Link copied!
Sign in / Sign up
10
Shares

சுக்கு மிளகு குழம்பு செய்வது எப்படி?

மருத்துவ குணங்கள் நிறைந்த மூன்று பொருட்கள் என நம் சிறுவயதிலே படித்ததுண்டு. ஆம், அது தான் சுக்கு, மிளகு திப்பிலி என்பதாகும். ஒருவருக்கு இருமல் மற்றும் சளி இருக்குமெனில் உடனே சுக்கு பால் போட்டு குடிக்க சொல்வார்கள். அதுவே சுக்கு மற்றும் மிளகை கொண்டு ஒரு குழம்பு செய்து சாப்பிட்டால் எப்படி இருக்கும்? யோசித்து பாருங்களேன். 

பயன்கள்:

இந்த சுக்கு மிளகு குழம்பு அஜீரண கோளாறு, வயிற்றுக்கோளாறு பிரச்சனைகள், பசியின்மை, குமட்டல், வாந்தி, உடல் வலி, காய்ச்சல், மாதவிலக்கு, போன்ற பிரச்சனைகளுக்கு மிகவும் சிறந்த மருந்தாக இருக்கிறது. இந்த சுக்கு மிளகு குழம்பு உடலுக்கு ஆரோக்கியத்தை தரவல்லதும் கூட.

தேவையான பொருட்கள்:

மிளகு - 2 தேக்கரண்டி 

சுக்கு - 1 தேக்கரண்டி 

உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி 

துவரம் பருப்பு - 2 தேக்கரண்டி 

காய்ந்த மிளகாய் - 4 

பூண்டு - 6 பல் 

தனியா - 2 தேக்கரண்டி 

வெல்லம் - சிறிதளவு 

புளி - ஒரு எலுமிச்சை அளவு 

கறிவேப்பிலை - சிறிதளவு 

எண்ணெய் - தேவையான அளவு 

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

1. ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெயை ஊற்றி கொள்ளவும். 

2. எண்ணெய் சூடானதும், அதில் காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, மிளகு, சுக்கு, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, தனியா ஆகியவற்றை தனித்தனியே வறுத்து ஆற வைக்கவும். 

3. பொருட்கள் நன்றாக ஆறியதும், அதனுடன் பூண்டு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். 

4. ஒரு பாத்திரத்தில் புளியை இட்டு, தேவையான அளவு நீர் ஊற்றி ஊற வைத்து, கரைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். 

5. அதன்பின்னர் ஒரு பாத்திரத்தில் புளிக்கரைசலை ஊற்றி, அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். 

6. அது நன்கு கொதித்ததும், அதில் அரைத்து வைத்த கலவையை சேர்த்து மீண்டும் கொதிக்க விடுங்கள். 

7. எண்ணெய் தனியாகப் பிரிந்து வருகையில், அடுப்பிலிருந்து குழம்பை இறக்கிவிட வேண்டும். 

8. அதனுடன் சிறிது வெல்லம் சேர்த்து கலக்கினால், சுவையான சுக்கு மிளகு குழம்பு தயாராகிவிடும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon