Link copied!
Sign in / Sign up
0
Shares

சுவையான வெள்ளரிக்காய் கூட்டுக்கறி செய்வது எப்படி?

வெள்ளரிக்காய் என்பது வெயிலில் வாடும் உடலுக்கு ஏற்றது என்பதால் அனைவரும் மசாலா தூள் தூவி சாப்பிட்டு டேஸ்ட்டில் மனம் மயங்குவது இயல்பான விஷயம். வெறும் வாயில் சாப்பிட மட்டும் தான் வெள்ளரிக்காயா? என கேட்கலாம். இல்லை,  இந்த வெள்ளரிக்காயை உணவோடு எப்படி நாம் சேர்த்து கொள்வது என்பதை தான் நாம் இப்போது பார்க்க போகிறோம். இந்த வெள்ளரிக்காய் கூட்டு ருசியாகவும், எளிதில் செய்யக்கூடிய ஒன்றாகவும் அமைகிறது.  

எப்படி செய்வது?
தேவையான பொருட்கள்:

பெரிய வெங்காயம் - 1

தக்காளி - 1 அல்லது 2

பச்சை மிளகாய் - 2 அல்லது 3 (காரத்திற்கு ஏற்ப)

பாசிப்பருப்பு  - 25 கிராம் (அரைக்க)

மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்

வெள்ளரிக்காய் - 2

தண்ணீர் - 1 1/2 கப்

எண்ணெய் - 1 ஸ்பூன்

கடுகு - 1 ஸ்பூன்

சீரகம் - 1/2 ஸ்பூன்

பெருங்காயம் - 1 ஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

உப்பு- தேவைக்கேற்ப

செய்முறை நேரம் - 15 நிமிடங்கள்

எத்தனை பேர் உண்ணலாம் - 4

செய்முறை:

1. ஒரு குக்கரில் கழுவி வைத்த பாசிப்பருப்பு, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், வெள்ளரிக்காய் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து தண்ணீரையும் சேர்த்து வைத்து, குக்கரில் 3 விசில் வந்ததும் இறக்கவும்.

2. பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும்.

3. அதன்பிறகு, எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்து அந்த வெள்ளரி கூட்டுடன் சேர்க்கவும்.

4. நீங்கள் செய்த கூட்டின் சுவையை இன்னும் கூடுதலாக்க தாளிப்பதற்கு முன் சிறிதளவு துருவிய தேங்காய் சேர்க்கலாம்.

5.அவ்வளவு தான் சுவையான வெள்ளரிக்காய் கூட்டு தயார்.

இந்த வெள்ளரிக்காய் கூட்டை எல்லா மாத கர்ப்பிணிகளும் செய்து சாப்பிட இதன் சுவை அப்படித்தான் இருக்கும்! இந்த கூட்டை எல்லா மாத குழந்தைகளுக்கு கொடுத்து மகிழலாம். இந்த உணவில் குறைவான கலோரியே காணப்படுகிறது. 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon