கழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால், தற்போதைய மோசமான உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையால், ஏராளமானோருக்கு, முக்கியமாக குழந்தைகளுக்கு தைராய்டு பிரச்சனை ஏற்படுகிறது. அனைவருக்கும் ஏற்படும் தைராய்டு பிரச்சனையைப் பற்றி இப்பதிப்பில் காணலாம்…!!
பொதுவாக தைராய்டு சுரப்பியில் சுரக்கப்படும் ஹார்மோன்கள் உடலின் மெட்டபாலிசம் மற்றும் வளர்ச்சியில் முக்கிய பங்கை வகிக்கிறது. இந்த தைராய்டு சுரப்பியில் இருவகையான பிரச்சனைகள் வரக்கூடும்.
அவை ஹைப்பர் தைராய்டு மற்றும் ஹைப்போ தைராய்டு ஆகும். இங்கு இந்த தைராய்டு பிரச்சனையை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
ஹைப்பர் தைராய்டு
ஹைப்பர் தைராய்டுஎன்பது தைராய்டு சுரப்பியில் அளவுக்கு அதிகமாக தைராய்டு ஹார்மோன்கள் சுரக்கும் நிலையாகும்.
அறிகுறிகள்
1. அதிகமாக வியர்ப்பது
2. தும்மல்
3. எதிலும் கவனம் செலுத்த முடியாமல் இருப்பது
4. நினைவாற்றல் பிரச்சனை
5. மோசமான குடலியக்கம்
6. படபடப்பு
7. மன அழுத்தம்
8. எடை குறைவு
9. மாதவிடாய் பிரச்சனைகள்
10. அதிகப்படியான சோர்வு
ஹைப்போ தைராய்டு
ஹைப்போ தைராய்டு என்பது தைராய்டு சுரப்பியின் மோசமான செயல்பாட்டால், போதிய அளவு தைராய்டு ஹார்மோன்கள் சுரக்கப்படாத நிலையாகும்.
அறிகுறிகள்
1. நகங்களில் வெடிப்பு
2. மலச்சிக்கல்
3. உடல் பருமன்
4. தசைப் பிடிப்புகள்
5. மோசமான மாதவிடாய் கால இரத்தப் போக்கு
6. கழுத்தின் முன் பகுதியில் வீக்கம்
7. மிகுதியான களைப்பு
8. நினைவாற்றல் பிரச்சனை
9. வறட்சியான சருமம் மற்றும் தலைமுடி
10. மன இறுக்கம்
யாருக்கு வரலாம்..??
1. கர்ப்பகாலத்தில், கர்ப்பிணிகள் இப்பிரச்சனையால் பாதிக்கப்படலாம்.
2. பரம்பரை வழியாக வரலாம்.
3. பொதுவாக, பெண்களில் இப்பிரச்சனை அதிகம் காணப்படும்.