Link copied!
Sign in / Sign up
8
Shares

Dyslexia (கற்றல் குறைபாடு)- ஐ தோற்கடிக்க உதவும் 6 வழிகள்..!

"கல்வி என்பது வாழ்க்கைக்காக தயார் செய்யப்படும் விஷயமல்ல; கல்வி என்பதே வாழ்க்கை.." இன்றைய நாட்களில் நாம் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கத் துவங்கிவிட்டோம். இது நல்ல விஷயமே! ஆனால், அனைத்து குழந்தைகளும் ஒரே மாதிரியான திறன் கொண்டிருப்பதில்லை, என்பதை உணராமல் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை படிக்கவும், நல்ல மதிப்பெண் பெறவும் வற்புறுத்துகின்றனர். படிப்பதில் குழந்தைகளுக்கு உள்ள பிரச்சனைகள் குறித்தும், அவர்களை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்தும் இந்த பதிப்பில் பார்க்கலாம்..

1. பலவிதம்..!

கற்றல் குறைபாடு கொண்ட குழந்தைகளால், புத்தகத்தில் உள்ள எழுத்துக்களை, வார்த்தைகளை, வாக்கியங்களை படிக்க முடியாது, படித்தாலும் புரிந்து கொள்ள இயலாது தவிப்பர். ஆகையால், இவ்வகை குழந்தைகளுக்கு ஹெலன் கெல்லர் போல், தொடுதல் மூலமும், கேட்டல் மூலமும் கற்குமாறு ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் குழந்தைகளுக்கு அனைத்து விஷயங்களையும் நேரில் கண்டு, அனுபவித்து உணருமாறு கற்பிக்க வேண்டும். உதாரணமாக, தண்ணீர் என்பதை வெறும் வார்த்தையாக கூறாமல், தண்ணீர் என்றால் என்ன என்பதை உணரச் செய்ய வேண்டும்.

2. சாதனங்கள்..!

இவ்வகை குழந்தைகளுக்கு கற்பிக்க சில சாதனங்கள் உள்ளன. அவை;

Pocket Spell Checkers: இதில் வார்த்தைகளுக்கான சரியான எழுத்துக்கள் இருக்கும்; அதைக் கொண்டு குழந்தைகள் வார்த்தைகளை எளிதில் கற்கலாம்.

Line Readers: புத்தகத்தில் உள்ள வரிகளை கற்க கஷ்டப்படும் குழந்தைகளுக்கு, வரிகளை முக்கியமாக்கி காட்டி கற்க உதவும்.

Technologies: Distraction-free editors (Such as Zenpen.io), Speech recognition technology, text-predictor, Spell check technology, etc இது போன்ற தொழில் நுட்பங்களையும் பயன்படுத்தலாம்..!

3. ஏற்பாடுகள்..!

குழந்தைகள் எளிதில் கற்க சரியான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அவை;

-குழந்தைகளிடம் மெதுவாக பேசி, புரிய வைக்க வேண்டும்

-குழந்தைகள் கற்க வேண்டியவற்றை, வெவ்வேறு விதங்களில் புரிய வைக்க முயலலாம்

-குழந்தைகளுக்கு, குடுத்த வேலையை முடிக்க போதுமான நேரம் அளிக்க வேண்டும்

-அவர்கள் உண்டாகும் பிழைகளை சுட்டிக்காட்டி திருத்துவது

-குழந்தைகளின் பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து அதற்கேற்றவாறு நடப்பது

4. விளையாட்டுகள்..!

விளையாட்டுகள் மூலம் குழந்தைகளுக்கு கற்பிக்க முயலலாம். இதில் குழந்தைகள் இரசித்து, மகிழ்ந்து கற்பர்.

5. பெற்றோர் & ஆசிரியர்..!

குழந்தைகள் கற்றல் குறைபாடு கொண்டிருந்தால், அவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர், குழந்தைகளின் மீது தனிக்கவனம் செலுத்தி கற்பிக்க முயற்சி செய்ய வேண்டும். குழந்தைகளிடம் அன்பு, அரவணைப்பு காட்டி கற்பிக்க வேண்டும்.

6. உறுதுணை...

இவ்வகை குழந்தைகள் கற்க அதிக நேரம் எடுக்கலாம்; அவர்களுக்கு பொறுமையுடன் கற்றுத் தந்து, உறுதுணையாக இருந்து, அவர்கள் வாழ்வில் உயர உதவ வேண்டும்..!

Albert Einstein, Pablo Picasso, Tom Cruise, and Spielberg இவர்கள் அனைவரும் dyslexia எனும் கற்றல் குறைபாடோடு பிறந்து, வாழ்வில், கல்வியில் வெற்றிக்கொடி நாட்டியவர்கள்..! இவர்களை போல், உங்கள் குழந்தைகளும் வாழ்வில் வெற்றி பெற முடியும்; அவர்களை ஊக்கிவியுங்கள்..! கண்டிப்பாக உங்கள் குழந்தைகள் வெற்றி பெறுவார்கள்..!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon