Link copied!
Sign in / Sign up
21
Shares

செட்டிநாடு கேழ்வரகு அடை: செய்யும் முறை பற்றி நீர் அறிவீரா?

உடலுக்கு அதிக ஆரோக்கியத்தை அள்ளித்தரும் தானியங்களில் ஒன்று கேழ்வரகு-ராகி. இந்த ராகியைக் கொண்டு செய்யும் உணவுகளை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ணலாம்; குழந்தைகளுக்கு ராகி மாவு கொண்டு செய்த கூழைக் கொடுக்கலாம், இது குழந்தையின் வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றது. இதே வகையில் தாய்மார்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு உணவையே, கேழ்வரகு கண்டு செய்த முக்கிய உணவை குறித்தே இங்கு பார்க்க உள்ளோம்! அந்த உணவு என்ன என்று பதிப்பை படித்தறிவோம்.!

தேவையானவை

கேழ்வரகு மாவு - 2 கப், பெருங்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி, சீரகம் - 1 தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் - 3 அல்லது 4, வேர்க்கடலை - 2 மேஜைக்கரண்டி (ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளவும்), கறிவேப்பிலை – சிறிதளவு, கடுகு - 1 தேக்கரண்டி, பெரிய வெங்காயம் - 1, உப்பு - 1 தேக்கரண்டி அல்லது தேவைக்கேற்ப, எண்ணெய் - 4 அல்லது 5 தேக்கரண்டி.

செய்முறை

1. முதலில் வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, மிளகாயை சிறு துண்டுகளாக கிள்ளி வைத்துக் கொள்ளவும்

2. ஒரு பாத்திரத்தில், கேழ்வரகு மாவைப்போட்டு அதிலே நறுக்கிய வெங்காயம், உப்பு, சீரகம், மிளகாய்த் துண்டுகள், பொடித்த வேர்க்கடலை போன்றவற்றை சேர்த்து கலந்து வைக்கவும்

3. ஒரு வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து, எண்ணெய் காய்ந்ததும் அதிலே கடுகு சேர்த்து, அது வெடிக்க ஆரம்பித்ததும் உளுத்தம் பருப்பை சேர்த்து பொன்னிறம் வரும்வரை வறுக்கவும்

4. கறிவேப்பிலை, பெருங்காய்த்தூள் போன்றவற்றை சேர்த்து தாளித்து, கேழ்வரகு மாவில் சேர்க்கவம்; பின் அதில், தேவையான அளவு நீரைத் தெளித்து, சப்பாத்தி மாவை விட சற்று தளர்வாக இருக்குமாறு பிசையவும்

5. அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, சிறிதளவு எண்ணெய் தேய்த்து பிசைந்து வைத்த மாவை அடையை போல் செய்து, தோசைக்கல்லில் போட்டு, தேவையான அளவு எண்ணெயை அடை மேல் தெளித்து, நன்றாக வெந்ததும் எடுத்து விடவும் 

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
100%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon