Link copied!
Sign in / Sign up
2
Shares

தட்டைப்பயிறு இட்லி செய்வது எப்படி?

இந்த தட்டை பயிறு இட்லி சத்தும், சுவையும் நிறைந்த ஒரு புது வகை இட்லி ஆகும். இந்த இட்லியை வேர்க்கடலை அல்லது கொள்ளு சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் பிரமாதமாக இருக்கும்.இந்த உணவை எல்லா மாத கர்ப்பிணி பெண்களும் சாப்பிடலாம். அதுபோல்  12 முதல் 24 மாத குழந்தை மற்றும் 24 முதல் 36 மாத குழந்தைக்கும் நாம் கொடுக்கலாம். இந்த உணவில் குறைந்த கலோரி மற்றும் அதிகமான புரதம் காணப்படுகிறது. 

தேவையான பொருட்கள்:

ஊறவைத்த தட்டைப்பயிறு - 1 1/2  கப்

கேரட் துருவல் - அரை கப்

வெங்காயம் - 2

பச்சை மிளகாய் - 2

இஞ்சி துருவல் - 2 தேக்கரண்டி

கொத்தமல்லி - கைப்பிடி அளவு

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

செய்முறை நேரம் - 15 நிமிடங்கள்

எத்தனை பேர் உண்ணலாம் - 4

செய்முறை:

1. எட்டு மணி நேரம் ஊற வைத்த தட்டைப்பயிரை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்து கொள்ளவும்.

2. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் இஞ்சி சேர்த்து பச்சை வாடை போக வதக்க வேண்டும். 

3. பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து மீண்டும் வதக்கவும். 

4. அதன்பிறகு துருவிய கேரட்டை வதக்கவும். 

5. அத்துடன் கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். 

6. இக்கலவை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்த மாவுடன் சேர்த்து நன்கு கலக்கி இட்லி தட்டில் ஊற்றி 10 நிமிடம் வேக வைத்து இறக்கவும்.

7. அவ்வளவு தான் சுவையான தட்டை பயிறு இட்லி இதோ தயார்.

 

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon