Link copied!
Sign in / Sign up
8
Shares

தாய்ப்பால் தரும்போது நீங்கள் பருக வேண்டியதும்! பருக்கக்கூடாததும் என்ன?

தாய்ப்பால் தரும் தாய்மார்கள் நீர் வறட்சி அற்று தன் உடலை தக்க வைத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். உங்களுக்கு அசதியாக இருக்கும்போது சுத்தமான நீரை பருகலாம். ஆனால், அதேபோல் எல்லா வகையான நீர் ஆகாரத்தையும் நீங்கள் எடுத்துக்கொள்ளக்கூடாது. எது உங்கள் தாய்ப்பால் சுரப்புக்கு உதவுமோ அதை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம்.

தண்ணீர்:

இது முந்தைய காலத்தில் கர்ப்பிணிகள் கடைப்பிடித்த ஒரு விஷயம் என்றாலும், இன்று வரை இந்த வழியை தான் எத்தனையோ அம்மாக்கள் பின்பற்றி வருகின்றனர். அதனால் எதை பழக்கப்படுத்துகிறார்களோ இல்லையோ... கண்டிப்பாக தண்ணீர் அதிகம் பருகுவதை பழக்கப்படுத்தி கொள்ளவேண்டும். அதாவது ஒரு நாளைக்கு 13 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.

மூலிகை தேநீர்:

இது மிகவும் டேஸ்டான ஒன்றாக அமைவதோடு அம்மாக்களுக்கு தேவையான தாய்ப்பாலையும் தருகிறது. அதேபோல் தாய்ப்பால் தருவதற்கு ஏதுவான மூலிகையை மட்டுமே நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். ஏனெனில், மூலிகை என்பது மிகவும் சக்தி வாய்ந்தது. நீங்கள் தவறான மூலிகையை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் தேவையற்ற பிரச்சனையை சந்திக்க நேரிடும்.

பாதாம் பால்:

இந்த பாதாம்பால் என்பது தாய்ப்பாலை நிறுத்தும் தாய்மார்களுக்கு பெரிதும் உதவுகிறது. ஆம், உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த யோசிக்கும் அம்மாக்கள் இந்த பாதாம் பால் பருகுவதன்  மூலம் தாய்ப்பாலை மறக்கடிக்க செய்யலாம்.

பழச்சாறு:

தாய்ப்பால் தரும் நீங்கள் தினமும் ஒரு கிளாஸ் பழ சாறு குடித்திடலாம். அதிக ப்ரெக்டோஸ் அடங்கிய சோழ சிரப்பை சேர்த்துக்கொள்வதை தவிர்த்து பிரெஷ் ஜூஸ் குடிப்பது மிகவும் நல்லது. 

பீர் குடிக்கலாமா?

ஒரு சிலர் பீர் குடிப்பதால் தாய்ப்பால் சுரக்கும் என சொல்வார்கள். ஆனால் இதை நம்பாதீர்கள். இது உண்மையல்ல. ஆம், தாய்ப்பால் மற்றும் ஆல்கஹால் என்பது சரியான கலவையாக ஒருபோதும் அமைவதல்ல. ஒரு ஆய்வின் படி தெரியவருவது என்னவென்றால், தாய்ப்பால் தரும் தாய்மார்கள் ஆல்கஹாலை சேர்த்து கொள்வதால் தூக்கமின்மையை ஏற்படுத்தும் என தெரியவருகிறது.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon