Link copied!
Sign in / Sign up
51
Shares

காப்பர்-டி போடுவதற்கு முன்னால் தெரிந்து கொள்ள வேண்டியவை

இரு குழந்தைகளுக்கு இடையே இடைவெளி விட நினைக்கும் பெற்றோர்களின் ஒரு தீர்வாக இருப்பது காப்பர்-டி எனும் கருத்தடை சாதனம். இதை போதுமான மருத்துவ ஆலோசனையோடு பொருத்தி கொள்வதன் மூலம் குறிப்பிட்ட காலத்திற்கு கருத்தரிப்பதை தவிர்க்கலாம். காப்பர்-டியை பெண்களின் கருப்பையின் வாய்ப்பகுதியில் செலுத்துவார்கள். இதில் இருக்கும் தாமிரம் விந்தணுக்களை கருப்பையில் நுழைய விடாமல் தடுக்கிறது. இங்கு காப்பர்-டி போடுவதற்கு முன்னால் தெரிந்து கொள்ள வேண்டியவற்றை பற்றி பார்க்கலாம். 

1 காப்பர்-டி பொருத்துவதற்கு முன் கவனத்தில் கொள்ள வேண்டியவை

1 காப்பர்-டி அணிவதற்கான வயது சரியா என ஆலோசனை பெற வேண்டும்.

2 நீங்கள் காப்பர்-டி அணிவது இது முதல் முறையா அல்லது எத்தனையாவது முறை என்பதை தெரிவிக்க வேண்டும்.

3 பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்ட 10 நாட்களுக்குள் இதை பொறுத்த வேண்டும்.

4 குழந்தை பெறாதவர்கள் காப்பர்-டி அணிய கூடாது. இது கருப்பையில் இரணத்தை ஏற்படுத்தி, மீண்டும் குழந்தை உருவாவதற்கான வாய்ப்பை குறைத்து விடும்.

5 இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருப்பார்வர்கள் காப்பர்-டி பொருத்தி கொள்ளலாம், மற்றவர்கள் மருத்துவத்தின் ஆலோசனையை அணுக வேண்டும்.

 2 காப்பர்-டி பொருத்திய பின் கவனத்தில் கொள்ள வேண்டியவை

 1 காப்பர்-டி பொருத்தியவர்கள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கட்டாயம் மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.

2 காப்பர்-டி பொருத்திய உடன் அதிக இரத்தப்போக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் உடலுறவில் வலி போன்றவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

3 காப்பர்-டி போட்டும் கர்ப்பம் தரித்தால், குழந்தை கருக்குழாயில் தங்கிவிடும் அபாயம் இருப்பதால் உடனடியாக அகற்றி விட வேண்டும். இல்லையெனில் நோய் தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

4 காப்பர்-டியில் தாமிரம் இருக்கும் வரையே பயன் தரும். தாமிரம் இல்லாமல் போனால், கருமுட்டை கருப்பையை துளைத்து கொண்டு உட்செல்லும் அபாயம் ஏற்படும். அதன் பின் அகற்றுவது கடினமான ஒன்று.

3 காப்பர்-டி அகற்றுதல்

1 காப்பர்-டி அதன் நிலையில் இருந்து நகர்ந்து இருந்தால், ஸ்கேன் மற்றும் x ரே பரிசோதனை செய்த பின்னரே அகற்ற முடியும்.

2 காப்பர்-டி கருப்பையின் உட்பகுதியில் இருந்தால், மயக்க மருந்துகள் கொடுத்தே அதை அகற்ற முடியும். இல்லையெனில், தாங்க முடியாத வலி ஏற்பட்டு உயிர் பிரியும் நிலையை ஏற்படுத்தும்.

3 கருப்பையினுள் சீழ் உண்டாகி, நோய் தொற்றுகளை ஏற்படுத்தலாம். இதனால் அதிக வலி, வயிற்று போக்கு, வெள்ளைபடுதல், துர்நாற்றம் போன்றவை ஏற்படும்.

4 காப்பர்-டியை அகற்ற முடியாத நிலை ஏற்பட்டால், எண்டோஸ்க்கோப்பி முறையில் பரிசோதித்து அறுவை சிகிச்சை செய்தே அகற்ற முடியும்.

4 தவிர்க்க வேண்டியவர்கள்

1 திருமணமாகதவர்களும், நோய்வாய்பட்டவர்களும் காப்பர்-டியை பொறுத்தக் கூடாது.

2 கருப்பையில் புண், கட்டிகள், கருப்பையில் பிரச்சனை, வெள்ளைபடுதல், அதிக சர்க்கரை, கொழுப்பு மட்டும் இருதய பிரச்சனை இருப்பவர்கள் இதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

3 காப்பர்-டியில் இருக்கும் தாமிரம் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துவதால், மாதவிடாய் சுழற்சியில் மாறுபாடு அல்லது அடுத்த குழந்தை கருத்தரிக்காமல் போவது போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon