Link copied!
Sign in / Sign up
4
Shares

செட்டிநாடு இறால் குழம்பு செய்வது எப்படி?

இறால் குழம்பு என்றாலே அசைவ ஆசை இல்லாதவரும் ஆவலுடன் இருக்க செய்வர். அதுவும் செட்டிநாடு முறையில் ஒரு இறால் குழம்பு என்றால் யாருக்கும் தான் வேண்டுமென தோன்றாது. அட ஆமாங்க, செட்டிநாடு இறால் குழம்பு எப்படி செய்வது என்பதை தான் நாம் இப்போது பார்க்க போகிறோம்.

தேவையான பொருட்கள்:

இறால் - 400 கிராம் 

மிளகு, சீரகம், கடுகு, கசகசா, மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் 

வெங்காயம், தக்காளி - 1 

அரைத்த பூண்டு - 5 பல் 

பச்சை மிளகாய் - 5 

துருவிய தேங்காய் - 1/2 கப் 

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை நேரம் - 20 நிமிடங்கள்

எத்தனை பேர் உண்ணலாம் - 4

செய்முறை:

1. தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி, இறாலை சுத்தம் செய்து வைக்கவும்.

2. ஒரு வாணலியில் கடுகு, மிளகு, சீரகம், கசகசா சேர்த்து, 3 நிமிடம் வறுத்து, சிறிது எண்ணெய் ஊற்றி தேங்காயை போட்டு வறுக்கவும்.

3. வறுத்த பொருட்களை நன்றாக ஆற வைத்து, அதனுடன் மிளகாயை சேர்த்து அரைத்து கொள்ளவும்.

4. மற்றொரு வாணலியில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, அதில் தக்காளி, பூண்டு மற்றும் உப்பு சேர்த்து, 4 நிமிடம் வரை வதக்கவும்.

5. தக்காளி வதங்கியதும், அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை போட்டு, 5 நிமிடம் வதக்கிய பின், அதில் அரைத்த தேங்காய் மசாலா கலவையை சேர்த்து 1 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

6. மசாலா பச்சை வாசனை போனவுடன், அதில் இறாலை போட்டு, மிதமான தீயில் 5 நிமிடம் வைத்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon