Link copied!
Sign in / Sign up
1
Shares

நீங்கள் மட்டும் தனிமையில் இல்லையென தாய்மைக்கு புரியவைக்கும் 7 தாய்மார்கள்...

கவலை, மகிழ்ச்சி, நிச்சயமற்ற தன்மை, மகிழ்ச்சி, சோர்வு, நம்பிக்கை, சந்தேகம் மற்றும் கோபம்-இந்த உணர்ச்சிகள் தாய்மைக்குள் நுழைந்து கொள்வதே தாயின் அறிகுறிகளாகும். இது சுலபமான வேலையில்லைதான், ஆனால் இவ்வாறு இருப்பது நீங்கள் மட்டுமில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

எனவே, நீங்கள் உற்சாகத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கு ஒரு சிறிய 'உந்துவிசை' தேவைப்பட்டால், அடுத்த சவாலை உங்கள் பிள்ளை உங்கள் மீது தூக்கி எறியலாம், இங்கே உண்மையான தாய்மார்களால் அளிக்கப்பட்ட 7 ஒப்புதல் வாக்குமூலங்கள் உள்ளன இதை பார்த்து நீங்கள் சற்று ஆறுதலடையலாம்.

1. சாக்ஸ் மற்றும் சிட்டி

"வேலைக்கு செல்லும்போது எனது பேண்ட் பாக்கெட்டில் ஒரு சாக்ஸ் சிக்கியிருந்தது.என் வீட்டிற்கு திரும்பும் வரை அதை நான் அறியவில்லை."

2. அவர் சொன்னார், அவர் சொன்னார்

"நான் சில நேரங்களில் என் குழந்தை எதாவது தவறாக பேசிவிட்டால் அது கேட்காததுபோல் இருப்பேன், ஏனெனில் அவர்களை கண்டிக்கும் மனநிலையில் நான் இருப்பதில்லை."

3. குழந்தைகளிடையே ஒப்பீடு

"என் இளைய மகள் கோபப்பட்டு எந்த பொருளையாவது தூக்கி எறிந்தால், அவளை நோக்கி உன்னை விட உன் சகோதரி மேல் என்று கத்துவேன்."

4. குழந்தைகளுக்காக எது வேண்டுமென்றாலும் செய்வேன்(ஆனால் செய்யமாட்டேன்)

"சிலசமயம் நான் உண்ணும் உணவு என் குழந்தைக்கு பிடிக்கவில்லை என்றாலும் நான் எனக்கு பிடித்ததை சாப்பிடுவேன்."

5. சுமையை பகிர்தல்

"எனது கணவர் வீட்டிலிருக்கும் சமயத்தில் நான் கழிவறையில் அதிக நேரத்தை செலவிடுவேன். எனவே அவர் குழந்தைகளை சிறிது நேரம் பார்த்துக்கொள்வார்."

6. குழந்தையின் உடையை பயன்படுத்துதல்

"நான் ஒருமுறை சூப்பர்மார்க்கெட்டில் என் கையில் தும்மினேன் அப்போது கையில் பேப்பர் இல்லாததால் என் குழந்தையின் துணியின் பின்புறம் தடவிவிட்டேன். ஏனென்றால் அவள் அங்கு கைகளை வைக்கப்போவதில்லை. ஆனால், அந்த துணியை விரைவில் துவைத்துவிட வேண்டும்."

7. கோட் பிரவுன் நிலை

"நான் பணியில் உயர்மட்ட நிர்வாகியாக இருக்கிறேன், என் மடியிலியே என் இரண்டு வயது குழந்தை மலம் கழிந்துவிட்டது."

"நிஜ வாழ்க்கை அம்மாக்களின் இந்த போராட்டங்கள் உங்கள் முகத்தில் சிரிப்பை வர வைத்திருக்கும், ஏனெனில் இங்கு நீங்கள் மட்டும் இவற்றை அனுபவிக்கவில்லை. தாயாய் இருப்பது கடினமாய் இருந்தாலும் அது மிகவும் அழகான உணர்வாகும், வேலை, சுமைகள் இருந்தாலும் உங்களால் முடிந்ததை சிறப்பாக செய்கிறீர்கள் என்று பெருமைப்படுங்கள்."

உங்களுக்கு ஏதேனும் தனிப்பட்ட அனுபவம் உள்ளதா? எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே...

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon