Link copied!
Sign in / Sign up
4
Shares

தவிர்க்க முடியாத நிலையில் தந்தைகள் குழந்தைகளுக்கு பால் தருவது எப்படி?

குழந்தை எப்போதும் தாயிடமே முதன் முதலில் மிகவும் நெருங்கி பழக ஆசைப்படும். அதற்கு காரணம், தாய்ப்பால் தருவதும் கூட அழகிய தருணமாக அமைகிறது. ஒரு சில தந்தைக்கு இதுவே பொறாமையை ஏற்படுத்த அதிக வாய்ப்பிருக்கிறது. தாய்மார்கள் குழந்தைகளுடன் இல்லாத சமயத்தில் தந்தைகள் தான் குழந்தைகளின் பசியை போக்க வேண்டியதாக இருக்கிறது. ஆனால், அது அவ்வளவு எளிதல்ல. தாயின் முகத்தை மட்டுமே பார்த்து பழக்கப்படும் குழந்தை, அவள் வழியாகவே தந்தையிடம் பாசம் கொள்ள தொடங்குகிறது. அப்படி இருக்க, அழவும் அதிக வாய்ப்பிருக்கிறது.

அப்பா எனும் உறவு, குழந்தைகள் வாழ்வில் அவர்களுடைய கடமையை நிறைவேற்ற வேண்டியதில் அதிக பங்கு நிறைந்த ஒரு உறவாகும். ஒரு குழந்தையின் வளர்ப்பில் தந்தையின் பங்கு இருப்பதால் அக்குழந்தை அதிர்ஷ்டசாலியாகவும் ஆகிறது. தாய் எப்போதும் அன்பை தருவது போல், தந்தை நம்மிடம் கண்டிப்பை காட்டி, எது சரியான வழி என்பதை காண்பிப்பார். இப்போது தந்தைகள் குழந்தையிடம் எப்படி நெருங்கி அன்பு காட்டுவது என்பதை நாம் பார்க்கலாம்.

என்ன செய்ய வேண்டும்?

1. உங்கள் மனைவி தாய்ப்பால் தரும்போது அவருக்கு உடனிருந்து பணிவிடைகளை செய்யலாம். இதனால் நீங்களும் ஒரு அங்கம் என்பதை அக்குழந்தை புரிந்துகொள்கிறது.

2. குழந்தையை அன்னை குளிக்க வைக்கும்போது நமக்கென்ன என தந்தை இருக்காமல் குழந்தையை கொஞ்சுவது, உதவுவது போன்றவற்றை செய்யலாம்.

3. உங்கள் மனைவி சமையல் செய்யும்போது உடனிருந்து குழந்தையை கவனித்து கொள்வது குழந்தைக்கும் உங்களுக்குமான உறவை மட்டும் வலுப்படுத்தாமல், மனைவியுடனான வாழ்வையும் அழகாக்கிறது.

4. இரவில் குழந்தைகளுக்கு தேவையான எல்லா உதவிகளையும் மனைவியுடன் சேர்ந்து நீங்களும் செய்யலாம். 

5. தாய்ப்பால் தரும் தாய்மார்களுக்கு பசி என்பது அதிகமெடுக்கும். அப்படி இருக்க தண்ணீர், காய்கறிகள், ஜூஸ் போன்றவற்றை அவர்களுக்கு கொடுப்பது மிகவும் சிறப்பான விஷயம்.

என்ன நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும்?

1. புதிதாக தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் ஒரு சில விஷயத்தை மறந்துவிடக்கூடும். அவர்கள் மறந்தாலும் நீங்கள் நினைவுபடுத்த வேண்டியது மிகவும் முக்கியம். ஒரு சில குழந்தைக்கு, ஒரு நாளைக்கு 8 முதல் 12 முறை தாய்ப்பால் கொடுக்கலாம். இதை நீங்கள் நினைவுப்படுத்தலாம்.

2. முதன்முறை தாய்ப்பால் தரும்போது குழந்தைகள் உடனடியாக ஏற்றுக்கொள்வதில்லை. அப்போது மனைவிக்கு துணையாக நீங்கள் இருக்க வேண்டியது அவசியம்.

3. எப்போதும் அன்னையை விட தந்தைக்கே குழந்தையிடம் மிகவும் நெருங்கி பாசத்தை வெளிப்படுத்த வாய்ப்பு இருக்கிறது. ஆனால், அது நாம் பயன்படுத்திக்கொள்ளும் முறை பொறுத்தே அமைகிறது.

4. அதேபோல் தாய்ப்பாலை நிறுத்தி குழந்தைகளுக்கு புட்டி பால் தேர்ந்தெடுக்க, அப்போதும் நீங்கள் தேவையான பணிவிடைகளை அவர்களுக்கு செய்யலாம்.

 

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

Recently, we launched a baby-safe, natural and toxin-free floor cleaner. Recommended by moms and doctors all over India, this floor-cleaner liquid gets rid of germs and stains without adding harmful toxins to the floor. Click here to buy it and let us know if you liked it.

Stay tuned for our future product launches - we plan to launch a range of homecare products that will keep your little explorer healthy, safe and happy!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon