாற்றம், அவர்களின் உடல் எடையை பொறுத்து நடக்கும்; வயதை பொறுத்து அல்ல. இது மிகவும் முக்கியமான ஒன்று; குறிப்பாக உங்கள் குழந்தை அதிக உடல் எடையுடனோ அல்லது மிக குறைந்த உடல் எடையுடனோ இருந்தால். ஒரு ஆய்வில், அதிக எடையுள்ள குழந்தைகள் காஃபின் மற்றும் டெக்ரோமெதோர்ஃபோன் ( இவை அதிகளவு இருமல் மருந்துகளில் உள்ளது ) ஆகியவற்றின் வளர்சிதை மாற்றத்தைக் சீரான உடல் எடை கொண்ட குழந்தைகளை காட்டிலும் அதிகளவில் செய்கிறார்கள். எனவே, அவர்களுக்கு அதிக வீரியம் உள்ள மருந்துகளை கொடுக்க வேண்டும். உங்கள் மருத்துவரின் அறிவுரைப்படி மருந்துகளை கொடுப்பது நல்லது.

7. சரியான இடைவேளையில் மருந்துகளை கொடுக்காமல் இருப்பது:

உங்கள் மருத்துவர் கூறிய அட்டவணை படி மருந்துகளை கொடுக்க வேண்டும். தொடர்ந்து மருந்துகளை கொடுத்துக்கொண்டே இருக்க கூடாது. அதே போல், ஒரு நாளைக்கு தேவையான மருந்துகளை விட அதிகளவு மருந்துகளையும் கொடுக்க கூடாது. இரண்டு மருந்துகளுக்கு இடையே மாற்றங்கள் செய்வது இந்திய குழந்தை மருத்துவ சங்கத்தால் பரிந்துரைக்கப்படாத ஒன்று. ஏனெனில், இதனால் மருந்துகளின் வீரியம் அதிகமாகலாம்.

8. மருந்துகளை முறையாக பராமரிக்காதது:

மருந்துகளை ஒரு குளிர்ந்த மற்றும் உலர்ந்த இடத்தில் வைக்க வேண்டும். அதுமட்டுமின்றி, அவற்றை ஒரு பாதுகாப்பான பெட்டியில் போட்டு, குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்க வேண்டும். சரியான மருந்து லேபிள்கள் இல்லையென்றால், ஒரு மருந்துக்கு பதிலாக வேறு மருந்தை உபயோகிக்க நேரிடும். மருந்துகளின் அளவை சரி பார்க்க திரவ மருந்துகள் குறிப்பிட்ட அளவீடுகளோடு வருகின்றன (மிலி, டீஸ்பூன், டேபிள்ஸ்பூன்). மருந்துகளை ஸ்பூனில் கொடுக்க நீங்கள் விரும்புவீர்கள் என்றாலும் அதன் அளவில் இருக்கும் மாற்றங்கள் காரணமாக மருந்துகளின் அளவும் வேறுபடும். எனவே, டீஸ்பூன் போன்றவற்றில் அளக்காமல் மில்லிலிட்டரில் அளப்பது சிறந்தது. அதை ஒரு ஒரு வாய்வழி சிரஞ்ச் அல்லது ஒரு சிறிய அளவை கப்பை பயன்படுத்தலாம்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

Recently, we launched a baby-safe, natural and toxin-free floor cleaner. Recommended by moms and doctors all over India, this floor-cleaner liquid gets rid of germs and stains without adding harmful toxins to the floor. Click here to buy it and let us know if you liked it.

Stay tuned for our future product launches - we plan to launch a range of homecare products that will keep your little explorer healthy, safe and happy!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon