Link copied!
Sign in / Sign up
2
Shares

மாறி வரும் குழந்தைகள் ரசனை...

இந்த உலகத்தில் சின்ன சின்ன விஷயங்களையும் நீங்கள் ஆராய்ந்தால் நாம் முன்னோக்கி சென்றுக்கொண்டிருப்பதை உங்களால் உணர முடியும். அது தான் நவீன வளர்ச்சி என கூட சொல்லப்படுகிறது. இன்றைய சமுதாயத்தில் வளர்ந்துவரும் குழந்தைகள் மிகவும் புத்திசாலி என்பது அவர்கள் கேட்கும் கேள்வியிலும் அதற்கான பதிலை நாம் தேடி அலையும் போதும் நன்றாகவே தெரிகிறது. நாங்கள் குழந்தையாக இருக்கும்போது இப்படி எல்லாம் இருந்ததில்லை என்பது அறிவியல் ஆய்வின் உண்மை முடிவும் கூட. அப்படி இருக்க குழந்தைகள் பார்த்து ரசித்த கார்ட்டூன்கள் மற்றும் நாடகங்கள் இன்று எப்படி இருக்கிறது என்பதை நாம் பார்க்கலாம் வாருங்கள்.

சக்க லக்க பூம் பூம்:

இது மிகவும் பட்டையை கிளப்பிய குழந்தைகளுக்கான நாடகம் என சொல்லும்போதே நாமும் பென்சிலை எடுத்துக்கொண்டு சுற்றிய நாட்கள் நினைவிற்கு வருகிறது. அட ஆமாங்க, இந்த கார்டூனில் வரும் நம்ம மாஸ்டர் ஹீரோ எதை எல்லாம் வரைகிறாரோ அதுவெல்லாம் உயிர்த்தெழும். இந்த கதையின் தாக்கத்தால் முன்பு கவரப்படாத குழந்தைகளே இல்லை என கூட கூறலாம். ஒருசிலர் பென்சிலை எடுத்துக்கொண்டு பக்கம் பக்கமாக வரைந்து அது எப்போது உயிர்த்தெழும் என கூட கனவு கண்டதுண்டு. அதில் நானும் ஒருவர் தான். சீக்ரெட்! யாருகிட்டயும் சொல்லிடாதீங்க ப்ளீஸ்.

சக்திமான்:

இந்த சீரியல் ஒளிபரப்பிய புதிதில் நம்மை சக்திமான் காப்பாற்ற வருவார் என நம்பியவர்கள் எத்தனையோ பேர். அத்துடன் நாம் மெல்லும் பப்புல் கம்மின் உள்ளே சக்திமான் ஸ்டிக்கரை வைத்து வியாபாரம் செய்த காலம் அது. இந்த சக்திமான் உடுத்தி வரும் கண் கவர் ஆடையை வாங்கவே தீபாவளி, பொங்கலின் போது எத்தனையோ கடைகள் ஏறி இறங்கினோம். இன்று அதை தாண்டிய நவீன வளர்ச்சியால் இவரை கண்டால் நமக்கு சிரிப்பு தான் வரும்.

பாப்பாய்:

நம்ம ஹீரோவோட ஆள வில்லன் கடத்திட்டு போயிட்டா உடனே கீரையை சாப்பிட்டு வில்லன பந்தாடுவாரு. இந்த கார்ட்டூன் முன்பு பட்டையை கிளப்பிய அருமையான கார்ட்டூன் என சொல்லலாம். இதில் வரும் பாப்பாய் கேரக்டர் மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஒன்றும் கூட.

டாம் & ஜெர்ரி:

எலிக்கும் பூனைக்கும் ஆகாது என்பார்கள். ஆனால், இந்த டாம் & ஜெர்ரியை பார்த்தால் பூனைக்கே எலிமீது பயம் வரலாம். அவ்வளவு சுவாரஸ்யமான ஒரு தொடர் தான் இந்த டாம் & ஜெர்ரி. குழந்தைகள் வாங்கும் பேக்கில் இவர்கள் இல்லாமல் இருப்பது மிகவும் அரிது எனவும் சொல்லலாம்.

டிமோன் & பூம்பா:

ஜெட்டெக்ஸ் எனப்படும் சேனலில் ஒளிப்பரப்பப்பட்ட இந்த கார்ட்டூன் குழந்தைகளை மிகவும் கவர்ந்த ஒன்று என்பதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம். இதில் விலங்குகளுக்கு உயிர்க்கொடுத்து பேச வைத்த டீம், நகைச்சுவையில் பட்டையை கிளப்பியது என சொல்லும்போதே அப்போது சிரிப்பு வந்தது.

பவர் ரேஞ்சர்ஸ்:

இந்த சீரியல் பார்ப்பதற்காக எவ்வளவோ சித்து வேலைகளை நம்ம செல்ல குட்டிகள் பன்னுவார்கள். அதில் ஒன்று தான் ரிமோட்டை யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைப்பது. இந்த சீரியல் பற்றி சொல்ல போனால் குழந்தைகளை மட்டும் கவராமல் பள்ளி படிக்கும் மாணவர்களை கூட வெகுவாக ஈர்த்தது. அதனால் இந்த சீரியலில் பல பாகங்கள் வந்தது. மிஸ்டிக் போர்ஸ், S.P.D, டைனோ தண்டர் என பட்டையை கிளப்ப பலருக்கு மிகவும் பிடித்த ஒரு கேரக்டர் ரெட் ரேஞ்சர் தான். ஏனெனில், அவனுக்கு தான் சக்தி அதிகம். எனக்கு பிடித்ததும் ரெட் ரேஞ்சர் தாங்க.

டிராகன் பூஸ்டர்:

டிராகனை கொண்டு விளையாட்டுக்கள் நடத்தப்பட, நம் ஹீரோவின் டிராகனுக்கு ஒருவித சக்தி இருக்கும். உடனே வில்லன்கள் போட்டி போட்டுக்கொண்டு ஹீரோவின் டிராகனை அபகரிக்க முயல, அடுத்து நடக்கும் ரேஸில் சீரியஸாக பங்கேற்று நம்ம ஹீரோ தன் சக்தியை நிரூபிப்பார். இதுவும் ஒரு அற்புதமான இடத்தை பிடித்த சீரியல் என்பதோடு, மீண்டும் மறு ஒளிப்பரப்பு செய்யப்பட்டும் வருகிறது.

சோட்டா பீம்:

குழந்தைகள் தூங்க தொடங்கினால் தன் சொந்த ஊரையே மறந்து டோலாக்பூரில் வாழ தொடங்குவர். அப்போது பீம் ஒரு கடாயுதத்துடன் வந்து எதிரிகளை பந்தாட, நம் தூக்கத்தில் அம்மா, அப்பாவை எட்டி உதைத்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. அடி வாங்கிய என் அன்னைக்கு தான் தெரியும்ங்க...

சிஞ்சான்:

ஆஹா! இவரை எப்படி நாம் மறந்தோம். சமீப காலமாக பட்டையை கிளப்பும் ஒரு சீரியல் தான் நம்ம சிஞ்சான் என்பதில் மாற்று கருத்து ஏது. ஒரு உண்மை என்ன தெரியுமா? இந்த கார்டூனில் வரும் சிஞ்சானுக்கு குரல் கொடுத்தது ஒரு இளைஞராம். நம்ப முடியலைல...என்னாலும் தான் நம்ப முடியவில்லை. அதுவும் சிஞ்சான் குரலை கேட்டால் நமக்கே சிரிப்பு வந்துவிடுகிறது. அப்புறம் நம் குழந்தைகள் மட்டும் ரசிக்காமலா இருப்பார்கள். எத்தனை கேரக்டர் இருந்தாலும் எல்லா குழந்தைக்கும் பிடித்த கேரக்டர் நம்ம சிஞ்சான் மற்றும் ஹீமாவாரி தாங்க.

நேற்று சக்திமான்! இன்று சிஞ்சான்! நாளை யாரோ!

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon