Link copied!
Sign in / Sign up
1
Shares

எடையை குறைக்க உதவும் 5 வேடிக்கையான வழிகள்..!

இன்றைய சூழலில், உடல் உழைப்பால் உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்ற நிலை மாறி, உட்கார்ந்த இடத்தில் இருந்தே பணம் சம்பாதிக்க தொடங்கிவிட்டோம். இந்த நிலை நம் உடல் உழைப்பைக் குறைத்து, உடல் எடையை அதிகப்படுத்தி வருகிறது. எனவே, உடல் எடை அதிகரிப்பால் நம்மில் பலர் பல்வேறு நோய்களுக்கும், பாதிப்புகளுக்கும் உள்ளாகின்றனர். இந்த பாதிப்புகளை, நோய்களை தடுக்க உடல் எடையை குறைக்க வேண்டியது அவசியம். இந்த பதிப்பில் உடல் எடையை குறைக்க உதவும்  ஜாலியான வழிகள் பற்றி படித்தறியலாம்..!

1. நண்பருடன்..!

உடல் எடையை குறைக்க மேற்கொள்ளும் முயற்சியை நண்பர்களுடன் பேசிக்கொண்டே சேர்ந்து செய்தால், நண்பருடன் நேரம் செலவளித்தது போலும், உடல் எடை குறைக்க உடற்பயிற்சி செய்தது போலும் இருக்கும். மேலும் நண்பர்களுக்கிடையில், போட்டி போன்று வைத்து யார் முதலில் எடையை குறைத்து காட்டுகின்றனர் என்பது போல் விளையாட்டாக எடையை குறைத்து விடலாம்..! இது ஜாலியாகவும் இருக்கும்..

2. பரிசு..

உடல் எடையை இந்த நாளுக்குள் குறைத்தால், இந்த பரிசு என உங்களுக்கு நீங்களே இலக்கு அமைத்துக் கொண்டு, அதை அடைய முயற்சி செய்யலாம். மேலும் நீங்கள் வாங்க துடிக்கும் விஷயத்தை இலக்காக அமைத்தால், அதை கட்டாயம் அடைய வேண்டும் என்ற வெறியே, எண்ணமே, உடல் எடை குறைக்கும் பயிற்சியில் நீங்கள் ஒழுங்காக செயல்பட உதவும்..!

3. நடனம்..!

உடல் எடையை குறைக்க என சில பிரத்யேக நடன முறைகள் உள்ளன; அவற்றை கற்றுக்கொண்டு, அவற்றை செய்து உடல் எடை குறைப்பில் ஈடுபடலாம்; இது உடல் எடையை குறைக்க உதவுவதோடு, மனதிற்கு மகிழ்ச்சியையும் தரும்..! மேலும் ஏதேனும் படம், பாடல் பார்த்துக்கொண்டு 'த்ரெட்மில்' எனும் சாதனத்தின் உதவி கொண்டும் எடையை குறைக்க முயலலாம்..!

4. உணவுகள்..!

சுவையான, அதேசமயம் உடல் எடையை குறைக்க உதவும் உணவுகளை உட்கொண்டு எடை குறைப்பில் ஈடுபடலாம். இது விரைவான மற்றும் சரியான பலனைத் தரும்..!

5. பயணம்..!

நீங்கள் எங்கு செல்ல வேண்டுமாயினும் அது 5 கிமீ தூரத்திற்கு குறைவாக இருந்தால், நடைப்பயணம் மேற்கொள்ளலாம்; இது புது அனுபவத்தை தரும். மேலும் 5 கிமீ மேலிருந்தால், சைக்கிளின் மூலம் சென்று வரலாம். இது உடல் எடையை குறைக்கவும், தசைகளை வலுப்படுத்தவும் உதவும்..!

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

Recently, we launched a baby-safe, natural and toxin-free floor cleaner. Recommended by moms and doctors all over India, this floor-cleaner liquid gets rid of germs and stains without adding harmful toxins to the floor. Click here to buy it and let us know if you liked it.

Stay tuned for our future product launches - we plan to launch a range of homecare products that will keep your little explorer healthy, safe and happy!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon