Link copied!
Sign in / Sign up
1
Shares

எடையைக் குறைக்க குளிர்கால உணவுகளா? அவையென்ன?

உலகில் ஏற்கனவே ஏற்படுத்திய விதிகளை, வரைமுறைகளை மாற்றி அமைப்பது மனித உடலின் செயல்பாடுகளே! எதையும் எளிதில் அழித்துவிடலாம்; ஆனால் உண்டாக்குவது கடினம். இந்த கூற்றை மாற்றி அமைக்கும் விதமாக, உடல் எடையை அதிகரிப்பது எளிது; ஆனால், அதை குறைப்பது கடினம். இந்த வகையில் நாம் உண்டாக்கிய உடல் எடையை குறைக்க படாதபாடு பட்டிக்கொண்டிருக்கிறோம், இன்றைய சூழலில்...! உடல் எடையை விரைவாக குறைக்க சில குளிர்கால உணவுகள் உதவுகின்றன. அவ்வுணவுகள் என்னென்ன என்று இந்த பதிப்பில் படித்தறியலாம்..!

1. கேரட்

குளிர் காலத்தில், இறைச்சி மற்றும் புலால் உணவுகளுக்கு பதிலாக கேரட்டை உட்கொள்ளலாம். கேரட்டில் கலோரிகள் குறைவு; இது எளிதாக செரிமானம் ஆகி விடும். இதனால் உடல் எடை அதிகரிக்காது காக்க முடியும்.

2. பசலைக்கீரை

பொதுவாகவே, கீரை உணவுகளில் நார்ச்சத்து அதிகம்; கீரைகள் செரிமானத்தை சரிசெய்து பசி அதிகம் ஏற்படுவதைக் குறைக்கும். கீரைகளில் இருக்கும் ஆன்டி ஆக்சிடன்ட் குளிர் காலத்தில் உடலுக்கு நல்ல உடற்சக்தியை அளிக்கிறது.

3. உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு உடல் எடையை அதிகரிக்கும் என்று தான்எண்ணுகிறோம். ஆனால், உருளையில் இருக்கும் கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்து, உடலில் தேங்கக் கூடிய கெட்டக் கொழுப்பை கரைக்க உதவுகிறது. உடல் எடையை நன்கு குறைக்க, உருளைக்கிழங்கைத் தோலோடு வேக வைத்து சாப்பிடுவது நல்லது.

4. வெங்காயம்

வெங்காயத்தில் உள்ள க்ரோமியம் எனும் பொருள் உடல் எடையை குறைக்க, நல்லதொரு கருவியாக உதவுகிறது; மேலும், இதிலிருக்கும் தாதுக்கள் உடலின் குளுக்கோஸ் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவுகிறது.

5. முள்ளங்கி

முள்ளங்கியில், நிறைய நார்ச்சத்து மற்றும் நீர் இருக்கிறது. முள்ளங்கி பசியை குறைத்து, தேவையற்ற நொறுக்கு தீனி உண்பதையும் தடுக்கிறது; எனவே, உடல் எடை அதிகரிப்பதை நன்கு குறைக்க முடியும்.

 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon