Link copied!
Sign in / Sign up
7
Shares

எடையை குறைக்க உதவும் 7 ஜாலியான வழிகள்..!

உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நம்மில் பலர் பிரம்மபிரயத்தனம் செய்து வருகின்றனர். இதற்காக பலர் ஜிம்மில் சேர்ந்து காசையும் நேரத்தையும் கரியாக்குகின்றனர். உடல் எடையை குறைப்பதற்கு உதவும் பல எளிய வழிகள் உள்ளன; அவற்றில் சில வேடிக்கையான வழிகளும் உள்ளன. அவற்றை குறித்து, இந்த பதிப்பில்  படித்து அறியலாம்...! 

1. ஜும்பா - Zumba

ஜும்பா நடனம் உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. லத்தீன் நாட்டில் தோன்றிய இந்த நடனம், ஒரு மணி நேரத்தில் 450 கலோரிகள் வரை குறைக்க உதவுகிறது. இதை காணொளி பார்த்தே எளிதில் கற்றுக் கொள்ளலாம்..!

2. Belly dance

இந்த பெல்லி நடனத்தை தினசரி வாழ்வில், 10 நிமிடங்கள் வரை செய்தலே போதும். ஒல்லியான அழகிய தேகத்தை எளிதில் பெறலாம்..!

3. Hula hoops

இந்த ஹுலா ஹூப்ஸ் மூலம் எடையை நன்றாக குறைக்க இயலும். தினம் ஒரு மணி நேரம் செய்தலே இது நல்ல பலனைத் தரும். இது சமநிலை கொண்டு, உடல் எடை குறைக்க ஏற்றது. முதலில் எடை குறைந்த ஹூப்ஸ் பயன்படுத்தி, பின் கனமான ஹூப்ஸ் பயன்படுத்த முற்படலாம்..!

 

4. Masala Bhangra Workout

பஞ்சாபி மொழி பாடல்களை ஒலிக்க செய்து, அப்பாடலுக்கு நடனம் ஆடியே உங்கள் எடையை குறைக்கலாம். பஞ்சாபி மொழி பாடல்கள் அனைத்து வயதினராலும் விரும்பப்படுவதாக உள்ளது. இதன் கானத்திற்கு நடனம் ஆடுவது, உங்கள் உடல் கலோரிகளை குறைக்க உதவும்..

5. Kick boxing

கிக் பாக்ஸிங் பயிற்சியை செய்து பார்க்கலாம். இது உடல் எடை குறைய பெரிதும் உதவும். கிக் பாக்ஸிங் மூலம் உடல் கலோரிகளை பெரிதும் குறைத்து, அழகான தோற்றம் பெறலாம்..!

6. Hip hop dance

இந்த ஹிப் ஹாப் நடனமும் உடல் எடையை எரிக்க மிகவும் உதவும்.. இது ஆடி மகிழவும் ஏற்றது; மனதிற்கு இதமான சூழலை இசை மூலமாக அளிக்கும், இந்த நடனம். ஆகையால், இந்த நடனமும் உடல் எடை குறைக்க சிறந்ததே!

7. Fitness video games

உடல் எடையை குறைக்க சில வீடியோ கேம் விளையாட்டுகள் உதவுகின்றன. அவ்விளையாட்டுகளை விளையாடுவதன் மூலம் உடல் கலோரிகளை எளிதில் எரிக்கலாம்..! இது உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது..!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon