Link copied!
Sign in / Sign up
41
Shares

சிசேரியனுக்கு பின் தொப்பையை குறைக்கும் 5 வழிகள்

கர்ப்பகாலத்தின் போது உங்கள் உடலில் பல மாற்றங்கள் நிகழ்வதை உணர்வீர்கள். ஆனால் பெரும்பாலும் உங்கள் கண்ணுக்கு தெரியக்கூடிய ஒன்று உங்கள் வயிற்றின் அளவு பெரிதாவதுதான். இது விரைவில் அதிகமாகி விட்டாலும் இது குறைவதற்கு அதிக காலம் தேவைப்படும். புதிய அம்மாக்கள் வெறுப்பதும் இதைதான். குறிப்பாக குழந்தை அறுவை சிகிச்சை பின் பிறந்திருந்தால், அவர்கள் உடனே தங்கள் எடையை குறைக்க முடியாது. இங்கு சிசேரியனுக்கு பின் தொப்பையை குறைக்கும் 5 வழிகளை பார்க்கலாம்.

1 எலுமிச்சை தண்ணீர்

சிசேரியனுக்கு பிறகு வயிற்றை சுற்றியுள்ள சதைகளை குறைக்க எலுமிச்சை தண்ணீரை குடிப்பது அவசியமாகும். சூடான நீரை எடுத்துக்கொண்டு அதில் சிறிது எலுமிச்சை சாறையும் தேனையும் கலக்க வேண்டும். இந்த நீரை தினமும் காலையில் குடிக்க வேண்டும். சூடான நீர், எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்த கலவை உங்கள் வயிறை எளிதாக குறைக்க உதவும். இந்த மாற்றத்தை நீங்கள் கண்கூடாக பார்க்கலாம்.

2 பெல்ட் அணிதல்

சிசேரியனுக்கு பின் அணியக்கூடிய பெல்ட் வயிற்று சதையை குறைப்பதில் நன்கு உதவுகிறது. இந்த பெல்ட் வயிற்றுத் தசையில் பிணைப்பைப் ஏற்படுத்தி, வயிற்றுத் தசைகளை குறைக்க உதவுகிறது, இதன் மூலம் வயிற்று கொழுப்பு குறைவதோடு, முதுகுவலியையும் குறைக்கிறது. பிரசவத்திற்கு பிறகு வயிறு பகுதியில் இருந்து கொழுப்பு இழக்க விரும்புபவர்களுக்கு இந்த பெல்ட் பரிந்துரைக்கப்படுகிறது.

3 தண்ணீர் குடித்தல்

அதிகளவு தண்ணீர் குடிப்பது உங்கள் உடலின் நீர் மேலாண்மையை மட்டும் பராமரிப்பதில்லை, உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகளையும் குறைக்க பயன்படுகிறது. சிசேரியனுக்கு பிறகு அதிக தண்ணீர் குடிப்பது உங்கள் உடலின் நீர் மேலாண்மையை சரி செய்வதோடு அதிக உணவு உண்பதையும் தடுக்கிறது. எனவே உங்கள் வயிறை குறைக்க முதலில் செய்ய வேண்டியது அதிகளவு நீர் குடிக்க வேண்டியது தான்.

4 ஒழுங்கான உணவுமுறை

பொதுவாக பெண்களுக்கு நாளொன்றுக்கு 300 முதல் 500 வரை கலோரிகள் தேவைப்படுகிறது. சிசேரியனால் நீங்கள் உங்களின் வழக்கமான உடற்பயிற்சிகளை செய்ய இயலாது. எனவே அளவான உணவை சரியான அளவில் எடுத்துக்கொண்டு நொறுக்கு தீனிகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். சரியான உணவை எடுத்துக்கொள்வதே உங்களின் வயிற்றை குறைக்க பெரிதளவில் உதவும்.

5 சிறிய நடைப்பயிற்சி

அறுவைசிகிச்சை காரணமாக நீங்கள் கடுமையான உடற்பயிற்சியிலோ நீண்ட தூர நடைப்பயிற்சியிலோ ஈடுபட இயலாது. ஏனென்றால் உங்கள் வயிற்றையும் வயிற்றை சுற்றியுள்ள பகுதியையும் பெரிதளவில் பாதிக்கும். எனினும், காலையோ அல்லது மாலையோ அரைமணி நேரம் நடைப்பயிற்சி செய்வது அவசியம். தினசரி இதுபோன்ற சுறுசுறுப்பான நடைப்பயிற்சி உங்கள் தொப்பையை குறைக்க பெரிதும் உதவும்.

பதிப்பைத் தொடர்ந்து படித்துவரும் வாசகர்களுக்கு நன்றி!!! உங்களுக்கு எங்கள் நன்றியை தெரிவிக்கும் விதமாக நீங்கள் ஆன்லைனில், அமேசானில் வாங்கும் பொருட்களுக்கு 5% பணவிலக்கு அளிக்கிறோம்..! அதற்கு இந்த link -ஐ உபயோகப்படுத்தவும்..! அமேசானில் பொருட்கள் வாங்க பயன்படுத்த வேண்டிய link:  http://bit.ly/2lLVpTJ

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
100%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon