Link copied!
Sign in / Sign up
2
Shares

கர்ப்ப கால வயிற்று போக்கா? தீர்வு என்ன?

கர்ப்ப காலத்தில் கருவில் குழந்தைகள் தங்குவது மட்டுமே இயல்பானது அல்ல. குமட்டல், வாந்தி. மலச்சிக்கல், வயிற்று போக்கு போன்றவையும் கர்ப்பிணிகளுக்கு ஏற்படுவது இயல்பான விஷயம் தான். இதற்கு காரணம், ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றமும், உணவு முறை மற்றும் மனதளவில் ஏற்படும் மாற்றங்களே ஆகும். 

எதனால் உண்டாகிறது?

ஒரு நாளைக்கு 3 அல்லது பல முறை இந்த பிரச்சனை கர்ப்பிணிகளுக்கு காணப்படுவது இயல்பு. ஆனால், இதற்கான காரணிகளாக ஒரு சில விஷயங்கள் அமைகிறது. அவை,

1. வைரஸ்

2. பாக்டீரியா

3. வயிற்றில் காய்ச்சல்

4. குடல் ஒட்டுண்ணிகள்

5. ஒவ்வாத உணவால் நச்சு சேர்தல்

6. எடுத்துக்கொள்ளும் மருந்துகள்

மற்ற சில பொதுவான காரணங்கள்:
உணவு முறை மாற்றம்:

கர்ப்பிணிகள் ஒரு சில உணவை தான் சாப்பிட வேண்டுமென மருத்துவர்கள் பரிந்துரை செய்ய, அந்த உணவுகளை திடீரென எடுத்துக்கொள்ளும் அவர்கள் உடல் வயிற்று போக்குக்கு காரணமாக அமைகிறது.

புதிய உணவு அழற்சி:

கர்ப்பிணிகள் எடுத்துக்கொள்ள முயலும் புதிய உணவுகளை அவர்கள் உடல் நிலை ஏற்றுக்கொள்வதில்லை. இதனால் வயிற்று பிரச்சனை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

கர்ப்ப கால வைட்டமின்கள்:

ஒரு சில வைட்டமின்கள் உங்கள் குழந்தைக்கு தேவைப்பட, இருப்பினும் உங்கள் வயிறு அதை ஏற்றுக்கொள்ள தயங்கும்.

ஹார்மோன் மாற்றம்:

நீங்கள் உண்ணும் உணவு செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்த, இதனால் மலச்சிக்கல் மற்றும் வயிற்று போக்கு பிரச்சனை ஏற்படக்கூடும்.

என்ன செய்ய வேண்டும்?
நேரம் தாருங்கள்:

1. ஒரு சில நாளில் இந்த பிரச்சனை என்பது குறையக்கூடும். நீங்கள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம்.

2. நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளால் வயிற்றுபோக்கு இருப்பது போல் உங்களுக்கு தோன்றினால், மருத்துவரிடம் ஆலோசனை பெற்று அதன்பின்னர் தொடரலாமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்யுங்கள்.

3. மூன்று நாட்கள் கழித்தும் இந்த வயிற்று போக்கு பிரச்சனை இருக்குமெனில் மருத்துவரிடம் முறையான பரிசோதனைக்கு செல்ல வேண்டியது அவசியம்.

4. சிக்கல் தரும் உணவான அதிக கொழுப்பு கொண்ட உணவுகள், வறுத்த உணவுகள், காரமான உணவுகள், பால் சம்பந்தப்பட்ட உணவுகளையும், அதிகம் நார்ச்சத்து அடங்கிய உணவையும் தவிர்ப்பது நல்லது.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon