Link copied!
Sign in / Sign up
0
Shares

எது குழந்தைகளுக்கு ஏற்றது? வீட்டு உணவுகள் vs வெளி உணவுகள்..!

குழந்தைகள் பிறந்த முதல் 6 மாதத்திற்கு தாய்ப்பால் அளித்து, ஆரோக்கியம் அளித்த பெண்கள், பின் குழந்தைக்கு ஆரோக்கியமான உணவை தர தவறிவிடுகின்றனர். இன்றைய காலத்தில், குழந்தைகள் வீட்டில் செய்யும் உணவுகளை விட, வெளியில் சென்று சாப்பிட அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதனை கண்டித்து,நல்லறிவு புகட்ட வேண்டிய பெற்றோரும் குழந்தைகளின் ஆசைக்கு இணங்கிவிடுகின்றனர். இப்படி குழந்தைகளின் உணவு விஷயத்தில் வீட்டில் செய்யும் உணவு சிறந்ததா இல்லை வெளிஉணவு உகந்ததா என்ற குழப்பம் உள்ளது. இக்குழப்பத்தைத் தீர்க்கும் வகையிலேயே  இந்த பதிப்பு..!

குழந்தைகளுக்கு அளிப்பதில் வீட்டில் செய்த உணவு நல்லதா? இல்லை வெளியில் இருந்து வாங்கி வரும் உணவு நல்லதா? என்பதை இந்த பதிப்பில் படித்தறிவோம்..!

வெளிஉணவு..!

பொதுவாக கடைகளில் விற்கும் ஷெரலக் போன்ற இதர உணவுகளை தற்காலத்தில், பெற்றோர்கள் குழந்தைகளுக்கு அளிக்கத் துவங்கி, வளர வளர அனைத்து வகை அங்காடி உணவுகளையும் அளித்துவிடுகின்றனர். வெளியில் விற்கப்படும் உணவு FDA அங்கீகாரம் பெற்றிருந்தால் மட்டுமே குழந்தைக்கு அளிக்கலாம்; இல்லையேல், வெளி உணவுகளை தவிர்த்து விடுவது நல்லது.

சாதகங்கள்..!

- சத்துக்கள் கொண்டிருக்கும்

- நீண்ட நாள் உபயோகம்

- பயணத்திற்கு ஏற்றது

பாதகங்கள்..!

- உணவு எப்படி தயாரிக்கப்பட்டது என்பதை அறியமாட்டோம்..!

- செயற்கை மற்றும் வேதிப்பொருட்கள் இருக்கலாம்

- விலை அதிகம்

வீட்டு உணவு..!

வீட்டில் நாம் தயாரிக்கும் உணவுகளில், சேர்க்கப்படும் பொருட்கள் பற்றிய முழுமையான தகவல் தெரிந்திருக்கும்; மேலும் எப்படி தயாரிக்கப்படுகிறது என்றும் அறியப்பட்டிருக்கும். உணவு தயாரிப்பு சுகாதாரமானதாகவும், சுத்தமாகவும் இருக்கும். உணவு ஆரோக்கியமானதாக இருக்கும். புதிய பொருட்களையே பயன்படுத்தி உணவு தயாரிக்கப்படும். மேலும் உணவில், அன்னையின் பாசம் கலந்திருக்கும்.

சாதகங்கள்..!

- புதிய பொருட்கள் மட்டுமே பயன்படுத்தப்படும்

- உணவில் என்னென்ன சேர்க்கப்பட்டுள்ளது, என்பதை அறியலாம்

- விலை மலிவானதே!

பாதகங்கள்..!

- உணவு, குறைந்த ஆயுள் காலம் கொண்டது

- முதல்முறை, பொருட்கள் வாங்கும் தொகை அதிகம்

- உணவு தயாரிக்க நேரம் எடுக்கும்.

வீட்டு மற்றும் வெளி உணவுகளுக்கிடையில் இருக்கும் இந்த வேறுபாடுகளே, உணவின் தரத்தையும் ஆரோக்கியத்தையும் தீர்மானிக்கின்றன. இதன்பின் முடிவு உங்கள் கையில்..!

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon