Link copied!
Sign in / Sign up
8
Shares

எட்டாவது மாத கர்ப்பிணிகள் என்ன செய்ய வேண்டும்? செய்யக்கூடாது?

கர்ப்பத்தின் கடைசி மூன்று மாதங்களில் மிகவும் கடினத்தை உணர, எட்டாவது மாதம் நீங்கள் ஓய்வில் இருக்க வேண்டிய ஒரு மாதமாக அமைகிறது. அத்துடன் பிரசவத்திற்கு தயாராகும் நீங்கள் மூச்சு விடுகிறீர்களா? என்பதைக்கூட உணர மறக்கும், ஒரு தருணமும் கூட... ஒரு வித பதட்டமும் எரிச்சலுடன் உங்களுக்கு ஏற்படக்கூடும். ஆனால் இவை அனைத்தும் ஒருவித நன்மைக்கே என்பதை பிரசவத்தின் பின்னால் பிள்ளையை தூக்கி கொஞ்சும் போது உங்களுக்கு தெரிகிறது.    

எட்டு மாத கர்ப்பிணிகள் என்ன எதிர்ப்பார்க்க வேண்டும்?

எட்டாவது மாதத்தில் ஏற்படக்கூடிய கர்ப்ப மாற்றங்கள் எல்லாமே மிகவும் முக்கியமானவை. கர்ப்பிணிகளின் கடைசி 3 மாதங்களில் எண்ணற்ற மாற்றங்கள் அவர்கள் உடல் மற்றும் மனதில் காணப்படும். அவற்றை நாம் இப்போது பார்க்கலாம்.

1. நீங்கள் ஒருவித பதைபதைப்பு மனதுடன் காணப்பட, குழப்பம் மற்றும் கவலையை கொண்டு காரணமின்றி கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு அமர்ந்து இருப்பீர். இது எதனால் என்றால், பிரசவத்திற்கு இன்னும் குறுகிய காலமே இருக்கிறது எனும் எதிர்பார்ப்பின் ஏக்கத்தால் மட்டுமே ஆகும்.

2. விருப்பமற்ற விமர்சனத்தை கண்டு பொங்கி எழ வேண்டாம். ஆண் குழந்தை பிறந்தால் அதற்கும் பல காரண குறைகள் கூறுவார்கள். பெண் குழந்தை பிறந்தால் அதற்கும் ஏதாவது குறைகளை சொல்லும் உலகமிது. அப்படி இருக்க, கருவிலிருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்னும் எதிர்ப்பார்ப்பு குழப்பத்தை எல்லோரும் ஏற்படுத்தாமலா இருப்பார்கள். 

3. உங்கள் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் தேவையற்ற மன குழப்பத்துடன் நீங்கள் இருக்கக்கூடும்.

4. இந்த மாத முடிவில் கர்ப்பத்திற்கு முழுமையாக உங்களை தயார்ப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

உடலில் ஏற்படும் மாற்றம் என்ன?

உங்கள் பின்புற பகுதி குண்டாக இருக்கிறது. உங்கள் உடலின் மற்ற உறுப்புக்களும் விரைவில் பல வித மாற்றத்தை சந்திக்கிறது. இவை எல்லாம் சந்தோஷத்தை தரக்கூடிய தருணமில்லை என்றாலும், பிறக்க போகும் குழந்தையை கண்டு கறையக்கூடும் கவலை என்பதை நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.

1. உங்களுக்கு சளிப்பிடித்து காணப்பட, ஒருவித எரிச்சலையும் ஏற்படுத்த கூடும். இதற்கு காரணம், கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு நிலையிலும் உங்கள் குழந்தை தன் அசைவுகளை மாற்றிக்கொண்டு வருவதாலே ஆகும்.

2. திரவ நிலை என்பது உடலில் அதிகரித்து காணப்பட, உங்கள் கை மற்றும் கால்கள் வீங்கியும் காணப்படும்.

3. உங்களுக்கு மூச்சு தொந்தரவு அடிக்கடி ஏற்பட, இதற்கு காரணமாக நுரையீரல் மற்றும் இடைப்படல சுருக்கம் அமைகிறது.

4. நெஞ்செரிச்சல் மற்றும் மலச்சிக்கல் ஏற்பட, இதனால் எரிச்சலூட்டும் விதத்தில் உங்கள் செயல்கள் இருக்கக்கூடும்.

5. அவ்வப்போது தலைசுற்றலும் உங்களுக்கு ஏற்படும்.

6. உங்கள் மார்பக காம்புகளில் சீம்பால் வடிய, நீங்கள் பால் கொடுக்கவும் தயாராவீர்கள்.

7. எட்டாவது மாதத்தின் முடிவில் கருவிலிருக்கும் பனிக்குட திரவம் என்பது குறைந்து காணப்படும். எப்போது கசிவு ஏற்படுவது என்பதை நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். பனிக்குட நீர் என்பது சிறுநீரைவிட வித்தியாசமாக காணப்படக்கூடும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon